SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மகளிர் உலகம்

2018-01-11@ 14:50:28

நன்றி குங்குமம் தோழி

பெண்களுக்கு கடுமையான சட்டங்கள் இருந்து வந்த சவுதி அரேபியா நாட்டில்  பெண்கள் மீது காட்டப்பட்ட இறுக்கமான சட்டங்கள் கொஞ்சம் கொஞ்சமாகத் தளர்ந்து வருகின்றன. பெண்களுக்கு உரிமை வழங்குவதில் அரசு மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறது. அண்மையில் பெண்களுக்கு கார் ஓட்டும் உரிமம் வழங்க முடிவு செய்து அதற்கான ஆணையும் வெளியிட்டது.  கடந்த ஜூலை மாதம் பள்ளிகளில் மாணவிகள் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டது.

தற்போது வரும் 2018ஆம் ஆண்டு முதல் விளையாட்டு மைதானங்களுக்கு பார்வையாளர்களாக பெண்களை அனுமதிக்கவும் அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. விஷன் 2030 என்ற திட்டத்தையும் உருவாக்கி அதில் பொருளாதாரம் மற்றும் சமூக சீர்திருத்தங்களை மேற்கொள்ள சவுதி அரேபியா அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.  இதில் பெண்களின் வேலைவாய்ப்பை ஊக்கப்படுத்தும் நோக்கில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சவுதி அரேபியாவின் இந்த நடவடிக்கைகளுக்கு உலகம் முழுவதும் உள்ள பெண்ணுரிமை அமைப்புகள் வரவேற்பு தெரிவித்து வருகின்றது.

 
ரஷ்யாவில் உள்ள மிருகக்காட்சி சாலையில் இருந்த சைபீரியன் புலி ஒன்று உணவு வழங்கிய பெண் காப்பாளர் மீது பாய்ந்து தாக்கிய சம்பவம் ஊடகங்களில் வைரலானது. சைபீரியன் புலி ஒன்றிற்கு உணவு வழங்க பெண் காப்பாளர் ஒருவர் அது அடைக்கப்பட்டிருந்த இடத்திற்குள் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அந்த புலி அவர் மீது பாய்ந்து அவரை மறைவிடத்திற்கு தரதரவென இழுத்து சென்றது.

இதைக் கண்ட பொது மக்கள் கூச்சல் எழுப்பியும், அருகில் இருந்த பொருட்களை புலியின் மீது வீசியும் பெண் காப்பாளரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனால் மிரட்சி அடைந்த புலி காப்பாளரை விட்டு சென்றது. உடன் துரிதமாக செயல்பட்டு மீட்ட சக ஊழியர்கள் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். பலத்த காயங்களுடன் உயிருக்கு ஆபத்தின்றி மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.


ஸ்பெயின் நாட்டில் பெண் ஒருவர் தாயை இழந்த இரு சிங்கக் குட்டிகளை தத்து் எடுத்து வளர்த்து வந்தார். வனத்துறைக்கு இது தெரியவரவே சிங்கக் குட்டிகளை கைப்பற்றி சரணாலயத்தில் ஒப்படைத்து விட்டனர். இந்நிலையில் ஏழு வருடங்கள் கழித்து அந்தப் பெண் சரணாலயம் சென்று அந்த சிங்கக் குட்டிகளை பெயர் சொல்லி அழைத்ததும் சிங்கங்கள் இரண்டும் பாசத்துடன் அவரை நோக்கி ஓடி வந்து அவர் மீது தாவி ஏறி கட்டியணைத்து மாறி மாறிப் பாசத்தை பொழியும் காட்சி காண்போரின் நெஞ்சை பதைபதைக்க வைத்தது. நெஞ்சைப் பதற வைக்கும் இந்தக் காட்சி காணொளியாக ஊடகங்களில் வெளியாகி வைரலானதுடன் பலரையும் ஆச்சரியப்பட வைத்தது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • FoamFightScotland

    முதலாம் ஆண்டு மாணவர்களை வித்தியாசமான முறையில் வரவேற்ற ஸ்காட்லாந்து பல்கலைக்கழம்: புகைப்படங்கள்

  • SALTMarchRashtrapti

    ராஷ்டிரபதி பவன் அருங்காட்சியகத்தில் புதிதாக வைக்கப்பட்டுள்ள காந்தியடிகளின் உருவ சிலைகள்: மாணவர்கள் கண்டுகளிப்பு

  • NagoroJapanVillage

    ஜப்பானில் உள்ள தீவில் வெறிச்சோடிய கிராமத்தை பொம்மைகளால் உயிரூட்டிய பெண்: குவியும் சுற்றுலா பயணிகள்

  • FallFoilageWorld

    உலகின் பல்வேறு நாடுகளில் எடுக்கப்பட்ட இலையுதிர் காலத்தின் அழகிய புகைப்படங்கள்

  • WillaHurricaneMexico

    மெக்சிகோவை மிரட்டவிருக்கும் வில்லா புயல்: முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்