ஜாமீனில் வந்தவர் வெட்டிக் கொலை

Date: 2013-03-16 15:21:16

சென்னை: ராணிப்பேட்டை அருகே ஜாமீனில் வந்தவர் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். கோர்ட்டில் கையெழுத்திட்டு விட்டு வீடு திரும்பிய கோவிந்தனை மர்மகும்பல் வெட்டிச் சாய்த்துள்ளது. இருசக்கர வாகனத்தில் வந்த கோவிந்தன் சாம்பசிவபுரத்தில் அரிவாளால் வெட்டப்பட்டார். மர்மகும்பல் வெட்டியதில் படுகாயமடைந்த கோவிந்தன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கோவிந்தனுடன் வந்த முருகனையும் வெட்டிவிட்டு தப்பியோடியது மர்மகும்பல். தேர்தல் முன்விரோதம் காரணமாக கொலை நடந்திருக்கலாம் என போலீஸ் சந்தேகிக்கின்றனர்.

how do you know your wife cheated on you read my spouse cheated on me now what

Like Us on Facebook Dinkaran Daily News