வெளிநாடு செல்ல அனுமதிகேட்டு குஷ்பு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு

Date: 2017-04-21 17:45:11

மதுரை: வெளிநாடு செல்ல அனுமதிகேட்டு நடிகை குஷ்பு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். 2011ல்  தேர்தல் பிரசாரத்தின் போது விதிமுறைகளை மீறியதாக குஷ்பு மீது வழக்குபதிவு செய்யப்பட்டிருந்தது.
இதனை அடுத்து வழக்கு நிலுவையில் இருப்பதால் அனுமதி கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் பாஸ்போர்ட் அதிகாரியை எதிர் மனுதாரராக சேர்க்க உத்தரவிட்டு வழக்கை நீதிமன்றம் ஒத்திவைத்திருந்தது.

Like Us on Facebook Dinkaran Daily News