SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதே லட்சியம்...

2018-02-12@ 14:38:44

நன்றி குங்குமம் தோழி

ஏழை விவசாயக் குடும்பத்தை சேர்ந்த மன்னார்குடி அரசு கலைக்கல்லூரி மாணவி நித்யா. தென்னிந்தியா அளவில் நடைபெற்ற பளுதூக்கும் போட்டியில் வெற்றி பெற்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்திருக்கிறார். கடந்த மாதம் கம்பம் மாவட்டத்தில் நடைபெற்ற பளுதூக்கும் போட்டியில் கலந்துகொண்ட இவர் தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். பல்வேறு சவால்களுக்கிடையில் கிடைத்த வெற்றி தனக்கு தன்னம்பிக்கையை கொடுத்திருக்கிறது என நம்மிடையே பேசத் தொடங்கினார் இவர்.

“நான் பிறந்தது மன்னார்குடியில் உள்ள செருமங்களம் எனும் குக்கிராமம். என்னுடைய பெற்றோர் விவசாய கூலியாக வேலை பார்க்கிறார்கள்.  8 ஆம் வகுப்பு வரை செருமங்களம் அரசு தொடக்கப்பள்ளியில் படித்தேன். 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை மன்னார்குடி அரசு உயர்நிலைப் பள்ளியில் படித்தேன். பள்ளியில் படிக்கும் போது எல்லா விளையாட்டுகளிலும் ஆர்வமாக கலந்து கொள்வேன். எங்களுடைய பள்ளியில் நடைபெற்ற நீளம் தாண்டுதல், அகலம் தாண்டுதல் போட்டியில் வெற்றி பெற்றிருக்கிறேன்.

வசதி இல்லாத காரணத்தால் என்னுடைய விளையாட்டு ஆர்வம் பள்ளியோடு முடிந்து போகும் என்று நினைத்தேன். ஆனால் கல்லூரி வாழ்க்கை எனக்கொரு திருப்புமுனையாக அமைந்தது. மன்னார்குடியில் உள்ள ராஜகோபாலசாமி அரசு கலைக் கல்லூரியில் சேர்ந்தேன். 2015ம் ஆண்டு என்னுடைய தோழி திவ்யாவின் ஆலோசனைப்படி  மன்னார் குடியில் உள்ள எம்.ஆர்டி உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று, அங்கு பயிற்சி பெறும் மற்ற பெண்களை  பார்த்த போது எனக்கு நம்பிக்கை ஏற்பட்டது.

அங்கிருந்த பயிற்சியாளர் விக்னேஷ் எனக்கு தொடர்ந்து பயிற்சி கொடுத்தார். முதல் நாள் பயிற்சியின்போது உடம்பு முழுவதும் கடுமையான வலி இருந்தது. மேலும் பயிற்சியை தொடர வேண்டாம் என்றுகூட நினைத்தேன். ஆனால் கஷ்டப்படாமல் வாழ்க்கையில் எதுவும் கிடைக்காது என்பதையும் நான் அறிவேன். தொடர் பயிற்சியினால் மெல்ல மெல்ல என் உடல் வலி குறைந்தது.

கட்டணம் இல்லா பயிற்சியை எம்.ஆர்.டி உடற்பயிற்சி கூடம் எனக்கு வழங்கியது. வறுமையில் இருக்கும் என்னுடைய குடும்பச் சூழலில் இந்த உதவியை செய்த உடற்பயிற்சி கூடம் உரிமையாளர் அன்வதின் சாருக்கு நான் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். 2015ல் மாநில அளவில் அரியலூரில் நடைபெற்ற  பளுதூக்கும் போட்டியில் மூன்றாவது இடத்தைப் பிடித்தேன். இதுவே என் வெற்றிக்கான நம்பிக்கையை கொடுத்தது. அதன் பின் தொடர்ந்து தமிழகத்தில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் விடாமல் கலந்துகொண்டேன். ஒவ்வொரு போட்டிக்கு செல்லும் போதும் தேவையான பொருளாதார வசதியின்றி கஷ்டப்பட்டிருக்கிறேன்.

அம்மாவும் அப்பாவும் எனக்காக கடன் பெற்று என்னை போட்டிக்கு அனுப்புவார்கள். அன்வதின் சாரும் எனக்கு உதவி செய்வார். இப்படிதான் ஒவ்வொரு போட்டியையும் நான் கடந்து வந்தேன். கடந்த மாதம் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நேரு பொறியியல் கல்லூரியில், தென்னிந்திய அளவில் நடைபெறும் பளுதூக்கும் போட்டிக்கான தேர்வு நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பெண்களுக்கான  48 கிலோ எடை பிரிவில் தேர்வானேன். கடந்த நவம்பர் மாதம் 3 மற்றும் 4 ஆம் தேதி தென்னிந்திய அளவிலான பளுதூக்கும் போட்டி, கம்பம் மாவட்டத்தில் நடைபெற்றது.

இந்த போட்டியில் 5 மாநிலங்களை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். என்னுடைய எடை பிரிவில் 50 போட்டியாளர்களோடு போட்டியிட்டு முதல் பிரிவில் 57 கிலோவும் இரண்டாவது பிரிவில் 68 கிலோ என மொத்தம் 125 கிலோ பளுவை தூக்கி தங்கப் பதக்கம் வென்றேன். என்னுடைய இந்த வெற்றிக்கு என் பெற்றோரும், பயிற்சியாளர் விக்னேஷும் முக்கிய காரணம்.

அவர்கள் கொடுத்த நம்பிக்கையும், பயிற்சியும்தான் என்னை வெற்றியை நோக்கி உயர வைத்தது. நான் வெற்றி பெற்றதை அறிந்த திராவிட முன்னேற்ற கழக சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா அவர்கள் வீட்டிற்கு வந்து பாராட்டு தெரிவித்தார். தொடர்ந்து நான் பயிற்சியில் ஈடுபட்டு, ஒலிம்பிக்கில் கலந்து கொண்டு, இந்தியாவிற்காக தங்கப்பதக்கம் பெற்றுத் தருவதே எனது அடுத்த கனவு. எனது பொருளாதார நிலை எனது முயற்சிக்கு பெரும் சிக்கலாக இருக்கிறது. கண்டிப்பாக உதவி கிடைக்கும் என்று நம்புகிறேன்.’’

- ஜெ.சதீஷ்

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • lastfinaldest111

  21 குண்டுகள் முழங்க தங்க நாற்கர சாலையின் நாயகனும், முன்னாள் பிரதமருமான வாஜ்பாயின் உடல் தகனம்

 • finaldesti000

  மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் இறுதி ஊர்வலம்

 • kannirpeoplvaj

  மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உருவப்படத்திற்கு நாட்டு மக்கள் கண்ணீர் அஞ்சலி

 • bjpvajpai123

  டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் வாஜ்பாய் உடல் - பொதுமக்கள் அஞ்சலி

 • dangerrrkerala123

  கேரளாவில் கனமழை - மீட்பு பணியில் ஈடுபட்ட பொதுமக்களின் துணிகர செயல்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்