SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கண்ணுக்கு இமை அழகு

2019-08-19@ 16:47:31

நன்றி குங்குமம் தோழி

தலைமுடிக்கான பிரத்யேக சலூன்களை பார்த்திருக்கிறோம். ஆனால் கண் இமைகளுக்கான பிரத்யேக ஸ்டுடியோவை நாம் கேள்விகூட பட்டிருக்க வாய்ப்பில்லை. ஆச்சரியமாக இருந்தாலும், உண்மைதான்.தென் இந்தியாவிலேயே முதல் முறையாக, கண் இமைகளின் முடிகளை அலங்கரித்து பாதுகாக்க, பிரத்யேகமான ஸ்டுடியோவை நிறுவியிருக்கிறார், சென்னையை சேர்ந்த ரேணுகா ப்ரவீன். இந்த ஸ்டுடியோவைத் திறந்து வைத்தது, வெள்ளித்திரையில் நாம் இன்றும் கொண்டாடும் கண் அழகி, நடிகை மீனாதான்.

ரேணுகா ப்ரவீன், இமைக்கான ஸ்டுடியோவை ஆரம்பிக்கும் முன், இங்கிலாந்தில் ஒரு வங்கியில் பணியாற்றிக் கொண்டிருந்தார். ஆனால் குழந்தைக் காரணமாக வேலையை ெதாடர முடியவில்லை. அதே சமயம் வீட்டில் சும்மா இருக்கவும் பிடிக்கவில்லை. தொழில்முனைவோராக சொந்தமாக தொழில் துவங்கினார்.

சில காரணங்களால் இங்கிலாந்தில் இருந்து சென்னைக்கு வரவேண்டிய நிலை ஏற்பட்டதால், இங்கிலாந்தில் இருந்து சென்னைக்கு பறந்து வந்துவிட்டார். இங்கு வந்தவர் இமைக்கான பிரத்யேகமான ‘லேஷ் ஸ்டுடியோ’வை துவங்கினார். விடுமுறைக்காக லண்டனுக்கு சென்று இருந்தவரை வாட்ஸ்சப்பில் தொடர்புெகாண்டோம்.

கண் இமைகளுக்கு ஸ்டுடியோ, ரொம்ப வித்தியாசமா இருக்கே…ஆமா, நான் வெளிநாட்டிலதான் பல வருஷம் இருந்தேன். அங்க கண் இமைகளுக்காகவே தனியாக சிறப்பு சலூன்கள் இருக்கும். நம்ம அழகை வெளிகாட்டுறதுல கண்களுக்கு நிறைய பங்கு உண்டு. அழகான கண்கள் அவ்ளோ வசீகரமா இருக்கும்.

சென்னையில் கண் இமைகளை அழகாக்க சிறந்த சலூன் எதுவும் நான் பார்க்கல. அவர்களுக்கு அதற்கான முக்கியத்துவமும் தெரியல. காரணம், எனக்கு ஐ-லேஷ் எக்ஸ்டென்ஷன்ஸ், ஐ லிப்ட்ஸ் எல்லாமே செய்து கொள்ள ரொம்ப பிடிக்கும். இங்கிலாந்தில் இருக்கும் போது இதை நான் செய்வது வழக்கம். சென்னைக்கு வந்த பிறகு அதற்கான வழி இங்கில்லை.

அது எனக்கு ரொம்பவும் கவலையா இருந்துச்சு. அப்பதான் இதற்கான பிரத்யேக ஸ்டுடியோவை நாமளே ஆரம்பிச்சா என்னென்னு தோணிச்சு. அப்படித்தான் ‘The Lash Studio.in’ உருவாச்சு. அழகு குறித்த ஸ்டுடியோ என்பதால். முறையான பயிற்சி பெற்று, சான்றிதழ் வாங்கியிருக்கிறேன். இதனால் நாம தினமும் மஸ்காரா, ஐ-லைனர் எல்லாம் போட தேவையில்லை, அப்படியே எழுந்து, ஒரு லிப்ஸ்டிக் போட்டுட்டு போனாலும், முகம் பார்லர் போயிட்டு வந்த மாதிரிதான் ஜொலிக்கும்.  

சென்னை மக்களுக்கு இது புதுசு...  
உண்மைதான், சென்னை மக்கள் இது போன்ற ஒரு விஷயத்தை கேள்விப்பட்டதில்லை. என் நண்பர்கள், உறவினர்கள் கூட இந்தஸ்டுடியோவை  நான் ஆரம்பிச்ச போது என் மேல் பெருசா நம்பிக்கை வைக்கல. வெறும் ஐ-லேஷ் வேண்டாம், நகங்களுக்காகவும் சேர்த்து சலூன் ஆரம்பிக்கலாமேனு நிறைய பேர் அவங்க சஜஷனை சொன்னாங்க. ஆனா, எனக்கு அதில் உடன்பாடு இல்லை.

