SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

டீன் ஏஜ் பெண்களின் ரகசிய செல்போன் விளையாட்டு!

2018-02-09@ 11:46:52

Girls are always girls. என்ன படிக்கிறார்களோ அல்லது கேட்கிறார்களோ அதுவாகவே மாறிவிடுவார்கள்! இந்த குணத்தைத்தான் கச்சிதமாக ஆண்ட்ராய்ட் ஆப்ஸ் பயன்படுத்திக் கொள்கிறது. பெண்களை டார்கெட் செய்தே எண்ணற்ற அப்ளிகேஷன்ஸை வெளியிட்டும் வருகிறது. Face app, make up app, beauty plus app, dress up games... என நீளும் பட்டியல் இதற்கெல்லாம் உதாரணம். ரைட். ஒரு கதையைப் படிக்கிறீர்கள். அந்தக் கதையின் நாயகியே நீங்கள்தான் என்றால் எப்படியிருக்கும்? இப்படித்தான் பல ஆண்ட்ராய்ட் 2டி அனிமேஷன் ஆப் கதைகள் உள்ளன.

கேண்டி க்ரஷ், கிளாஷ் ஆஃப் க்ளான்... எல்லாம் பழங்காலத்து ஆட்களுக்கானவை. இன்றைய டீன் பெண்கள் அல்லது டீன் மனதுடைய பெண்கள் விளையாடும் ஆண்ட்ராய்ட் கேம்ஸ் எல்லாம் வேற லெவல். இந்த விளையாட்டில் நாம் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். அவர்கள் தரும் அனிமேஷன் கதையில் என்னென்ன முகபாவங்களை அந்த ஆப் காட்டுகிறதோ... என்ன பாடிலேங்குவேஜை சுட்டிக் காட்டுகிறதோ அப்படி நீங்களும் மாற வேண்டும். இதையெல்லாம் செய்த பிறகு கதை ஆரம்பிக்கும்!

நமக்கு அப்பா, அம்மா, நண்பர்கள், பாய் ஃப்ரெண்ட், லவ் எபிசோட், பிரேக் அப்... என சகலத்தையும் அனிமேஷனில் கொடுக்கும் இன்னொரு உலகம் அது. இதன் ஸ்பெஷலே நம் விளையாட்டை நாமே முடிவு செய்யலாம் என்பதுதான்! ‘நம்மை’த் தவிர்த்து இதில் வரும் கேரக்டர்ஸ் அனைத்தும் ஏற்கனவே appல் டிசைன் செய்யப்பட்டவை. மற்ற விஷுவல் கேம்ஸ் எல்லாம் நமக்கு எதிர்முனையில் இன்னொரு நபர் விளையாடும் படியான அமைப்பைக் கொண்டவை. இந்தப் பிரச்னைகள், ஆபத்துகள் எல்லாம் இதில் இல்லை.

நம்புங்கள். இந்தவகையில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கேம்ஸ் உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு கதை. ஒவ்வொன்றிலும் இரண்டுக்கும் மேலான முடிவுகள். இதில் Episodes, love crush, Pretty Liars, Mean Girls, Linda Brown, Choose Your Date கதைகள் வைரல்! மில்லியனில் டவுன்லோட் செய்யப்பட்டு நாள்தோறும் விளையாடப்படுகின்றன. ஒவ்வொரு எபிசோடையும் படிக்க டிக்கெட்டுகள் வேண்டும். ஒவ்வொரு மணி நேரத்துக்கும் ஒருமுறை ஒரு டிக்கெட் லோட் ஆகும். சில பெண்கள் இதில் உடைகள், டிக்கெட்டுகளை அதிகமாக எடுக்க பணம் கட்டியும் விளையாடுகிறார்கள். அதாவது கேண்டி க்ரஷ் விளையாட்டில் டைமண்ட்ஸ் எடுக்க பணம் கட்டும் ஆப்ஷன் இருக்குமே... அப்படி.

வேண்டுமெனில் கட்டலாம்; இல்லையேல் ஆட்டோ ஃபில்லிங் டிக்கெட்டுகள், ஜெம்ஸ்களை பயன்படுத்தலாம். இதில் முகநூல், ட்விட்டர் உள்ளிட்ட ஆப் தலையீடுகள் இல்லை. அக்கவுண்ட் ஆரம்பிக்க மட்டுமே முகநூல் அல்லது ட்விட்டர் அல்லது மெயில் ஐடி தேவை. இந்த ஆப்ஸை திறமையாக கையாளத் தெரிந்தால் நீங்களே ஒரு புது கதையை உருவாக்கி மற்றவர்களை டவுன்லோடு செய்ய வைக்கலாம்! இந்த விளையாட்டில் பெரும்பாலானவை சீனாவிலும் ஜப்பானிலும் உருவாக்கப்பட்டவை!  

- ஷாலினி நியூட்டன்

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 19-01-2019

  19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • ChillaiKalanKashmir

  கடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்

 • bombblastcolombia

  கொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்!

 • chinafiredrone

  மின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு!

 • horse_apain12

  விலங்குகளை சுத்தப்படுத்தும் திருவிழா : நெருப்புக்குள் குதிரைகளை செலுத்தும் ஸ்பெயின் மக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்