கோவையில் தொடரும் மாணவர்கள் போராட்டம்
பதிவு செய்த நேரம்: 16-3-2013 15:27கோவை: இலங்கை தமிழர் பிரச்சனையில் கோவை மாவட்டத்தின் பல பகுதிகளில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். காந்திபுரத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட சடட்டக்கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். ஒண்டிப்புதூரில் போராட்டம் நடத்திய பள்ளி மாணவர்கள் கைதாகினர். பாரதியார் பல்கலைக்கழகத்தில் மாணவர்களின் உண்ணாவிரத போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ம.தி.மு.க., தலைமை அலுவலகத்திலும் போராட்டம் நடைபெறுகிறது.









