வேலைக்கு சென்றவர் மாயம்
பதிவு செய்த நேரம்: 17-3-2013 10:58ஆவடி: ஆவடியை அடுத்த திருநின்றவூர் நடுகுத்தகை பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் (40). ஐசிஎப் ஊழியர். இவரது மனைவி சாமுண்டீஸ்வரி.
நேற்று முன்தினம் வேலைக்கு சென்ற வெங்கடேசன் வீட்டுக்கு வரவில்லை. விசாரித்தபோது வேலைக்கும் செல்லவில்லை என்று தெரிந்தது. இது குறித்து கொடுக்கப்பட்ட புகாரின்படி, திருநின்றவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.








