முடி உதிர்தலை கட்டுபடுத்த சில எளிய டிப்ஸ்

2017-09-26@ 17:54:56

அனைவரும் கவலைப் படக்கூடிய விஷயங்களில் தலைமுடி பிரச்சனையும் முக்கியமாகிவிட்டது. பெண்கள் ஆண்களை விட அதிக அளவில் தலைமுடி பிரச்சனைகளை சந்திக்கின்றனர். இதற்கு காரணம் சரியான பராமரிப்பு இல்லாததே ஆகும். முறையான பராமரிப்பு இல்லாமல் இருந்தால் முடி உதிர்தல், அடர்த்தி குறைதல் போன்ற பிரச்சனை ஏற்படும். அவற்றை எளிய முறையில் கட்டுப்படுத்த சில டிப்ஸ் இதோ..
* குளிக்கும் போதோ அல்லது தலைமுடியை காய வைக்கும் போதோ தலைமுடிக்கு அதிக அழுத்தம் கொடுப்பதன் மூலம் முடி உதிர்வு ஏற்படும். இதற்கு லேசான காட்டன் துணியை பயன்படுத்தினாலே போதும்.
* தலைக்கு குளித்த பின்னர் ஹேர் ஜெல்லை தலைமுடி காய்வதற்கு முன்னர் தடவி வருகின்றனர். இதன் காரணமாகவும் முடி உதிர்கிறது. பொதுவாகவே கேர் ஜெல்லை பயன்படுத்த வேண்டாம்.
* ஆப்பிள் சீடர் வினிகரை நீரில் கலந்து குளிப்பதன் மூலம் தலைமுடி உதிர்வு குறையும். ஆனால் இதை தினமும் செய்தால் முடியில் வறட்சி ஏற்படக் கூடும்.
* கொய்யா இலையை அரைத்து இரவு தூங்குவதற்கு முன் தலையில் தடவி மறுநாள் காலையில் அலசினால் முடி உதிர்தல் குறையும்.
* முள்ளங்கி சாறை தலையின் அடியில் படுமாறு தடவி வந்தால் தலைமுடி உதிர்வது தடுக்கப்பட்டு, தலைமுடியின் வளர்ச்சியும் அதிகரிக்கும்.
* கேஸ்டைல் சோப்புடன் நீர் சேர்த்து ஆப்பிள் சீடர் வினிகர், தேயிலை மர எண்ணெய் ஆகியவற்றை நன்றாக கலக்கவும். பின்பு இதை தலையில் தடவி 30 நிமிடம் கழித்து கழுவினால் முடி உதிர்வுக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.
* முடிக்கு புரோட்டீன் மிகவும் அவசியமானது. அத்தகைய புரோட்டீன் முட்டையில் மட்டுமின்றி, உருளைக்கிழங்கிலும் உள்ளது. அதற்கு உருளைக்கிழங்கை வேக வைத்த தண்ணீரைக் கொண்டு, வாரம் ஒருமுறை முடியை அலசுங்கள். இதனால் அதில் உள்ள இயற்கையான ஸ்டார்ச் முடியின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாக இருக்கும்.
* வெங்காயத்தை நீரில் போட்டு வேக வைத்து, பின் அந்த நீரினால் முடியை அலசலாம் அல்லது வெங்காயத்தை சாறு எடுத்து அதனைக் கொண்டும் முடியை மசாஜ் செய்து ஊற வைத்து குளிர்ந்த நீரில் அலசலாம். இதன் மூலம் முடியின் வளர்ச்சி மற்றும் அடர்த்தி அதிகரிக்கும்.
மேலும் செய்திகள்
ப்யூட்டி பாக்ஸ்
ப்யூட்டி பாக்ஸ்
ப்யூட்டி பாக்ஸ்
கோடையில் கூந்தலை பராமரிக்க சில டிப்ஸ்...
ப்யூட்டி பாக்ஸ்
ப்யூட்டி பாக்ஸ்
26-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்
1,134 உயிர்களை பலிகொண்ட ஆடை தொழிற்சாலை விபத்தின் 5ம் ஆண்டு நினைவு தினம் வங்கதேசத்தில் அனுசரிப்பு
தேசிய பஞ்சாயத்து ராஜ் கூட்டம் : பிரதமர் மோடி பங்கேற்பு
துருக்கியில் பயங்கர நிலநடுக்கம் : 39 பேர் காயம் ; கட்டிடங்கள் இடிந்து தரைமட்டம்
சாமியார் ஆஸ்ராம் மீதான பாலியல் வழக்கு : நல்ல தீர்ப்பு வேண்டி ஆதரவாளர்கள் பிரார்த்தனை; 3 மாநிலங்களில் பலத்த பாதுகாப்பு
LatestNews
சசிகலா சிறை சென்றதற்கு டி.டி.வி.தினகரன் தான் காரணம்: திவாகரன்
21:52
பெங்களூரு அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டி: சென்னை அணிக்கு 206 ரன்கள் வெற்றி இலக்கு
21:46
மதுரை மத்திய சிறையில் நிர்மலாவிடம் நாளை விசாரணை
21:08
சென்னையில் ஒரேநாளில் சிறுமிகள் உட்பட 8 பெண்கள் மாயம்: 2 பேர் கைது
20:41
மதுரை காமராஜர் பல்கலை.யில் துணைவேந்தரிடம் விசாரணை
20:17
பள்ளிக்கல்வி செயலாளர், இயக்குனர் உள்ளிட்டோர் உயர்நீதிமன்றம் கெடு
20:09