SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கோடைக்கு உகந்த உணவுகள்...

2018-05-14@ 14:22:58

கோடையில் பலரும் சந்திக்கும் பிரச்னைகளில் ஒன்று, `டீஹைட்ரேஷன்’’ எனப்படும் உடல் வறட்சி. நம்மில் பலர், இதை தடுப்பதற்கு எந்த முயற்சியும் எடுப்பதில்லை. இதை தடுக்க சில டிப்ஸ்... குழந்தைகள் மற்றும் முதியோரை இது அதிகம் பாதிக்கும். கோடையில் தளர்வான பருத்தி உடைகளை அணிவது நல்லது. அதிலும் வெள்ளை, மங்கலான நிறம் கொண்ட உடைகளை உடுத்துவது மிகவும் நல்லது. குழந்தைகளுக்கு கோடையில் அணிவதற்கென பிரத்யேகமான உடைகள் கடைகளில் கிடைக்கிறது. அவற்றை அணியலாம். வெள்ளைநிற பருத்தி உடை கோடை காலத்துக்கு ஏற்றது.
கோடையில் சூரிய ஒளி நம் உடலில் அதிகம் படுவதால், சோடியம், பொட்டாசியம் போன்றவை அடங்கிய எலெக்ட்ரோலைட்டுகள் நமக்கு தேவைப்படும்.

எலெக்ட்ரோலைட்டுகள் அதிகம் கொண்டது இளநீர். இதை அருந்துவதன் மூலம் அதை ஈடுகட்டலாம். வெயிலில் விளையாட செல்லும் குழந்தைகளுக்கு எலெக்ட்ரோலைட்டுகள் நிறைந்த இளநீரை குடிக்க கொடுப்பது நல்லது. தாய்ப்பாலுக்கு அடுத்தபடியாக இளநீர்தான் மிகவும் சுத்தமானது. இளநீரை காலையில் வெறும் வயிற்றில் அருந்தாமல், 10 மணிக்கு மேல் அருந்துவது சிறந்தது. இது, டீஹைட்ரேஷனிலிருந்து நம் உடலை காக்க உதவும்.
கோடையில் குழந்தைகளும், வயதானவர்களும் எச்சரிக்கையாக இருக்கவேண்டியது அவசியம். கோடையில் அம்மை, வியர்க்குரு, மெட்ராஸ்-ஐ எனப்படும் கண் நோய் போன்றவற்றோடு பேன் தொல்லையும் ஏற்படலாம். உடல்சூடு அதிகரித்தால், பேன்கள் பல்கி, பெருகும். எனவே, எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
 
கடைகளில் விற்கப்படும் பேக்கரி பண்டங்கள், ஜங்க் புட் ஆகியவை குழந்தைகளை சுண்டி இழுக்கும். இவற்றை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இவற்றுக்கு பதிலாக தர்பூசணி பழம் சாப்பிடலாம். தர்பூசணியில் 92 சதவீத நீர்ச்சத்து உள்ளது. இது, `டீஹைட்ரேஷன்’’ ஏற்படாமல் பாதுகாக்கும். வெள்ளரி, திராட்சை போன்றவற்றின் விதைகளிலும் பல ஊட்டச்சத்துகள் இருக்கின்றன. அவற்றையும் சாப்பிடலாம். தர்பூசணி விதைகளை ஊறளவைத்து சாப்பிடலாம். இந்த விதைகள், சிறுநீரக கோளாறுகளை நீக்கும். தர்பூசணி சாப்பிடும்போது அதன் விதைகளையும் சேர்த்து சாப்பிடுவது நல்லது. சுகாதாரமான சூழலில் விற்கப்படும் இதர பழங்களையும் வாங்கி சாப்பிடுவது ஆரோக்கியத்துக்கு நல்லது.

தக்காளி, சூட்டை தணிக்கும். எனவே, கோடையில் தக்காளி ஜூஸ் அருந்தலாம். இது நேச்சுரல் சன்ஸ்கிரீன் ஆக செயல்பட்டு சருமத்தையும் பாதுகாக்கும். வெயில் காலத்தில் லெமன் ஜூஸ் அருந்துவதும் நல்லது. இது, சிறுநீரகத்தை சுத்திகரிக்கும். உடலுக்கு புத்துணர்ச்சி தரும். சர்பத், நன்னாரி சர்பத், நுங்கு, பழக்கலவை போன்றவை உடல்சூட்டை தணிப்பவை. இவை, எலெக்ட்ரோலைட்டுகளை சமமாக வைத்துக்கொள்ள உதவும்.
பிஞ்சு வெள்ளரிக்காய் மிகவும் நல்லது. இதில், 90 சதவீதம் நீர்ச்சத்து உள்ளது. பப்பாளி, ஆரஞ்சு, சாத்துக்குடி, எலுமிச்சை பழச்சாறுகளும் நல்லது. சீரகம், வெந்தயம் போன்றவை உடல்சூடு தணிக்கும். மோர் சூட்டை தணிக்கும். தயிராக சாப்பிடாமல் அதை கடைந்து வெண்ணெயை எடுத்துவிட்டு, மோர் சாப்பிடலாம். மஞ்சளில் உள்ள `குர்குமின்’ ஆன்டி இன்பெக்‌ஷனாக செயல்படக்கூடியது. புதினா, மல்லித்தழை ஜூஸ் போன்றவையும் `டீஹைட்ரேஷன்’’ ஏற்படாமல் பாதுகாக்கும். இவை கோடையில் ஏற்படும் செரிமான கோளாறையும் சரிசெய்யும்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • tamilnaduveyilend

    தமிழகத்தை வாட்டி வதைத்த அக்னி வெயிலின் தாக்கம் இன்றுடன் நிறைவு

  • 28-05-2018

    28-05-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • Thiruvarurchariot

    உலகப்புகழ் பெற்ற ஆழித்தேரோட்டம் வெகுவிமர்சியாக தொடங்கியது..... விழாக்கோலம் பூண்டது திருவாரூர்

  • 27-05-2018

    27-05-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • modi_bahvan_bang

    வங்காளதேசம் பவன் ஆய்வகத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்