SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இதுவும் வன்முறையே

2017-11-10@ 15:15:18

நன்றி குங்குமம் தோழி

 பி.கமலா தவநிதி

கருத்தளவில் ஒருவரிடம் பல முரண்பாடுகள் இருந்தாலும் பொதுத்தளத்தில்  இருப்பவர்கள் எதிர் கருத்தாளரை மரியாதையுடன் அணுகுவதே கண்ணியம். ஆனால்  தமிழக அரசியல் சூழலில் அந்த கண்ணியம் காணாமல் போய்க் கொண்டிருக்கிறது  என்பதைத்தான் சமீபத்திய நிகழ்வுகள் நிரூபிக்கின்றன. அனிதாவின் தற்கொலை  பற்றிய விவாதத்தில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி நீட் தேர்வுக்கு ஆதரவான நிலைப்பாடுடனே  பேசி வருகிறார்.

இந்நிலையில் ‘கிருஷ்ணசாமி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம்  உதவியாகக் கேட்டுத்தான் தன் மகளுக்கு மருத்துவப் படிப்புக்கான இடத்தைப்  பெற்றார்; ஆகவே தன் மகளுக்கு ஒரு நீதி அனிதாவுக்கு ஒரு நீதி என அவர் பேசுவது  தவறு’ என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினரும் திண்டுக்கல் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பாலபாரதி தன்  முகநூல் பக்கத்தில் எழுதினார்.

அது குறித்து கிருஷ்ணசாமியிடம் கேட்டபோது, ‘‘அந்தப் பொம்பளையை நான் சட்டமன்றத்தில் பார்த்ததே இல்லை’’ என்று  குறிப்பிட்டார். ‘பொம்பளை’ என்று அவர் பேசிய தொணி பாலபாரதியை தரந்தாழ்ந்து ஏசுவது போன்று வெளிப்பட்டது. இது குறித்து பாலபாரதியிடம்  கேட்டேன்...

‘‘தான் படித்த தமிழில் பெண்ணை ‘பொம்பளை’ எனக்  குறிப்பதும் அழகு வார்த்தைதான் என்கிறார். அந்த அழகு வார்த்தையை முன்னாள்  முதல்வர் ஜெயலலிதாவிடம் பயன்படுத்தினாரா? இல்லை. அப்படியென்றால் உயர்ந்த இடத்தில் இருக்கும் பெண்ணை மரியாதையாக  பேச வேண்டும், மற்றவர்களை ‘பொம்பளை’ என்று கூறுவதில் தவறேதுமில்லை. இதுதான்  கிருஷ்ணசாமியின் அகராதி.

இது முற்றிலும் பெண்களை இழிவுபடுத்தும் வார்த்தையே. இதைப் பற்றி அவரிடம் கேள்விகளை முன்வைத்தால் ‘‘அப்படியானால் அவர் பொம்பளை இல்லையா?’’ என்றே எதிர்கேள்வி எழுப்புகிறார். இதுதான் பெண் மீதான வன்முறையான வார்த்தை. அவர் கூறிய தோரணையும் கூட கேவலமாகவும், அலட்சியமாகவும்தான் இருந்தது. அரசியலில் ஒரு பொறுப்பில் இருக்கக்கூடியவர் இதுபோன்று பேசுவது முறையான செயலாக தெரியவில்லை.

மிகவும் சாதாரணமான படிக்காத கிராமப்புற மக்களுடன்தான் 15 ஆண்டுகாலமாக எம்எல்ஏவாக இருந்து வேலை செய்து வந்திருக்கிறேன். அப்போது கூட இதுபோன்ற வார்த்தைகளை எதிர்கொண்டது இல்லை. மற்ற கட்சிக்காரர்களும் இதுபோன்று பேசியது கிடையாது. மருத்துவர், ஒரு கட்சியின் தலைவர், மேலும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருக்கு பொதுவெளியில் ஒரு பெண்ணை எப்படி  பேசவேண்டும் என்கிற பண்பை அறியாதது வருத்தமாக இருக்கிறது.

என்னை இழிவாக பேசியதற்கெல்லாம்  நான் எவ்வித கண்டனமும் தெரிவிக்கவில்லை. அனிதாவுக்கு ஒரு நியாயம் உங்களுக்கு ஒரு நியாயமா? என்பதுதான் நான் கேட்ட கேள்வி. தாழ்த்தப்பட்ட மக்களுக்கெல்லாம் இட ஒதுக்கீடு வேண்டாம், 1176 எடுத்தும் நீட் தேர்வு எழுதும் தகுதி அனிதாவுக்கு இல்லை என்று அவர் கூறுவதுதான்  கண்டனத்திற்குரியதாக நான் பார்க்கிறேன்” என்கிறார் பாலபாரதி கம்பீரமாக

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • longestseabridge

  உலகில் எங்கும் இல்லாத தனிச்சிறப்புடன் கட்டி முடிக்கப்பட்ட உலகின் நீளமான கடல் பாலம்

 • delhi_strikepetrol18

  டெல்லியில் பெட்ரோல் பங்குகள் ஸ்டிரைக்: கால் டாக்சி, ஆட்டோ சேவைகள் முடக்கம் !

 • solarcar_race

  சூரிய மின்சக்திகளால் இயங்கும் கார்களுக்கான பந்தயம் சிலி நாட்டில் கொண்டாட்டம்!

 • hondurans_americatrump

  ஹோண்டராஸில் இருந்து அமெரிக்கா நோக்கி நடைபயணம் மேற்கொள்ளும் அகதிகள் !

 • snowfall_kedarnthpics

  கேதார்நாத், பத்ரிநாத்தில் உருவாகியுள்ள பனிப்பொழிவின் புகைப்படங்கள்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்