SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பாலியல் வன்முறையால் பெண் அனுபவிக்கும் சித்ரவதைகளைத் தெரிந்துகொள்ளுங்கள்

2018-06-01@ 14:18:37

நன்றி குங்குமம் டாக்டர்

கவர் ஸ்டோரி


மனமொத்து கணவனும், மனைவியும் தாம்பத்தியத்தில் இணையும்போதே பெண்ணின் உடல் சில அசௌகரியங்களை எதிர்கொள்ள வாய்ப்புகள் உண்டு. அதுவே பலாத்காரமாக நிகழ்கிற போது பெண்ணின் உடல் அடையும் சேதங்களுக்கும், சித்ரவதைகளுக்கும் அளவே இல்லை. பாலியல் வன்முறைக்கு ஆளாகி உயிரிழந்தவர்களைப் பற்றி பரவலாகப் பேசுகிறோம். ஆனால், பலாத்காரத்துக்கு ஆளாகி உயிர் தப்பிப் பிழைத்த பெண்ணின் உடல் எதிர்கொள்ளும் சவால்கள் பற்றி பொதுவாகப் பேசப்படுவதில்லை. மகப்பேறு மற்றும் மகளிர்நல மருத்துவர் மீரா ராகவனிடம் இதுபற்றி பேசினோம்…

‘‘பிரசவத்தின்போது கணவனும் உடன் இருக்க வேண்டும் என்று இப்போது பேசி வருகிறார்கள். அப்போதுதான் குழந்தையைப் பெற்றெடுக்க மனைவி எத்தனை சிரமப்படுகிறாள் என்பது கணவனுக்குப் புரியும் என்பதற்காக இந்த நடைமுறை சமீபகாலமாக பிரபலமாகி வருகிறது. அதேபோல், பாலியல் வன்முறையின்போதும், அதன்பிறகும் ஒரு பெண்ணுக்கு நிகழும் சித்ரவதைகள் என்னவென்று புரிந்துகொண்டால் இந்த குற்றச்செயல் களில் ஈடுபடுவதும் குறையக்கூடும்.

பாலியல் வன்முறையால் ஏற்படும் உயிரிழப்பைவிட கொடியது அதற்குப்பின் உயிர் பிழைத்தவர்களிடையே ஏற்படும் உளவியல், உணர்வு மற்றும் உடல்ரீதியிலான விளைவுகள். பாலியல் வன்முறை சம்பவத்தின் ஆரம்ப கட்டத்தில் ஏற்படும் உடல் அதிர்ச்சி மற்றும் ஆழமான உளவியல் அதிர்ச்சிகளை இதன் உடனடி விளைவுகளாக இருக்கும். பலாத்காரத்தின்போது பெண் எதிர்க்கும்போது, வலுக்கட்டாயமாக அவள் தாக்கப்படுவதால் தலை, கை, கால்கள் என உடலின் எல்லா உறுப்புகளும் காயமடையலாம். பாலியல் வன்முறைக்குப்பின் இனப்பெருக்க உறுப்பில் ஏற்படும் காயங்கள், ரத்தப்போக்கு போன்றவற்றால் இனப்பெருக்க சுகாதாரத்தில் ஏற்படும் பிரச்னைகளே பிரதான உடல்ரீதியான பாதிப்புகளாக இருக்கிறது.

பாலியல் பலாத்காரத்துக்கு ஆளானவர் முதலில் மருத்துவ சிகிச்சை எடுப்பது முக்கியம். சிகிச்சையில் முதல்கட்டமாக பாலுறவுக்குட்பட்ட நோய்களான பால்வினை நோய்கள் மற்றும் சிறுநீர்ப்பாதை தொற்று நோய்களுக்கான சோதனைகளை மேற்கொள்வதன் மூலம் கர்ப்பம் தரிப்பதற்கான அபாயத்தை மதிப்பிடுவதோடு, எந்தவொரு உடல் காயங்களுக்கும் விரைவில் சிகிச்சைகளை தொடங்க முடியும். இதன்மூலம் எதிர்காலத்தில் பெரிய பிரச்னைகளை தவிர்க்கலாம்.

