SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ரோஹிங்யா அகதிகளின் முகாமில் தீ விபத்து: அனைத்தையும் இழந்து மைதானத்தில் தங்கியிருக்கும் அவலம்

2018-04-16@ 12:40:06

புதுடெல்லி: டெல்லியில் தங்கவைக்கப்பட்டுள்ள ரோஹிங்யா அகதிகளின் முகாமில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் முகாம் முழுவதும் எரிந்து நாசமானது. டெல்லியின் தென்கிழக்குப் பகுதியான கலந்தி குஞ்ச் என்ற இடத்தில் ஒரு முகாம் அமைத்து அங்கு சுமார் 55 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று அதிகாலை 3 மணியளவில் இவர்கள் தங்கியுள்ள முகாம்களில் திடீரென தீப்பிடித்தது. தீயை உணர்ந்த மக்கள் உடனடியாக அப்பகுதியை விட்டு வெளியேறினர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினர். சுமார் 10 வண்டிகளின் மூலம் 3 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். இதனையடுத்து தீ விபத்து ஏற்பட்ட இடத்திற்கு அருகே உள்ள ஒரு மைதானத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பாக ரோஹிங்கியா அகதி ஒருவர் கூறுகையில், தீ விபத்தில் நாங்கள் அனைத்தையும் இழந்துவிட்டோம். உள்ளூர் மக்கள் எங்களுக்கு உணவு மற்றும் ஆடைகளை கொடுத்து உதவினார்கள். மற்றும் போலீசார் எங்களுக்கு நிறைய உதவிகளை செய்து வருகின்றனர் என்று கூறியுள்ளார்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mald123

    உலகிலேயே முதல்முறையாக கடலுக்கு அடியில் சொகுசுவிடுதி... மாலத்தீவில் நவம்பர் மாதம் திறப்பு!

  • Marijuana420Festival

    போதை பொருளான கஞ்சாவை, சட்டபூர்வமாக உபயோகிக்கும் 420 திருவிழா: உலகம் முழுவதும் கொண்டாட்டம்

  • milkcenterchennai

    சென்னையில் 24 மணி நேர பால் விற்பனை மையம் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார்

  • 21-04-2018

    21-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • france_park_machine

    பிரான்ஸ் நாட்டில் ஹாலிவுட் படக்காட்சிகளை போல் வடிவமைக்கப்பட்ட எந்திர பூங்கா!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்