SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

லப் டப்... லப் டப் நொடிகள்.

2017-08-21@ 14:27:32

நன்றி குங்குமம் தோழி

பெண்களுக்கு இயல்பிலேயே நிதானமும், பொறுப்புணர்வும் அதிகமாக இருப்பதால் இந்தத் துறையில் நிறைய பெண்கள் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள்.பெர்பியூசன் டெக்னாலஜி என்றால் என்ன? எதிர்காலம் குறித்த ஆயிரம் கனவு மற்றும் எதிர்பார்ப்பு களுடன், கல்லூரிக்குள் நுழையப் போகும் அந்த மகிழ்வான தருணத்தை எதிர்பார்த்து, பள்ளி இறுதி வருடத்தை முடித்துவிட்டு, தேர்வு முடிவுகளுக்காக காத்திருந்த நம் மாணவச் செல்வங்களை, சமீபத்தில் நிகழ்ந்த நீட் தேர்வின் அவலங்கள் விரக்தியின் மனநிலைக்கு கொண்டு சென்றது அனைவரும் அறிந்ததே.மருத்துவம் பயில விரும்பி, பள்ளி மேல்நிலைப் படிப்பில் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடங்கள் கொண்ட பிரிவை எடுத்து, பெற்றோர் மற்றும் கல்வி நிறுவனங்களின் அதீத அழுத்தத்துடன், இரவு பகலாக கண் விழித்து, உழைப்பைச் செலுத்திப் படித்து, பள்ளி இறுதித் தேர்வை முடித்த மாணவர்களுக்கு, மருத்துவம் ஒரு எட்டாக் கனியாக மாறியுள்ளது.

மருத்துவராக வேண்டும் என்ற கனவு நூலிழையில் தவறினால் அவர்கள் சட்டென்று திரும்பிப் பார்ப்பது பொறியியல் சார்ந்த துறைகளையே. மருத்துவராகும் கனவு நிறைவேறவில்லை என்றாலும், மருத்துவத் துறை சார்ந்த யு.ஜி. பி.ஜி. மற்றும் ஓராண்டு, இரண்டு ஆண்டு பட்டயப் படிப்புகள் அலைட் ஹெல்த் சயின்ஸ் மற்றும் பாராமெடிக்கல் கோர்ஸ் என்ற பிரிவுகளில் ஏராளமான துறைகள் மருத்துவக் கல்லூரி வளாகத்துக்குள்ளே இயங்கிக்கொண்டிருக்கின்றன.நமது இளைஞர் சமுதாயம் மருத்துவத் துறை சார்ந்த இந்த படிப்புகளைப் பற்றியும் தெரிந்து கொண்டு பயிலலாம் என்கின்றனர் சென்னையில் இயங்கிக் கொண்டிருக்கும் பிரபல இதய அறுவை சிகிச்சை மருத்துவமனையின் பெர்பியூசன் டெக்னாலஜி மாணவியும் தற்போது ஒரு தனியார் மருத்துவமனையில் ஹவுஸ் சர்ஜனாகவும் பயிற்சியில்  இருக்கும் ஜா நம்மிடம் பேசத் துவங்கினார்.

‘‘நோயாளிகளின் தேவைகளுக்கு ஏற்ப மருத்துவமனைகளில் உள்ள மருத்துவக் கருவிகளை பொருத்தவும், இயக்குவதற்கும், கருவிகளின் இயக்கம் மற்றும் அறுவை சிகிச்சை முறைகளை தெரிந்து கொள்ளவும் இந்தத் துறைகள் உதவுகின்றன. மேலும் நோயாளிகள் உடல்நிலை பற்றியும் நன்கு தெரிந்து கொள்ள முடியும்.இவர்கள் பெரும்பாலும் மருத்துவர்கள் மற்றும் தலைமைச் செவிலியர்களின் உதவியாளராக வேலை செய்வர். மேலும் அறிவியல் பூர்வமான அறிவையும், மருத்துவமனை அனுபவத்தையும் பெற முடியும். பெர்பியூசன் டெக்னாலஜி என்பது நான்காண்டு பட்டப் படிப்பு. எந்த மருத்துவக் கல்லூரியை படிக்கத் தேர்வு செய்கிறோமோ அங்கேயே இதற்கென நுழைவுத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுகள் நடக்கும்.

பனிரெண்டாம் வகுப்பில் 60% முதல் 70% மதிப்பெண்கள் இருந்தால் போதுமானது. மருத்துவமனை இயங்கும் 15 கிலோ மீட்டருக்குள் இப்படிப்பிற்கான கல்லூரிகள் மிக அருகில் இருக்கும். முதல் வருடம் முழுவதும் மருத்துவ மாணவர்கள் படிக்கும் அதே அடிப்படை மருத்துவக் கல்லூரி பாடத் திட்டத்திலே நாங்களும் பயில்வோம்.இரண்டாம் வருடத்திலிருந்து நாங்கள் எடுத்த துறை சார்ந்த பாடத்தை படிக்க ஆரம்பிப்போம். இரண்டாம் ஆண்டின் துவக்கத்திலிருந்து மருத்துவமனை வளாகத்திற்குள்ளே எங்களுக்கான பயிற்சியும் நேரடியாகத் தொடங்கிவிடும். ஆபரேஷன் தியேட்டரில் 2 வகை ஆபரேஷன் நிகழும். ஓப்பன் ஹார்ட் சர்ஜரி மற்றும் குளோஸ்டு ஹார்ட் சர்ஜரி. ஓப்பன் ஹார்ட் சர்ஜரி என்பது ஹார்ட ஓப்பன் பண்ணி அதற்குள் உள்ள நான்கு சேம்பர்களில் எதில் பிரச்சனையோ அந்த இடத்தை பாயின்ட் அவுட் செய்து ஆபரேஷன் பண்ணுவது.

