SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தனித்துவத்துடன் தங்க வேலைப்பாடுகள்

2018-01-10@ 14:42:12

நன்றி குங்குமம் தோழி

ஸ்டார் ஹோட்டல்களிலும் வேறு பல அலுவலகங்களிலும் காணப்படும் சில வேலைப்பாடுகள் தகதகவென மின்னுகின்றனவா? அதன் பின்னால் ஸ்மார்ட் கிரியேஷன்ஸ் இருக்கக்கூடும். தங்க வேலைப் பாடுகளுக்கென 1998ம் ஆண்டு முதல் தற்போது வரை தங்களுக்கென தனி இடத்தை பெற்றுள்ளனர் ஸ்மார்ட் கிரியேஷன்ஸ்.

தங்க வேலைப்பாடுகள் என்றாலே ஆபரணங்கள்தான் நம் நினைவிற்கு வரும்.  ஆனால் இவர்கள் கோபுரங்கள், கலசங்கள் போன்றவற்றை ஒரு கிராம் தங்கம் கொண்டு செய்து வருகிறார்கள். மேலும் இதில் புதிய தொழில்நுட்பங்களை கையாள்வதால் மிகவும் நேர்த்தியாக நம் கற்பனைக்கு ஏற்றவாறு பெறமுடிகிறது. அதாவது கோவில்கள், கார்பரேட் கம்பெனிகளில் அவரவர்  விருப்பத்திற்கேற்றவாறு 24 கேரட் மதிப்புள்ள தங்கப்பூச்சு அலங்காரங்கள் செய்து தரப்படுகிறது.

மேலும் சென்னை, கர்நாடகா, டெல்லி போன்ற இடங்களில் இருக்கக்கூடிய பெரிய பெரிய ஸ்டார் ஹோட்டல்களிலும் இம்மாதிரியான உள் மற்றும் வெளி அலங்காரங்கள் செய்து தருகிறார்கள் என்பது புதுமையான விஷயமாக இருக்கிறது. NTGD தொழில்நுட்பம் என்று சொல்லக் கூடிய காப்பர், ப்ராஸ், சில்வர், பிரான்ஸ் போன்ற உலோகங்களில் 24 கேரட் மதிப்புள்ள தங்கப்பூச்சுகள் பூசப்படுகிறது. ஒரு சதுர அடிக்கு ஐந்து கிராம் தங்கம் என்ற அடிப்படையில் இந்த வேலைப்பாடுகள் நடந்தேறுகிறது.

இதனால் தங்கம் 25 ஆண்டுகள் வரை பிரகாசம் குறையாமல், நிறம் மாறாமல் அப்படியே இருக்க காரணமாக இவர்கள் கூறுவது, தங்கத்தில் செம்பின் அளவை குறைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வருவதே ஆகும். இவர்களின் கோவில் வேலைப்பாடுகள் என்று பார்த்தோமானால் கலசம், கவசம், விமானம், துவஜஸ்தம்பம், ப்ரபை போன்றவை உயர் தரத்தில் செய்து தரப்படுகிறது.

கும்பகோணம் ஒப்பிலியப்பர் கோவில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், அடையாறு ஆனந்தபத்மநாதஸ்வாமி கோவில், சிவகாசி பத்ரகாளியம்மன் கோவில், சபரிமலை ஐயப்பன் கோவில் மற்றும் பெங்களூரில் இருக்கும் இஸ்கான் ஆகிய கோவில்கள் இவர்களின் கலைநயத்திற்கும், தரத்திற்கும் உத்தரவாதத்திற்கும் எடுத்துக் காட்டானவை. பல வருடங்களுக்கு பிறகும் கூட 86 சதவிகிதத்திற்கு அதிகமான தங்கம் அப்படியே மீட்டெடுக்கும் வகையில் சரியான அளவீட்டில் சேர்க்கப்படுகிறது.

இதனால் சுற்றுச்சூழல் எந்த வகையிலும் மாசுபடாமல் இருக்கிறது. இந்தி யாவில் இருந்து பித்தளை பொருட்களை உற்பத்தி, ஏற்றுமதி மற்றும் விநியோகம் செய்து வருகிறது இந்நிறுவனம். இதில் உபயோகப்படுத்தப்படும் தங்கமானது பல தொழில்முறை  சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு பயன்பாட்டிற்கு வருவதனால் வெயில், மழை என எவ்வித பருவநிலை மாற்றங்களையும், அல்ட்ரா வயலெட் கதிர்வீச்சுகளையும் கடந்து நிற்கும் தன்மை கொண்டதாய் இருக்கிறது.

- பி.கமலா தவநிதி

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • Dinakaran_Education_Expo

  சென்னையில் தினகரன் நாளிதழின் கல்விக் கண்காட்சி கோலாகலமாக தொடங்கியது

 • mald123

  உலகிலேயே முதல்முறையாக கடலுக்கு அடியில் சொகுசுவிடுதி... மாலத்தீவில் நவம்பர் மாதம் திறப்பு!

 • Marijuana420Festival

  போதை பொருளான கஞ்சாவை, சட்டபூர்வமாக உபயோகிக்கும் 420 திருவிழா: உலகம் முழுவதும் கொண்டாட்டம்

 • milkcenterchennai

  சென்னையில் 24 மணி நேர பால் விற்பனை மையம் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார்

 • 21-04-2018

  21-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்