SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பொன் வண்ண மயில்கள்

2018-01-10@ 14:46:10

நன்றி குங்குமம் தோழி

- யாழ் ஸ்ரீதேவி


ஓவியாவுக்கென ரசிகர்கள் எதற்கும் தயாராய் இருக்கிறார்கள். ஓவியா ஆர்மி என ரசிகர்கள் பட்டாளம் அதிகரித்து வருகின்றது. ரசிகர்களே நலம் விரும்பிகளாகவும் மாறி சமூக வலைத்தளத்தில் ஓவியாவின் நல்ல குணங்களை இன்றைய பெண்களோடு இணைத்தும், ஒப்பிட்டும் விவாதம் கிளப்பி வருகின்றனர்.

நந்திதாவுக்கு நம் பக்கத்து வீட்டுப் பெண் போன்ற தோற்றம். சிறப்பான நடிப்பை வழங்குவதில் வல்லவராய் வலம் வரும் நந்திதாவும் ஓவியாவும் இணைந்து ஒரு விளம்பரத்தில் நடித்து பரபரப்பை கிளப்பியுள்ளனர். யூ டியூபில் வலம் வருகின்றன அந்த விளம்பரக் காட்சிகள். மயக்கும் கொலுசுக் கால்கள், இடையில் பொன்வண்டு சோப் வைத்து துணி துவைக்கும் அந்தப் பெண்கள் செய்யும் அலப்பறை நம்மை வியக்க வைக்கின்றது.

மயில் வண்ணச் சேலையில் ஓவியாவும், ஆரஞ்சு வண்ணச் சேலையில் நந்திதாவும் செம ஃபிரஷ்ஷாக வலம் வருகின்றனர். இவர்கள் விளம்பரத்தில் நடித்த போது சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த கலாட்டாக்கள் அதிகம். சிட்டா அட்வர்டைசிங் கம்பெனியின் கிரியேட்டிவ் ஹெட் வசுபதியிடம் ஓவியா, நந்திதாவை இயக்கிய அனுபவம் குறித்துக் கேட்டோம்.

“விளம்பரத்தில் ஸ்டார் வேல்யூ உள்ள பெண்கள். ஆனா ஹோம்லி லுக் இருக்கணும். அதனால ஓவியா, இனியா ரெண்டு பேரையும் மனசில் வெச்சித்தான் கான்செப்ட் உருவாக்கினோம். இனியாவோட டேட் கிடைக்காததால அந்த இடத்தை நந்திதா பெட்டரா பண்ணிக் கொடுத்திருக்காங்க. ஓவியா ரொம்ப போல்டாவும், ஜாலியாவும் இருந்தாங்க. ஷாட் பற்றிச் சொன்ன அடுத்த நிமிஷம் ரெடியா நின்னாங்க.

ஓவியா, நந்திதா ரெண்டு பேருக்குள்ளயும் செம கெமிஸ்ட்ரி. யானைக்கு ரெண்டு நாள் முன்னாடியே பயிற்சி கொடுத்திருந்தோம். அது குழந்தை மாதிரி பழகினதால ஷாட் எடுத்தப்போ ரொம்ப பெட்டராவே ஃபீல் பண்ணினாங்க. ரெண்டு ஹீரோயின்ஸ்... கலாட்டா இல்லாமலா? ரெண்டு பேர் நேரத்தையும் ஃபிக்ஸ் பண்ணி, தனித்தனியா ஃபாலோ பண்ணி ஒருத்தருக்காக இன்னொருத்தர் காத்திருக்காம கவனமா டீல் பண்ணினோம். சின்ன விஷயம் கூட காயப்படுத்திடக் கூடாதுன்றதுல கவனமா இருந்தோம். மூணு நாள் ஷூட். எந்த சிரமமும் இல்லாம முடிச்சிக் கொடுத்தாங்க. ரிச்சான யோசனைக்கு யூ டியூப்லயே நல்ல ரெஸ்பான்ஸ், விரைவில் திரையிலும் பார்க்கலாம்”என்கிறார்.

படங்கள்: பூபதி

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • Dinakaran_Education_Expo

  சென்னையில் தினகரன் நாளிதழின் கல்விக் கண்காட்சி கோலாகலமாக தொடங்கியது

 • mald123

  உலகிலேயே முதல்முறையாக கடலுக்கு அடியில் சொகுசுவிடுதி... மாலத்தீவில் நவம்பர் மாதம் திறப்பு!

 • Marijuana420Festival

  போதை பொருளான கஞ்சாவை, சட்டபூர்வமாக உபயோகிக்கும் 420 திருவிழா: உலகம் முழுவதும் கொண்டாட்டம்

 • milkcenterchennai

  சென்னையில் 24 மணி நேர பால் விற்பனை மையம் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார்

 • 21-04-2018

  21-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்