அதாவது வால்வ் பிரச்சனை, இதயத்தில் ஓட்டை என இதயம் தொடர்பான பிரச்சனைகளுக்கு இதயத்தை ஓப்பன் பண்ணும்போது ரத்தம் வெளியேறினால் ஆபரேஷன் செய்ய இயலாது. எனவே ரத்தத்தை நிறுத்தி உள்ளிருக்கும் ரத்தத்தை இரண்டு டியூப்கள்  வழியாக முழு ரத்தத்தையும் வெளியில் எடுத்துவிடுவார்கள்.இதயத்தின் செயல்பாடான மற்ற உறுப்புகளுக்கு ரத்தத்தை பம்ப் செய்யும் செயல்பாட்டை, இதயம் ஒரு நொடிக்கு எத்தனை முறை பம்ப் செய்கிறதோ அதேபோன்று வெளியில் இருக்கும் மெஷின் வழியாக செயல்படுத்தி ரத்தத்தை பெர்பியூசனிஸ்டான நாங்கள் சர்குலேட் பண்ணுவோம். இதயம் செய்யும் அந்த வேலையினை இந்த பெர்பியூசன் மெஷின் செய்யும்.

இதயத்திற்கு மட்டும் ரத்தம் தடை செய்து, உடலின் மற்ற பகுதிகளுக்கு கொடுக்க வேண்டிய ரத்தத்தை நாங்கள் இயந்திரம் வழியாகச் செலுத்துவோம். இதயம் மற்றும் நுரையீரலின் வேலை இந்த மெஷின் வழியாக நிகழும். இந்த வேலையினைச் செய்யும் நாங்கள் பெர்பியூசனிஸ்ட் என மருத்துவத் துறையினரால் அழைக்கப்படுகிறோம்.பெர்பியூசன் இயந்திரம் கொண்டு இயக்குவதைத்தான் பெர்பியூசன் டெக்னாலஜி பட்டப் படிப்பாக நான்கு ஆண்டுகளும் படிக்கிறோம். ஒரு ஓப்பன் ஹார்ட் சர்ஜரி செய்ய ஆறு மணி நேரம் ஆகும். சர்ஜரி முடியும் அந்த மணித்துளிகள் முழுவதும் நோயாளியுடைய இதயத்தின் மொத்த இயக்கமும் எங்களிடத்தில் இருக்கும்.

சர்ஜரி நிகழும் ஆபரேஷன் தியேட்டருக்குள் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களோடு நோயாளிகளுக்கு மிக அருகில் நாங்களும் இயங்கிக் கொண்டிருப்போம். மருத்துவத் துறையில் லைஃப் சயின்ஸ் கல்வி என்பது நோயாளியோடு நேரடியாகத் தொடர்புடையது. இதேபோல் பாராமெடிக்கல் என்பது லேப், பார்மஸி, மருந்து தொடர்பானது.பெர்பியூசன் டெக்னாலஜி தவிர்த்து டயாலசிஸ் டெக்னாலஜி, மெடிக்கல் ரேடியேஷன் டெக்னாலஜி, கார்டியாக்கேர் டெக்னாலஜி, ரேடியாலஜி, அனஸ்தீஷியா, ஆபரேஷன் தியேட்டர் டெக்னாலஜி மற்றும் நியூரோ டெக்னாலஜி, பிசிஷியன் அசிஸ்டன்ட் என பல படிப்புகள் மருத்துவத் துறை சார்ந்து அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இயங்கிக் கொண்டிருக்கின்றன.அவற்றைப் பற்றியும் மாணவர்கள் அறிந்து மருத்துவத் துறை சார்ந்த இந்தப் படிப்புகளை பயின்று நம்மை நம்பி வரும் நோயாளிகளுக்கு சேவை மனப்பான்மையுடன் பணி செய்யலாம்” என முடித்தார் ஸ்ரீஜா.

- மகேஸ்வரி

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • trans_porattam

  ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான படுகொலையை கண்டித்து பிணம் போல் படுத்து திருநங்கைகள் நூதன போராட்டம்

 • neru_park_chinnamalai11

  நேரு பூங்கா - சென்ட்ரல் மற்றும் சின்னமலை - டிஎம்எஸ் இடையிலான மெட்ரோ ரயில் சேவை தொடக்க விழா!

 • stalin_dmk11

  தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் திமுக கூட்டணி கட்சிகள் சாலை மறியல்

 • PlasticawarenessLondon

  லண்டன் பூங்காவில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு நிகழ்ச்சி

 • stalin_arrestkaithu11

  தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக மதுராந்தகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட ஸ்டாலின் கைது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்