மாணவர் கூட்டமைப்பு நாளை மறுநாள் பந்த

Date: 2013-03-17 12:32:28

தமிழீழ ஆதரவு அனைத்து கல்லூரி கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சத்தியகுமார் கூறியதாவது:ராஜபக்சேவை போர் குற்றவாளியாக அறிவித்து சர்வதேச விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். இலங்கையில் புலம் பெயர்ந்த ஈழத் தமிழ் மக்களிடையே பொது வாக்கெடுப்பு நடத்தி தனி தமிழீழம் அமைத்து தர வேண்டும். ஜ.நா. சபையில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என கோரியும் மத்திய அரசை கண்டித்தும்  19ம் தேதி மாணவர்கள் சார்பில் பொது வேலை நிறுத்தம் நடத்துகிறோம். முன்னதாக 18ம் தேதி (நாளை) மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு தொடர் முழக்க போராட்டம் நடத்தப்படும். இலங்கையுடன் இந்தியா தொழில், வியாபார மற்றும் தூதரக உறவை முறித்து கொள்ள வேண்டும். அந்நாட்டை சேர்ந்த அரசியல் பிரமுகர்களோ, விளையாட்டு வீரர்களோ, சுற்றுலா பயணிகளோ இந்தியா வருவதற்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும். தமிழீழ மக்களுக்காக போராடும் மாணவர்கள் மீது எந்தவிதமான அடக்குமுறைகளையும் மேற்கொள்ள கூடாது.

i want to cheat on my husband want to cheat on my husband my husband cheated on me blog
cialis coupon codes eltrabajadordelestado.org coupons for prescription medications

Like Us on Facebook Dinkaran Daily News