SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தினமும் 20 நிமிடங்கள் கை தட்டுங்கள்!

2019-09-30@ 16:34:24

நன்றி குங்குமம் தோழி

பொதுவாக, அடுத்தவர்களை பாராட்டுவதற்கும், சாதனைகளுக்காகவும் அவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக நாம் கைத்தட்டுவது வழக்கம். சிலர் கை தட்டிக் கொண்டே பாட்டு பாடுவார்கள், கோவில் போன்ற இடங்களில் பஜனை பாடும்போதும் கை தட்டிக் கொண்டிருப்பார்கள்.கை தட்டுவது என்பது அடுத்தவர்களை உற்சாகப்படுத்தும் விஷயம் மட்டுமல்ல. கை தட்டுவதால், ஏராளமான நன்மைகள் இருக்கின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா?

ஆம். கை தட்டுவதும் ஒரு விதமான உடற்பயிற்சி தான். கை தட்டுவதன் மூலமாகவே ஏராளமான நோய்களை கட்டுப்படுத்த முடியும் என அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.இரண்டு உள்ளங்கைகளையும் சேர்த்து தட்டும்போது, மூளையின் பெரும்பான்மையான பகுதிகள் இயக்கப்படுகின்றன. உடலின் பல்வேறு உறுப்புகளின் செயல்பாட்டையும் இயக்கக்கூடிய 39 அக்குபஞ்சர் புள்ளிகள் உள்ளங்கைகளில் தான் இருக்கின்றன.

அதனால் தினமும் காலையில் 10 முதல் 20 நிமிடங்கள் வரையிலும் கைகளைத் தட்டுவது உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது. அது நாள் முழுக்க சுறு உங்களை சுறுசுறுப்பாகவும் ஃபிட்டாகவும் வைத்திருக்கும். தினமும் கை தட்டுவதால் அஜீரணக் கோளாறு பிரச்னைகள் நீங்கும். இன்றைய காலகட்டத்தில் 20 வயதைக் கடந்தவுடனேயே முதுகுவலியும் மூட்டுவலியும் வந்து விடுகின்றன.

ஆனால் தினமும் 20 நிமிடங்கள் வரை கை தட்டினால் முதுகுவலியும் மூட்டுவலியும் இருக்கிற இடம் தெரியாமல் பறந்து போய்விடும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். வாதம், ரத்த அழுத்தம் போன்றவையும் கை தட்டுவதால் குணமாகும். ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் வரை புன்னகையுடன் கை தட்டிக் கொண்டிருந்தால், இதயம் மற்றம் கல்லீரல் தொடர்பான நோய்கள் குறையும் என்கின்றனர் மருத்துவர்கள்.குழந்தைகளுக்கு தினமும் கை தட்டும் பழக்கத்தை பயிற்சியாகக் கொடுத்தால் அவர்களின் வார்த்தை உச்சரிப்பு தெளிவாக இருக்கும்.

- கவிதா பாலாஜிகணேஷ், சிதம்பரம்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • PopeFrancisInThailand

    முதல் முறையாக தாய்லாந்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள போப் பிரான்சிஸ்: பாங்காக்கில் நடைபெற்ற கூட்டுப் பிரார்த்தனையில் உரை

  • 130eng_11

    இங்கிலாந்தில் 130 ஆண்டுகால ஆட்டோமொபைல் வரலாற்றை பறைசாற்றும் கண்காட்சி!!

  • plastic22

    பிரான்ஸில் பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு அமைக்கப்பட்ட செயற்கை தீவு: சுற்றுச்சூழலை பாதுகாக்க புதிய முயற்சி

  • pink_kolkatta11

    இந்திய வரலாற்றில் முதல் முறையாக பகல் - இரவு டெஸ்ட் போட்டி : பிங்க் நிறத்தில் ஜொலிக்கும் கொல்கத்தா நகரம்

  • panta22

    சர்வதேச பாண்டா அமைப்பால் தத்தெடுக்கப்பட்ட பழுப்பு நிற பாண்டா: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்