SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பெண்களை தொழிலதிபராக்கும் ஃபிரான்சைஸி!

2019-08-07@ 15:25:02

நன்றி குங்குமம் தோழி

பெண் தொழில்முனைவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வரும் சூழலில், இன்னும் பல பெண்கள் தொழில் செய்ய ஆர்வமாக இருந்தாலும் அவர்களுக்கு என்ன தொழில் செய்வது, அதை எப்படி செய்வது என்பதில் சில தயக்கங்கள் உள்ளன. அந்த தடைகளை தாண்டி வெற்றி பெற சில வழிமுறைகள் உள்ளன.

அதற்கான ஒரு வாய்ப்புதான் ஃபிரான்சைஸி என்னும் ஒரு பிராண்டின் உரிமையைப் பெற்று தொழில் நடத்தும் வழிமுறை. ஏராளமான தொழில்முனைவோர்களை உருவாக்கி வருபவரும், பல நிறுவனங்களுக்கு ஃபிரான்சைஸி ஆலோசகராகவும் இருந்து வரும்  ஸ்ட்ராட்டஜைஸர்  ஃபிரான்சைஸி கன்சல்டிங் சர்வீசஸ் (Strategizer Franchise Consulting Services) நிர்வாக இயக்குநர் ஐயப்பன் ராஜேந்திரன், பெண்களுக்கான தொழில்கள் குறித்து நம்மிடம் விரிவாக பேசினார்.

‘‘புதிதாக தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு, குறிப்பாக முன்அனுபவம் இல்லாதவர்களுக்கு ஃபிரான்சைஸி தொழில்கள் மிகவும் சிறந்தது. என்ன தொழில்... எப்படி தொடங்குவது போன்ற குழப்பம் எதுவும் இதில் இல்லை. இதை இப்படித்தான் நடத்த வேண்டும் என்பதும், இவ்வளவு லாபம் கண்டிப்பாக கிடைக்கும் என்பதும் இதில் தெளிவாக தெரிந்த விஷயம். தொழிலை ஏற்று நடத்தி, கிடைக்கும் லாபத்தைப் பகிர்ந்து கொள்வதுதான் இத்தொழில் முறையில் உள்ள அடிப்படை அம்சமாகும். இதற்கு அடிப்படை தேவையானது முதலீடு மட்டுமே. ஏற்கெனவே பிரபலமாக திகழும் நிறுவனங்களின் ஃபிரான்ஸைசாக ஆவது சிறந்தது.

அடிப்படை கல்வி, உயர் கல்வி, கார் சர்வீஸ், உணவகம், காபி ஷாப், அழகு நிலையம், கம்ப்யூட்டர் சர்வீஸ் என எல்லா தொழில்களிலும் ஃபிரான்சைஸி வாய்ப்பு வந்து விட்டது. உங்களது முதலீட்டுக்கு ஏற்பவும், அனுபவத்திற்கு ஏற்பவும் தொழிலை தேர்ந்தெடுத்து கொள்ளலாம். தேர்ந்தெடுக்கும் தொழிலையும், அதன் வியாபார வாய்ப்புகளையும் பொறுத்து முதலீட்டு தொகை அமையும். சில நிறுவனங்கள் டெபாசிட் தொகையை மட்டும் வாங்குகின்றன. இந்த தொகையை குறிப்பிட்ட வருடங்களில் திருப்பி எடுக்கலாம் என்ற உத்தரவாதமும் கொடுக்கப்படுகிறது.

அடிப்படை பயிற்சி, ஊழியர்கள் திறன் மேம்பாட்டு பயிற்சி போன்ற உதவிகளை நிறுவனங்கள் வழங்கும்.வாடிக்கையாளர்கள் சேவையை நிறுவனமே கட்டுப்பாட்டில் வைத்திருக்கும். மூலப்பொருட்கள், விளம்பரம், அலங்காரம், தொழில் தொடர்பான பயிற்சி, தேவையான கருவிகள் உள்பட அனைத்தையும் நிறுவனமே வழங்கிவிடும்.

பொதுவாக, புதிதாக ஒருவர் தொழில் தொடங்கினால் அந்த பிராண்டை மக்கள் மனதில் நிலைக்க வைக்க நீண்ட காலம் பிடிக்கும். அதுவரை தொடர்ந்து செயல்பட வேண்டும். அவ்வாறு நீண்ட காலம் காத்திருக்க முடியாது என்று நினைப்பவர்களுக்கு பரிச்சயமான பிராண்டுகள் சார்ந்த நிறுவனங்களிடம் ஃபிரான்சைஸ் வாய்ப்பு பெற்று தொழில் தொடங்குவது சிறந்தது. இதன்மூலம் நேரடியாக, தொழிலில் முழு கவனத்தையும் செலுத்த முடியும் என்பது இதில் உள்ள முக்கியமான சிறப்பு அம்சம்.    

