SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அன்பு ஸ்பரிசம்... ஆரோக்கியத்துக்கும் நல்லது

2018-05-15@ 15:16:22

நன்றி குங்குமம் டாக்டர்

நோய்த்தாக்கம் கொண்ட ஒருவரின் கைகளை அவரது அன்புக்கு உரியவர் பற்றிக் கொள்ளும்போது நோயின் தீவிரமும், உடல் வலியும் குறைகிறது. தீண்டல், ஸ்பரிசம் என்பதெல்லாம் காதலுக்கும், காமத்துக்கு மட்டுமே சொந்தமானது அல்ல. ஆத்மார்த்தமான அன்புக்கும் அதுதான் அளவுகோல். ‘நான் உனக்காக இருக்கிறேன் என்ற ஒற்றை உறுதிமொழியின் வார்த்தைகளற்ற ஒரு வெளிப்பாடுதான் தட்டிக் கொடுப்பது, கட்டியணைப்பது, தலைகோதுவது எல்லாம். வெறுமனே ஒருவரின் கரம்பற்றினாலே அதற்கு மகத்தான பலன்கள் உண்டு என்கிறது Proceedings of the National Academy of Sciences(PNAS) வெளியிட்ட சமீபத்திய ஆய்வறிக்கை ஒன்று.

ஸ்பரிசம் என்பது எந்த அளவு மனிதர்களுக்கிடையேயான ஒற்றுமை ஒத்திசைவை பிரதிபலிக்கிறது என்ற கருத்தை ஆராய விரும்பினார்கள் ஆராய்ச்சியாளர்கள். இதற்காக 23 முதல் 32 வயதுக்குட்பட்ட 22 தம்பதிகளை ஆய்வுக்கு உட்படுத்தினார்கள். 2 நிமிடம் அருகருகே தம்பதிகள் உட்கார வைக்கப்பட்டு Electroencephalograph மூலம் அவர்களின் மூளையின் செயல்பாடுகள் அளவிடப்பட்டது. தனித்தனியே வெவ்வேறு அறைகளில் வைத்தும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. கைகளில் மிதமான மின் காந்த அலைகளை செலுத்தி மீண்டும் மீண்டும் சோதித்தனர்.

‘கணவன் அல்லது மனைவியின் அருகாமையே மூளையின் ஆல்ஃபா அலைவரிசை ஒத்திசைவுத் தொடர்பை அதிகரித்ததும், ஒருவர் வலியில் இருக்கும்போது கையைப் பிடித்த நிலையில் இருந்தவரின் அலைவரிசையின் ஒத்திசைவு மேலும் அதிகரிப்பதும், அதேநேரத்தில் தம்பதிகள் பிரிந்திருந்த வேளையில் உடல் வலி அதிகமாக இருந்ததும் இந்த சோதனையில் தெரியவந்தது.

‘உளவியல்ரீதியாக மனதுக்குப் பிடித்தவரின் அருகாமை மகிழ்வைத் தரும் என்பது தெரியும். இதேபோல், நோய்த்தாக்கம் கொண்ட ஒருவரின் கைகளை அவரது அன்புக்குரியவர் பற்றிக் கொள்ளும்போது நோயின் தீவிரமும், உடல் வலியும் குறைகிறது என்பது இதன் மூலம் புரிந்தது.எனவே, யாரேனும் மன அழுத்தத்தில் இருக்கும்போதோ அல்லது நோய்வாய்ப்பட்டிருக்கும்போதோ ஆதரவாக அவரது கரம் பற்றுங்கள்.

அந்த தீண்டல் உடலுக்கும், உள்ளத்துக்கும், உறவுக்கும் நல்லது’ என்கிறார் இந்த ஆய்வை மேற்கொண்டவர்களில் ஒருவரான Pavel Goldstein.
ஆராய்ச்சியின் தலைப்புக்குத் தகுந்தாற்போல அமெரிக்காவின் University of Colorodo Boulder மற்றும் இஸ்ரேலின் University of Haifa இரண்டு பல்கலைக்கழகங்களும் இணைந்து இந்த ஆய்வை செய்திருக்கிறது என்பது இன்னும் ஒரு கூடுதல் சிறப்பம்சம்!

- என்.ஹரிஹரன்

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • modi_bahvan_bang

  வங்காளதேசம் பவன் ஆய்வகத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

 • proteststerliteissue

  சென்னையில் தமிழ்நாடு கலை இலக்கிய ஊடக செயற்பாட்டார்கள் கூட்டமைப்பு போராட்டம்

 • LibyaCarbombAttack

  லிபியாவின் பெங்காஸி நகரில் கார் குண்டு தாக்குதல்: 7 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

 • Libyacarbomb7

  லிபியாவில் நடத்தப்பட்ட கார் குண்டு தாக்குதலில் 7 பேர் உயிரிழப்பு

 • 26-05-2018

  26-05-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்