ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதி ஜம்மு காஷ்மீரில் கைது

Date: 2017-03-20 20:50:47

பண்டிபோரா : ஜம்மு காஷ்மீர் மாநிலம் பண்டிபோரா பகுதியில் போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பை சேர்ந்த தீவிரவாதி கைதுசெய்யப்பட்டான். கடந்த காலங்களில் காஷ்மீரில் நடந்த தீவிர தாக்குதலில் தேடப்பட்ட முக்கிய தீவிரவாதி தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கைது செய்தப்பட்ட தீவிரவாதியிடம் இருந்து ஏகே 47 ரக துப்பாக்கியும்  , 20 துப்பாக்கி தோட்டாக்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

Like Us on Facebook Dinkaran Daily News