பாலியல் வன்முறைக்குப்பின் மயக்கம், வாந்தி, மூளைக்குழப்பம் உடனடியாக வரக்கூடும். கட்டாய பாலியல் தாக்குதலால் பெண்ணுறுப்பின் திசுக்கள் கிழிதல், ரத்தக்கசிவு, ஆசனவாயின் திசுக்கள் சேதமடைந்து ரத்தக்கசிவு கருப்பை மற்றும் மலக்குடல் பகுதியில் ஏற்படும் காயங்களால் அதற்கான அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருக்கும். சிலருக்கு இது வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் நிரந்தரப் பிரச்னையாகவும் மாறிவிடும்.
சிலருக்கு மாதவிடாய் சுழற்சியில் மாற்றம், மாதவிடாய் வலிகள் ஏற்படலாம். பயங்கரமான உடல்வலி, தலைவலி, கீழ்முதுகுவலி மற்றும் வயிற்றுவலி உண்டாகும். சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீர்ப்பாதை தொற்றுக்கள் ஏற்படும்.

சிலருக்கு கர்ப்பப்பையில் புற்றுநோய் அல்லாத கட்டிகள் ஏற்படலாம். முக்கியமாக பெண்களின் பிறப்புறுப்பில் காயங்கள் மற்றும் பிறப்புறுப்பின் சவ்வு கிழிவதால் திருமணத்துக்குப்பின் உடலுறவு கொள்வதில் சிரமம் ஏற்படலாம். சிலர் தாம்பத்திய உறவுக்கே தகுதியற்றவர்களாக தள்ளப்படுவார்கள். தீவிரமான காயங்களால் ரத்தப்போக்கு அதிகமாகி மரணம் ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது.

பாக்டீரியா, வைரஸ் தொற்றுக்கள் ஒருவரின் உடலிலிருந்து மற்றவருக்கு பிறப்புறுப்பு, ஆசனவாய் அல்லது வாய்வழி பாலியல் மூலம் பரவுவதால் Chlamydia, Genital Herpes, Gonorrhea, AIDS, HIV, Hepatitis மற்றும் Syphilis போன்ற பால்வினை நோய்கள் ஏற்படக்கூடும். பால்வினை நோய்கள் எந்த வயதினருக்கும், எந்த பாலினத்துக்கும் வரக்கூடியது. தொற்றுக்கள் கர்ப்பப்பையில் பரவி அதனால் பிற்காலத்தில் குழந்தை யின்மை பிரச்னை ஏற்படுவதற்கும் வாய்ப்பிருக்கிறது.

சில பெண்களுக்கு இடுப்பு அழற்சி நோய்கள் (Pelvic Inflammatory diseases) வரக்கூடும். கற்பழிப்பால் பாதிக்கப்படும் சிறுமிகளுக்கு சிலநேரங்களில் அவர்களின் பிறப்புறுப்பில் ஏதேனும் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட வேண்டி யிருக்கும். இதனால் பருவமடைவதில் பிரச்னை இல்லையென்றாலும், பின்னாளில், அவர்கள் தாம்பத்திய உறவில் ஈடுபட முடியாத நிலை அல்லது தாய்மை அடைய முடியாத நிலை ஏற்பட
வாய்ப்பிருக்கிறது.

-உஷா நாராயணன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 17-07-2019

  17-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • DongriBuildingCollapse

  மும்பையில் 100 ஆண்டு பழமையான கட்டிடம் இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழப்பு..மீட்பு பணிகள் தீவிரம்!

 • KyrgyzstanSlapping

  ஒருவரை ஒருவர் கன்னத்தில் பளார் பளாரென அறையும் வித்தியாசமான போட்டி: கிர்கிஸ்தானில் நடைபெற்றது!

 • ChangchunZoologicalPark

  உயிரியல் பூங்காவில் உள்ள மரங்களில் விலங்குகளை தத்ரூபமாக வரையும் கலைஞர்: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

 • 16-07-2019

  16-072019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்