SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆகாயத்தாமரையில் சானிட்டரி நாப்கின்

2019-08-27@ 17:18:59

நன்றி குங்குமம் டாக்டர்

சபாஷ்

மாதவிலக்கு நாட்களை சுகாதாரமாகவும், கவனமாகவும் கடக்க வேண்டிய அவசியம் அந்த பருவங்களில் இருக்கும் எல்லா பெண்களுக்குமே இருக்கிறது. பயன்படுத்தும் நாப்கின்களானது சருமம் தொடர்பான பிரச்னையையோ அல்லது வேறு ஏதேனும் தொற்றுகளையோ உண்டாக்கிவிடுவதாகிவிடக் கூடாது.  முக்கியமாக, பயன்படுத்தித் தூக்கி எறியும் நாப்கினானது சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்காததாகவும் இருக்க வேண்டும். இந்த விழிப்புணர்வு பரவி வருவதன்  காரணமாக, இயற்கை முறையில் நாப்கின் தயாரிக்கும் முயற்சிகள் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு கட்டமாக ஆகாயத்தாமரையில்  நாப்கின் தயாரித்துள்ளார்கள் கேரள மாணவிகள்.

கேரள மாநிலத்தில் உள்ள அஹமத்குரிக்கல் நினைவு உயர்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 10-ஆம் வகுப்பு மாணவிகளானஅஸ்வதி, ஹென்னா சுமி மற்றும்ஸ்ரீ ஜேஷ் வாரியர் என்ற மாணவர் ஆகிய மூவரும் இந்த நாப்கினை வடிவமைத்திருக்கிறார்கள். பள்ளியின் உயிரியல்ஆசிரியர் சரத் வழிகாட்டுதல் பேரில்  இதனைத் தயாரித்துள்ளனர். ஆகாயத்தாமரை செடிகளை துண்டுகளாக்கி,உலர வைத்தால் கிருமிகள் இல்லாமல் சுத்தமாகிவிடும். அதன்பிறகு, செடியின்  தண்டுகளையும், பருத்தி பஞ்சினையும் பயன்படுத்தி திரவத்தை உறிஞ்சும் Pad தயாரிக்கப்படுகிறது. அதன்பிறகு, மேலும் கீழும் பஞ்சு வைக்கப்பட்டு தேன்  மெழுகு கொண்டு சீழ் வைக்கப்படுகிறது.

இந்தப்பேடுகள் புற ஊதாக்கதிர்கள் கொண்டு கிருமிகள் ஏதும் இல்லாமல் சுத்தப்படுத்தப்படுகிறது என்று நாப்கின் தயாரிக்கும் முறையை விளக்குகிறார்கள்  மாணவர்கள்.‘ஆகாயத் தாமரை நாப்கினானது, சந்தையில் விற்கப்படும் மற்ற நாப்கின்களைக் காட்டிலும் 12 மடங்கு அதிகமாக ஈரத்தை உறிஞ்சும் திறனுடையது.  ஏரி, குளம், குட்டைகளில் வளரும் ஆகாயத் தாமரை கலையாகவே பார்க்கப்படுகிறது. எனவே, இதனை சேகரிப்பதற்காக பெரிய செலவுகள் எதுவும் இருக்காது.  இதனால் ஒரு நாப்கின் விலை சராசரியாக மூன்று ரூபாய் என்ற அளவிலேயே விற்க முடியும். இயற்கையான முறையில் தயாராகும் நாப்கின் என்பதால்,  பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும்போது விரைவிலேயே மக்கிவிடும். இதற்கான காப்புரிமை பெறப்பட்டு, விரைவில் விற்பனைக்கு வரும்’ என்கிறார் ஆசிரியர்  சரத்.

- அ.வின்சென்ட்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • greexe_111

  கிரீ்ஸ் நாட்டின் தனாகரா விமானப்படைத் தளத்தில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சி : பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது

 • octo_111

  ஜெர்மனியில் களைகட்டியது அக்டோபர் ஃபெஸ்ட் : உலகின் அனைத்து வகையான பீர்களை ருசித்து மகிழும் பீர் திருவிழா

 • batman_tshirt11

  காமிக்ஸ் உலகின் நாயகன் பேட்மேன் வயது 80 : பேட்மேன் வேடம் அணிந்து ரசிகர்கள் உற்சாகம்; சிக்னல்கள், டி.சர்ட்டுகளில் பளிச்சிட்ட பேட்மேன்

 • circle_of_lightss1

  மாஸ்கோவில் ஒளிவட்டம் திருவிழா : மின்னும் விளக்கொளியில் மாயத் தோற்றங்களை கண்டு ரசித்த மக்கள்

 • climate_strike11

  பருவநிலை மாற்றத்திற்கு எதிராக இந்தியா உள்ளிட்ட 150 நாடுகளில் பேரணி : பூமியைப் பாதுகாக்க கோரி பதாகைகளை ஏந்தி இளைஞர்கள் முழக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்