தமிழக விவசாயிகளுடன் அரசு நாளை பேச்சு வார்த்தை

Date: 2016-12-29 18:48:55

சென்னை : மாநிலத்தில் நிலவும் வறட்சி குறித்து விவசாய சங்களுடன் நாளை தமிழக அரசு பேச்சு வார்த்தை நடத்துகிறது. இந்த கூட்டம் நாளை தமிழக தலைமை செயலகத்தில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் வருவாய், வேளாண்மை,உணவு மற்றும் கைத்தறிதுறை அமைச்சர்கள் பங்கேற்கின்றனர். தமிழக விவசாய  சங்கங்களின் பிரதிநிதிகள் இந்த பேச்சு வார்த்தையில் ஈடுபடுவர் என தமிழ்நாடு விவசாய சங்கங்களின் பொது செயலாளர் பெரியசாமி தெரிவித்துள்ளார். மேலும் இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிப்பது ,பயிர் இழப்பீடு மற்றும் விவசாயிகள் தற்கொலை ஆகியவை குறித்து  விவாதிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

Like Us on Facebook Dinkaran Daily News