தமிழகத்தில் நிலவும் பிரச்சினைகள் குறித்து பிரதமரிடம் எடுத்துக் கூறினோம்: ஓபிஎஸ்

Date: 2017-05-19 18:17:53

டெல்லி: தமிழகத்தில் நிலவும் பிரச்சினைகள் & தேவைகள் குறித்து பிரதமரிடம் எடுத்துக் கூறினோம் என்று மோடியை சந்தித்த பின் பன்னீர்செல்வம் பேட்டியளித்துள்ளார். விவசாயிகளின் வங்கிக் கடன்களை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தோம் என்றும பன்னீர்செல்வம் கூறினார். தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினை, காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் நீட் தேர்வில் விலக்கு உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து எடுத்து கூறினோம் என்றும் அரசியல் ரீதியாக பிரதமரிடம் எதுவும் பேசவில்லை என்றும் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

Like Us on Facebook Dinkaran Daily News