சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையை பொதுமக்கள் பார்க்க அனுமதி

Date: 2017-04-21 18:55:14

சென்னை: சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையை பொதுமக்கள் 3 நாள் பார்வையிடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் ஆளுநர் மாளிகையை மக்கள் பார்க்க அனுமதி அளிக்கப்பட்டது. ஆளுநர் மாளிகையை ஒரு நாளைக்கு 20 பேர் பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆளுநர் மாளிகையை பொதுமக்கள் பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது வித்யாசாகர் ராவ் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

Like Us on Facebook Dinkaran Daily News