SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வீட்டிலிருந்தபடி பெயிண்டிங் வரையலாம்!

2018-06-01@ 13:11:52


எந்தக் கலைக்கும் ஓர் எல்லை உண்டு. சில கலைகளுக்கு மட்டும்தான் கிளைகள் விரியும். இவற்றை கற்கத் தொடங்கினால் முடிவே இல்லாமல் கடல் போல் விரியும். ஓவியக்கலை அப்படித்தான். வரைய ஆரம்பித்துவிட்டால் லைன் டிராயிங், பெயின்டிங், துணி ஓவியம், தஞ்சாவூர் ஓவியம், மணல் ஓவியம்... என போய்க்கொண்டே இருக்கும். அந்த வரிசையில் 3டி பெயிண்டிங் இப்போது இணைந்திருக்கிறது. வீட்டில் ஆங்காங்கே ஃப்ரேமுக்குள் இல்லாமல் சற்றே வெளியில் இருக்கும்படி செமி சிலை வடிவமாகவே இந்த 3டி பெயிண்டிங் காட்சியளிக்கிறது!

‘‘இதை முடிக்க அஞ்சு மாசங்களாச்சு!’’ என்கிறார் கலைச்செல்வி. ‘‘அப்பா ஆர்ட்டிஸ்ட். அந்த தாக்கம் என்கிட்டயும் இருக்கு. சொந்த ஊர் மதுரை. 30 வருஷங்களா சென்னை வாசம். டீத்தூள் டப்பா, கதைப் புத்தகங்கள்ல வர்ற படங்களைப் பார்த்துதான் வரைய ஆரம்பிச்சேன். போஸ்டர் கலர், ஃபேப்ரிக் கலர், ஆயில் பெயிண்டிங்னு தொடங்கி தஞ்சாவூர் பெயிண்டிங் வரை வந்தேன். இந்த நேரத்துலதான் 3டி பெயிண்டிங் அறிமுகமாச்சு...’’ என்று சொல்லும் கலைச்செல்வி இதிலேயே இரண்டு வகைகள் இருப்பதாகக் குறிப்பிடுகிறார்.

‘‘ஒண்ணு பெயிண்டிங்ல ஷேட்ஸ் கொடுத்து அப்படியே 3டி ஸ்டைல் ஓவியமா வரையறது. நான் செய்யறது கிட்டத்தட்ட சிலை வடிவம் மாதிரி இருக்கும். எந்த ஓவியத்தை வரையப் போறோமோ அதை ட்ரேஸிங்கா இல்லைனா ஸ்கெட்ச்சா போட்டுக்கணும். அப்புறம் எம்சீல் அல்லது க்ளே பயன்படுத்தி, வரைஞ்ச ஓவியம் மேல சிலைகள் போல உருவாக்கணும்! இந்த ஜன்னல் கிட்ட பறவைகள் கூட நிற்கிற பெண் ஓவியத்தை எடுத்துப்போம்.

இந்த ஓவியத்துக்குக் கீழ அரை இன்ச் அளவுக்கு தெர்மாகோல் கொடுத்திருக்கேன். அதுக்கு மேல எம் சீல் கொண்டு சிலை போல வடிவமைச்சிருக்கேன். தெர்மாகோல் லேயர் கொடுத்ததால ஓவிய முனைகள் கொஞ்சம் ஷார்ப் கட்டா இருக்கும். சிலை போல வடிவமைச்சுட்டு அதுல ஃபேப்ரிக் பெயிண்டிங் செய்திருக்கேன். நகைகளுக்கு தஞ்சாவூர் பெயிண்டிங் க்ளே கொடுக்கலாம். வித்தியாசமா இருக்கட்டும்னு இந்த ட்ரெஸ்கள்ல வைக்கிற மணிகளை ஒட்டினேன்.

அது கூடுதல் அழகு கொடுக்குது!’’ என்னும் கலைச்செல்வி படங்களைப் பொறுத்து வரையும் காலம் குறையும் அல்லது நீளும் என்கிறார். “வீட்ல இருக்கிற பெண்கள் ஏதாவது கிராஃப்ட் ஒர்க் செய்யணும். அப்பதான் புத்துணர்ச்சியோட இருக்க முடியும். நேரமே இல்லைனு சொல்றதை விட நேரத்தை நாமா உருவாக்கறதுதான் நல்லது...’’ அழுத்தமாகக் குறிப்பிடும் கலைச்செல்வி, ஆர்வமுள்ளவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் வகுப்புகளும் எடுத்து வருகிறார்.

படங்கள் : ஆ.வின்சென்ட் பால்
-ஷாலினி நியூட்டன்

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • shadow_111

  பூஜ்ஜிய நிழல் தினம் ; பிர்லா கோளரங்கத்தில் பூஜ்ஜிய நிழல் அளவை காட்டும் விதமாக மாணவர்களுக்கு பல்வேறு நிகழ்வுகள் செய்து காண்பிப்பு

 • nigeriaaa_twins1

  இரட்டையர்களால் நிரம்பி வழியும் நைஜிரீய நகரம் !! : வியப்பூட்டும் புகைப்படங்கள்

 • russia_anumin111

  ரஷியாவில் உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் : பிரம்மாண்ட சரக்கு கப்பலைப் போல் காட்சியளிக்கும் வினோதம்

 • largestpotato

  உலகின் மிகப்பெரிய உருளைக்கிழங்கில் கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதி : அமெரிக்காவில் விநோதம்

 • marsgobi_desert1

  செவ்வாய் கிரகத்தில் வாழ்வது போன்ற அனுபவத்தை கொடுக்கும் தளம் : சீனாவின் கோபி பாலைவனத்தில் திறப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்