SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மிரட்டும் டெங்கு

2017-10-20@ 14:53:16

நன்றி  குங்குமம் தோழி

- ஜெ.சதீஷ்

தமிழகத்தின் சுகாதார சீர் கேடு காரணமாக  தொடர்ந்து மக்கள் டெங்கு காய்ச்சலுக்கு பலியாகி வருகிறார்கள். கடந்த 8 மாதங்களில் டெங்கு காய்ச்சலுக்கு தமிழகத்தில் மட்டும் 15 பேர் உயிரிழந்துள்ளதாக ஆய்வுகள் கூறுகிறது. மழைக்காலம் தொடங்கிவிட்டது என்றாலும் சொல்லும் அளவிற்கு தமிழகத்தில் மழை பெய்திடவில்லை. அவ்வப்போது காற்றழுத்த தாழ்வு காரணமாக பெய்யக்கூடிய மழையினால் தேங்கி நிற்கும் மழை நீர் மற்றும் கால்வாய்களில் உள்ள கழிவு நீர், நமது குடியிருப்புகளைச் சுற்றி நீக்கப்படாமல் அலட்சியமாக விடப்படும் கழிவுப் பொருட்களில் தண்ணீர் தேங்கியிருக்கும்.

இவற்றிலிருந்து கொடிய நோய்களை உருவாக்கும் கொசுக்கள் முட்டையிட்டு இனவிருத்தி செய்கின்றன. இது தொடர்பாக சுகாதாரத்துறை எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்கிற குற்றச்சாட்டுகளை மக்கள் முன் வைத்தாலும்,  கொடிய நோய்களிடமிருந்து நம்மை நாமே  பாதுகாப்பது மிகச்சிறந்தது. டெங்கு போன்ற வைரஸ் நோய்களிடமிருந்து எப்படி நம்மை தற்காத்துக்கொள்வது என்பது குறி்த்து குழந்தைகள் நல மருத்துவர்  ச.சேகரிடம் பேசியபோது...

“பகலில் கடிக்கக்கூடிய(Aedes) ஏடிஸ் என்று சொல்லக்கூடிய  கொசுக்களால் டெங்கு காய்ச்சல் பரவுகிறது. இரவு நேரக் கொசுக்களால் பரவுவது மலேரியா காய்ச்சல். டெங்கு காய்ச்சலில் இரண்டு வகை உள்ளது. ஒன்று காய்ச்சலின் தாக்கம் அதிகமாகி பாதிக்கப்பட்டவரை அச்சுறுத்தும். முதல் நாள் ஏற்படும் காய்ச்சல் இடைவிடாமல் அடித்துக்கொண்டிருக்கும். இந்த காய்ச்சலால் broken bone syndrome  என்று சொல்லக்கூடிய எலும்புகளில் தாங்கமுடியாத வலி ஏற்படும்.

அடுத்ததாக Retroorbital pain என்று சொல்லக்கூடிய  கண் வலி ஏற்படும். இதை தொடர்ந்து நான்காம் நாள் காய்ச்சல் குறைந்து உடல் சோர்வு ஏற்பட்டு எழுந்திருக்க முடியாமல் போகும். இந்த அறிகுறிகள் தெரியும் போதே மருத்துவரை சந்திப்பது நல்லது.  இந்த முதல் வகை காய்ச்சலில் ஏழு நாட்களுக்குள் மருத்துவரை சந்தித்து சிகிச்சை பெற்றால் டெங்குவில் இருந்து குணமாகிவிடலாம். 7 நாள் கடந்த பிறகு காய்ச்சலின் வீரியம் அதிகரிக்கும்போதுதான் ஆபத்தான சூழ்நிலைகள் உருவாகின்றன.

மற்றொன்று சாதாரணமாக வரக்கூடிய வைரஸ் காய்ச்சலாக இருக்கும், சாதாரண காய்ச்சல் என்று அலட்சியமாக இருந்துவிடாமல் உடனே மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறவேண்டும். மக்கள் தங்களது சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். வீட்டிலோ வீட்டை சுற்றியோ சிறிதளவு தண்ணீர் கூட தேங்கவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். முழுகால் சட்டை அணிய வேண்டும். குறிப்பாக கொசுக்கள் உற்பத்தியாவதற்கான வாய்ப்புகளை நாம் ஏற்படுத்தக்கூடாது” என்கிறார் இவர்.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 20-10-2018

  20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • tirupathivavacha

  திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

 • kulasaidasaraeight

  வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா

 • 18-10-2018

  18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • thaneerrr_kaari

  தொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்