ஐபிஎல் டி20 சீசன் 10 குவாலிஃபயர் 2 : மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 108 ரன்கள் வெற்றி இலக்கு

Date: 2017-05-19 21:29:32

பெங்களூரு: ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 108 ரன்கள் வெற்றி இலக்காக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்ணயித்துள்ளது. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 107 ரன்கள் எடுத்துள்ளது. இதனையடுத்து 108 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்க உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி புனே அணியை இறுதிப்போட்டியில் எதிர்க்கொள்ளும்.

Like Us on Facebook Dinkaran Daily News