நாடு முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.550 கோடி கறுப்புப்பணம் பறிமுதல்

Date: 2016-12-29 21:28:17

டெல்லி: நாடு முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.4172 கோடி கறுப்புப்பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கணக்கில் காட்டாத  ரூ.4172 கோடியில் ரூ.550 கோடியை வருமானவரித்துறையினர் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட ரூ.550 கோடியில்  ரூ.105 கோடி புதிய 2000 ரூபாய் நோட்டுகளாகும். ரூ.91 கோடி மதிப்புள்ள தங்க நகைகளையும் வருமானவரித்துறையினர் கைப்பற்றி உள்ளனர். மேலும் சோதனை அடிப்படையில் 5000 பேருக்கு தங்கள் வருமானம் குறித்து விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News