கண் இமைகளை மட்டுமே நான் கவனம் செலுத்த விரும்பினேன். அதனாலதான், பல சந்தேகங்கள் மற்றும் எதிர்ப்புகளுக்கு நடுவிலும் இதை தைரியமாக ஆரம்பிச்சேன். ஆரம்பிச்ச ஒரு மாசத்திலேயே பல பேர், லேஷ் ஸ்டுடியோவா, அது என்ன?ன்னு கேட்டுத்தான் வருவார்கள். ஆனா வரவங்க சரி ஒரு முறை ட்ரை பண்ணி பாக்கலாமேனு ஆரம்பிச்சு, இப்போ ரெகுலர் கஸ்டமர்ஸ் ஆகிடாங்க.

லேஷ் ஸ்டுடியோவில் உள்ள சர்வீஸ்...
Eye Lash Extension, Eye lash lifting, அப்படினு ரெண்டு முக்கியமான விஷயங்கள் செய்றோம். Eye Lash Extension - அப்படினா, உங்க ஒவ்வொரு கண் இமை முடி மீதும் செயற்கை இமைமுடிகளை வெச்சு ஒட்டிடுவோம். அதுலயே 2D, 3Dனு ஆரம்பிச்சு 6D வரைக்கும் இருக்கும். அதாவது, உங்க ஒரு இமை முடி மீது 2 செயற்கை முடிகள் வைச்சு ஒட்டுனா, அது 2D. இதுமாதிரி, 6D வரைக்கும் செய்யலாம். அதெல்லாம், வாடிக்கையாளர்கள் விருப்பத்தை பொறுத்தது.

அடுத்ததாக Eye lash lifting- இது இயற்கையா தெரியணும்னு நினைக்கிறவங்களுக்கு. அவங்க ஐ-லெஷஸை வளைத்து மேல தூக்கிவிடுவோம். இது உங்களின் கண் இமைகளை அடர்த்தியாகவும் அழகாகவும் எடுத்துக் காட்டும். இதெல்லாம் செய்ய 45 முதல் ஒரு மணி நேரமாகும். ஒவ்வொரு வாடிக்கையாளர்களும் எங்களுக்கு ஸ்பெஷல்தான். அவங்களையும் ஸ்பெஷலா உணர வைப்போம்.

வாடிக்கையாளர்கள் என்ன சொல்றாங்க?


எங்களை பொறுத்தவரை ஒவ்வொரு வாடிக்கையாளருமே எங்களுக்கு முக்கியம் தான். அதற்காக நாங்க சில மணி நேரம் என்றாலும் பார்த்து பார்த்து செய்கிறோம். என் டீம்ல இருக்கிற மத்த ரெண்டு லேஷ் ஆர்டிஸ்டுமே முறையாக பயிற்சி எடுத்தவங்கதான். வாடிக்கையாளர்களுக்கு நிறைவான சர்வீஸ் கொடுப்பதில் நாங்க காம்பிரமைஸ் செய்வதில்லை.

முதல்ல ஸ்டுடி யோவிற்கு வெறும் பிரபலங்கள்தான் வருவாங்கனு நினைச்சேன். ஆனா இப்போ கல்லூரி மாணவிகள், ஹோம் மேக்கர்ஸ், வேலைக்கு போகும் பெண்கள்னு எல்லாத்தரப்பு மக்களும் வராங்க. ரொம்பவே சந்தோஷமா இருக்கு’’ என்றார் ரேணுகா ப்ரவீன்.

ஸ்வேதா கண்ணன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 22-09-2019

  22-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 21-09-2019

  21-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • aljemerss_nadai11

  உலக அல்ஜீமர்ஸ் தினம் : சேத்துப்பட்டு பசுமை பூங்காவில் மெமரி வாக் விழிப்புணர்வு நடைபயணம்

 • china20

  சீனாவின் நடைபெற்ற கருப்பொருள் ஒப்பனை தயாரிப்பு கண்காட்சி: அலங்காரப் பொருட்கள், பொம்மைகள் காட்சிக்கு வைப்பு

 • bo20

  ஆப்கானிஸ்தானில் மருத்துவமனை அருகே குண்டு வெடிப்பு: 20 பேர் பலி, 95 பேர் படுகாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்