சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கு: சேகர் ரெட்டி மீண்டும் கைது

Date: 2017-03-20 22:38:14

சென்னை: சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் தொழிலதிபர் சேகர் ரெட்டி மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். சேகர் ரெட்டியிடம் விசாரணை நடத்திய அமலாக்கத்துறை கைது நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. சேகர் ரெட்டியின் உறவினர் சீனிவாசலு, நண்பர் பிரேம்குமார் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். சேகர் ரெட்டி உள்ளிட்டோரிடம் காலை 11 மணி முதல் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வந்தது. சிபிஐ தொடர்ந்த வழக்கில் கடந்த 17-ம் தேதி மூவரும் ஜாமீனில் வெளிவந்தனர். இந்நிலையில் மீண்டும் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Like Us on Facebook Dinkaran Daily News