கடந்த பல வருடங்களாக Franchise தொழிலில் முன்னேற விரும்புபவர்களுக்கு ஓர் ஏணிப்படியாக  உதவி வருகிறோம். பெண் தொழிலதிபர்களை உருவாக்கும் மற்றும் ஊக்குவிக்கும் விதமாக சிறந்த சலுகைகளும், பெண்களுக்கென்றே தனித்துவமான வியாபார யுக்திகளையும் வழங்குகிறோம்.

பிரபலமாக இயங்கி வரும் பல்வேறு நிறுவனங்களோடு ஃபிரான்சைஸி (Franchise ) உடன்படிக்கை செய்துள்ளோம். இதன் மூலம் பல்வேறு மாநிலங்கள் மற்றும் பல வெளிநாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களை ஃபிரான்சைஸியாக தமிழகத்திற்கு கொண்டு வந்து சேர்த்துள்ளோம். இதனால் வேலைவாய்ப்பு உட்பட வருவாய்களையும் கொண்டுவந்து சேர்க்கிறோம்.

ஃபிரான்சைஸி (Franchise), பல வருடங்களாக ஒரு தொழிலை லாபகரமாகச் செய்துகொண்டிருக்கும் தொழிலதிபர், புதிதாக தொழில் தொடங்க இருக்கும் மற்றொருவருக்கு தன் தொழிலின் பெயர், தொழில் நடத்தும் வழிமுறை முதலியவற்றை உபயோகப்படுத்தி அதே தொழிலை வேறு இடங்களில் செய்வதற்கு வழங்கப்படும் உரிமை.

ஒரு தொழிலதிபர் அந்த தொழிலில் சம்பாதித்த செல்வாக்கை நாம் பெற்றுக்கொள்வதால், வாடிக்கையாளர்களைத் தேடி நாம் தொழில்முறை பிரசாரம் செய்து, முதல் படியிலிருந்து முன்னேற வேண்டிய அவசியம் இல்லை. நமக்கு ஃபிரான்சைஸி (Franchise) கொடுத்த தொழிலதிபர் நிற்கும் அதே உயரத்திலிருந்து அந்தத் தொழிலை நாம் நடத்தலாம்.

பெண்களின் முன்னேற்றத்தில் கவனம் செலுத்தும் நாங்கள் எங்கள் நிறுவனத்திலும் பெண்களையே வேலைக்கு அமர்த்தியுள்ளோம். பெண்களுக்கு வரப்பிரசாதமே இந்த ஃபிரான்சைஸி தொழில்.பெண்கள் விரும்பும் அனைத்து துறைகளிலும் ஃபிரான்சைஸி தொழில்கள் உள்ளன. இந்தத் துறையில் இருபது ஆண்டுகள் தொழில் அனுபவம் உள்ளதால், வியாபார நுணுக்கங்கள் மற்றும் தொழிலுக்காக முதலீடு செய்யும்போது எங்கு நாம் வீண் விரையம் செய்கிறோம் என்பதை மிகவும் நுணுக்கமாக உணர்த்திவிடுவோம்.

இதனால் மிகவும் லாபகரமான தொழிலைக் குறைந்த முதலீட்டில் தொழில் முனைவோர்கள் தொடங்கலாம். வீண் பண விரையத்தையும் நேர விரையத்தையும் தொழில் முனைவோர்கள் தவிர்க்கலாம். தொழில் தொடங்கும் முன்பு குடும்ப நபர்களின் முழு ஒத்துழைப்பையும், தொழில் தொடங்கிய பின்னர் தொடர்ந்து குடும்ப நபர்களின் ஆதரவும் இருப்பதை உறுதி செய்துகொண்டால் பெண் தொழில்முனைவோர்கள் இன்னும் அதிகமாகும் வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது’’ என்றார் நிறைவாக ஐயப்பன் ராஜேந்திரன்.

சுயம்புலிங்கம்


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 20-10-2019

  20-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 19-10-2019

  19-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • boniaredlady

  தனது வாழ்க்கையை சிகப்பு வண்ணத்தில் நிரப்பிய மூதாட்டி: வீடு, ஆடை என அனைத்திலும் சிகப்பு வண்ணம்!

 • chisa

  தகவல் தொடர்பு தொழில்நுட்ப செயற்கைக்கோளை விண்ணில் வெற்றிகரமாக ஏவியது சீனா

 • karvachauth_2019

  கணவரின் நலனுக்காக மனைவி அனுசரிக்கும் கர்வா சவுத் விரதம் : நோன்பு இருந்து கணவனை சல்லடை வழியாக பார்க்கும் பெண்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்