SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கிச்சன் டிப்ஸ்

2018-01-11@ 14:51:36

நன்றி குங்குமம் தோழி

* ரவையை வாங்கியதும் நன்றாக வறுத்து உப்புமாவிற்கு வேண்டியதை எல்லாம் தாளித்து ஆறியதும் டப்பாவில் போட்டு மூடி வைத்தால் உப்புமா செய்வதற்கு கஷ்டம் இருக்காது. சீக்கிரமாக செய்து விடலாம்.

* துவையல் அரைக்கும்போது பரங்கிக்காயின் தோலையும், குடலையும் வதக்கி அதையும் சேர்த்து அரைத்தால் துவையல் நன்றாக இருக்கும். உடம்புக்கும் நல்லது. தர்பூசணியின் தோலை எடுத்து விட்டு வெள்ளையாக இருப்பதை சேர்த்தும் துவையல் அரைக்கலாம்.
  - உஷா ராஜகோபால், செகந்தராபாத்-500 009.
   
* வாடிய கொத்தமல்லித்தழையை வெதுவெதுப்பான நீரில் போட்டால், தளதளவென்று அப்போதுதான் பறித்த இலையைப் போல் கொத்தமல்லித்தழை மின்னும்.

* முள்ளங்கி, முட்டைகோஸ், காலிஃப்ளவர் போன்ற காய்கறிகளை வாங்கும்போது அவற்றின் இலைகளோடு சேர்த்து வாங்க வேண்டும். அந்த இலைகளை பொடி பொடியாக நறுக்கி பருப்பு சேர்த்து கூட்டு சமைத்துச் சாப்பிட்டால் அருமையான சுவையோடு இருக்கும். சூப் செய்தும் சாப்பிடலாம். சுவையாக இருக்கும்.
  - ஆர்.கீதா, திருவான்மியூர்.
   
* மாங்காய் தொக்கு செய்யும்போது நெல்லிக்காய் அளவு வெல்லம் போட்டுக் கிளற மாங்காய் தொக்கு சுவையாக இருக்கும். தாளிதம் செய்யும் எண்ெணயில்
சிறிதளவு உப்பு போட்டு விட்டு தாளிதம் செய்தால் கமறல் ஏற்படாமலிருக்கும்.

*  மோர் குழம்பு வைப்பதற்கு மோரில் புளிப்பே இல்லை என்றால், தேங்காயுடன் மாங்காயையும் சேர்த்து அரைத்து மோர் குழம்பு செய்தால் மோர்குழம்பு வித்தியாசமாக இருப்பதுடன் அதன் ருசியே தனி.
  - கே.பிரபாவதி, மேலகிருஷ்ணன்புதூர்.
   
* கேரட் இலைகளை பருப்புடன் சேர்த்து பொரியலாகவும், கூட்டுப் போலவும் செய்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும். தூதுவளை கீரையை பருப்பு சேர்த்து குழம்பு செய்தால் சுவையாக இருக்கும்.
  - வே.யாழினி, வேலூர்.
   
* பொட்டுக்கடலை, மிளகாய் வற்றல், கடலைப்பருப்பு, கசகசா,  கொப்பரைத் தேங்காய் இவற்றை தேவைக்கேற்றாற்போல எடுத்து வறுத்து பொடித்து வைத்துக்
கொண்டு சுண்டலில் கலந்தால் மசாலா சுண்டல் போல இருக்கும்.

* இட்லியோடு மிளகுத்தூள், கறிவேப்பிலைப் பொடியுடன் தயிர் கலந்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

* 15 நிமிடம் வெந்நீரில் ஊறிய சேமியாவுடன் உப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம் கொஞ்சம் அரிசி மாவு சேர்த்து பக்கோடா செய்தால் கரகரப்பாக ருசியாக இருக்கும்.
  - நா.செண்பகவல்லி, பாளையங்கோட்டை.

* வாழைப்பூவை நறுக்கி அரிசி கழுவிய நீரில் கலந்து, பின்னர் நீரை வடித்து சமைக்க துவர்ப்பு சுவை இருக்காது.
  - எஸ்.வளர்மதி, கன்னியாகுமரி.
   
* வேப்பம்பூவை எண்ணெயில் பொரித்து வைத்துக் கொண்டு ரசம் ஊற்றிக் கொண்ட பிறகு லேசாக தூவிக் கொண்டு சாப்பிட்டால் மொறு மொறுவென்று சுவையாக இருக்கும்.

* பூரிக்கு மாவு பிசையும் போது கொஞ்சம் சர்க்கரை சேர்த்துப் பிசைந்தால் பூரி அதிக நேரம் நமத்துப் போகாமல் இருக்கும்.
  - கே.ராஜேஸ்வரி, மணப்பாறை.
   
* பதார்த்தத்தில் பீட்ரூட் போடுவதானால் முழுசாக கொதி நீரை ஊற்றி மூடி வைத்து ஆறிய பின் தோல் நீக்கி நறுக்கிச் சேர்த்தால் பார்க்க பயங்கரமாக இருக்காது.

* குழந்தைகளுக்கு வெஜிடபிள் சூப் தரும்போது அதில் துருவிய முந்திரி, பொடியாக நறுக்கிய பிரெட்டை நெய்யில் வறுத்து சூப்பின் மேல் தூவித் தந்தால் குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவர்.

* பச்சரிசி, முந்திரிப்பருப்பு, பாதாம்பருப்பு, ஏலக்காய் இவற்றை ரவை பதத்திற்கு உடைத்துக் கொள்ளவும். தேவையான போது பாலில் சர்க்கரையுடன் உடைத்த ரவையை சேர்த்து மைக்ரோஅவனில் சில நிமிடங்கள் வைத்து எடுக்க ஈஸி பாயசம் ரெடி.

* பிரெட்டை ரோஸ்ட் செய்யும் போது அதிகமாக நெய் தேவைப்படும். இதற்கு பதில் ஏதாவது ஒரு பால்பவுடரை சிறிது வெந்நீரில் கரைத்து பிரெட்டின் மேல் ஊற்றிச் செய்தால் டேஸ்ட் அபாரமாக இருக்கும்.
  - ஆர்.அஜிதா, கம்பம்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • mexicovalcano

  மெக்ஸிகோவில் எரிமலை வெடித்ததில் 8 ஆயிரம் அடி உயரத்திற்கு புகை மண்டலம் : பொதுமக்கள் வெளியேற்றம்

 • modipuja

  உத்தர பிரதேசத்தில் கும்பமேளா நடக்கவுள்ள நதிகரையில் பிரதமர் மோடி பூஜை செய்து வழிபாடு

 • animalsmuggling

  இந்தோனேசியா துறைமுகத்தில் சட்டவிரோதமாக கடத்த முயன்ற பல்வேறு உயிரினங்கள் மீட்பு

 • swimminggeneva

  ஜெனீவாவில் கிறித்துமஸ் தினத்தை முன்னிட்டு நீச்சல் போட்டி : நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு

 • Cairoegyptopen

  மம்மிகளின் உலகமான எகிப்தில் 4400 ஆண்டு பழமை வாய்ந்த பிரமீடு கெய்ரோவில் திறக்கப்பட்டது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்