SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பொங்கல் விழாவை முன்னிட்டு அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது

2018-01-14@ 08:29:14

அவனியாபுரம்: பொங்கல் விழாவை முன்னிட்டு இன்று மதுரை மாவட்டம்  அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்கியுள்ளது. மதுரை கலெக்டர் வீரராகவராவ், போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால், திருப்பரங்குன்றம் எம்எல்ஏ போஸ், விருதுநகர்  எம்.பி ராதாகிருஷ்ணன் ஆகியோர் போட்டியை துவக்கி வைத்தனர். இதில் பங்கேற்க 924 காளைகள் பதிவு செய்யப்பட்ட நிலையில் காலை 7.40 மணி நிலவரப்படி 216 காளைகள் உடல் தகுதி பெற்று வாடிவாசல் சென்றன. மேலும் மாடுபிடி வீரர்கள் 624 பேரும்,  ஜல்லிக்கட்டில் களம் இறங்க தங்களது பெயர்களை பதிவு செய்துள்ளனர். மாலை 4 மணி வரை ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுகின்றன. முன்னதாக ஜல்லிக்கட்டு போட்டியையொட்டி கோயில் காளைகளுக்கான சிறப்பு பூஜை நடைபெற்றது. அதனை தொடர்ந்து விழா ஏற்பாடுகளை மதுரை கலெக்டர் ஆய்வு செய்தார்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • Dinakaran_Education_Expo

    சென்னையில் தினகரன் நாளிதழின் கல்விக் கண்காட்சி கோலாகலமாக தொடங்கியது

  • mald123

    உலகிலேயே முதல்முறையாக கடலுக்கு அடியில் சொகுசுவிடுதி... மாலத்தீவில் நவம்பர் மாதம் திறப்பு!

  • Marijuana420Festival

    போதை பொருளான கஞ்சாவை, சட்டபூர்வமாக உபயோகிக்கும் 420 திருவிழா: உலகம் முழுவதும் கொண்டாட்டம்

  • milkcenterchennai

    சென்னையில் 24 மணி நேர பால் விற்பனை மையம் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார்

  • 21-04-2018

    21-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்