SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வீட்டிலே செய்யலாம் மெனிக்யூர்

2019-06-04@ 15:22:36

நன்றி குங்குமம் தோழி

ப்யூட்டி பாக்ஸ்

ஆரோக்கியம் சார்ந்த அழகே அனைவருக்கும் நல்லது!


பெரும்பாலும் மருத்துவர்கள் கை விரல்களில் உள்ள நகங்களை வைத்தே, நமக்குள்ள நோயைக் கண்டுபிடித்துவிடுவார்கள். சிலர் பார்க்க மிகவும்  ஒல்லியான தோற்றத்தில் இருப்பார்கள். ஆனால் அவர்களின் கூந்தல் பார்க்க அடர்த்தியாகவும், நீளமாகவும் அழகான தோற்றத்திலும் இருக்கும்.  அவர்களின் விரல் நகங்களும் அடர்த்தியாக நீளமான வடிவில் அழகாக காட்சி தரும். நமது ஆரோக்கியத்திற்கும் கைவிரல் நகங்களுக்கும் எப்போதும்  நெருங்கிய தொடர்புண்டு. சிலரின் நகங்கள் வெளிர் வெள்ளை நிறத்தில் இருக்கும்.

சிலருக்கு நகத்தின் ஓரங்களில் வளையம் இருக்கும். சிலருக்கு நகங்களில் கோடு போன்ற தோற்றம் இருக்கும். சிலர் நகங்கள் பழுப்பு கலந்த மஞ்சள்  நிறத் தோற்றத்தில் இருக்கும். சிலரது விரல் நகங்கள் அடிக்கடி உடையும். தன்மையுடையதாகவும் இருக்கும். விரல் நகங்கள் இத்தனை விதங்களில்  தோற்றம்தர என்ன காரணம்? நமது உடலுக்குத் தேவையான புரதச் சத்து(protein) மற்றும் சுண்ணாம்புச் சத்தில் (calcium) குறைபாடு இருந்தாலும்,  ரத்தத்தில் அணுக்கள் குறை வாக இருந்தாலும் நகங்கள் பெரும்பாலும் பாதிப்படையத் தொடங்குகிறது.

இது உடல் ரீதியான குறைபாடாகும். இதையும் தாண்டி சிலர் எந்த நேரமும் பாத்திரம் சுத்தம் செய்வது, துணிகளை சுத்தம் செய்வது என்று தண்ணீரில்  வேலை செய்து கொண்டே இருப்பார்கள். அவர்களுக்கு அடிக்கடி நகங்கள் உடையும். முடி அடர்த்தியாக உள்ளவர்கள், விரல்களைக் கொண்டு  தலையினைச் சொரியும்போதும் நகங்கள் தானாக உடைய வாய்ப்புகள் நிறைய உண்டு. உடைந்த நகங்களை பல்லால் கடித்து எடுப்பது மிகவும்  தவறான செயல். இதனால் பல்லில் நோய் தொற்று, எனாமல் இழப்பு, வயிற்றுப் பிரச்சனை போன்றவைகள் வருவதற்கு வாய்ப்பு உண்டு. உடைந்த  நகங்களை பல்லால் கடித்து நீக்காமல், நெயில் ஷேப்பர், நெயில் பைலர் பயன்படுத்தி ஷேப் பண்ணலாம்.

மெனிக்யூரை நாமாகவே வீட்டில் செய்யும் முறை

தேவையான பொருட்கள்

*    வட்ட வடிவப் பாத்திரம்
*    வெதுவெதுப்பான நீர்.
*    கல் உப்பு.
*    மைல்டான ஷாம்பு
*    எலுமிச்சை சாறு
*    ரோஜா இதழ்கள்
*    மென்மையான டூத் ப்ரஷ்
*    பிரிஜ்ஜில் ப்ரீஸான தேங்காய் எண்ணை.
*    அரிசி மாவு
*    தேன்.

செய்முறை


தேங்காய் எண்ணையை முதல் நாளே ப்ரிஜ்ஜில் வைத்து ப்ரீஸ் செய்து கொள்ள வேண்டும். பிரீஸ் செய்த தேங்காய் எண்ணையை க்யூட்டிக்கல்  க்ரீமாக நகங்களில் தடவி, வட்ட வடிவ பாத்திரத்தில் வெதுவெதுப்பான சுடு தண்ணீரை நிரப்பி, அதில் கல் உப்பு, ரோஜா இதழ்கள் அல்லது ரோஸ்  எஸன்ஸ், எலுமிச்சை சாறு இவற்றைக் கலந்து பத்து நிமிடம் கைகளை மூழ்கச் செய்து ஊற வைத்தல் வேண்டும்.

பத்து நிமிடம் கழித்து, விரல் நகங்களை புஷ்ஷர் வைத்து அழுத்தி சுத்தம் செய்து அதிகம் கெமிக்கல் இல்லாத மைல்டான ஷாம்பு கொண்டு அலசி  விரல்களைச் சுத்தம் செய்தல் வேண்டும். டூத் பேஸ்ட்டை நகங்களில் தடவி அதை டூத் ப்ரஷ் கொண்டு விரல் இடுக்குகளையும், விரல்களின்  முட்டிகளையும் சுத்தம் செய்தல் வேண்டும். சுத்தப்படுத்தி க்ளீன் செய்வதற்கு நடுவே, வெதுவெதுப்பான தண்ணீரை ஒவ்வொரு முறையும் மாற்ற  வேண்டும். மாற்றப்படும் தண்ணீரின் வெப்பநிலையினை குறைத்துக் கொண்டே செல்ல வேண்டும்.

சுத்தப்படுத்திய நிலையில், அடுத்ததாக கைகளை ஸ்க்ரப் செய்வதற்காக அரிசி மாவு, தேன், எலுமிச்சை சாறு மூன்றையும் கலந்து கைகள் இரண்டிலும்  தடவி சர்க்கிள் மற்றும் ஆன்டி சர்க்கிள் முறையில் கைகளுக்கு அழுத்தி மசாஜ் கொடுத்தல் வேண்டும். பிறகு கைகளை சுத்தம் செய்து எதாவது ஒரு  மசாஜ் க்ரீம் தடவி சற்று நேரம் தொடர்ந்து மசாஜ் கொடுக்கலாம். பிறகு காட்டன் கொண்டு விரல்களைத் துடைத்து, விரும்பிய வண்ணத்தில் நெயில்  பாலிஸ் போடலாம். நெயில் பாலிஸ் மேல் நெயில் க்ளாஸ் போட்டால் பார்க்க விரல்கள் பளபளப்பாக, அழகாக, நகங்கள் நீண்டு தெரியும்.

நகம் உடையாமல் இருக்க டிப்ஸ்…

*    நகம்  உடையாமல் இருக்க, பயோட்டின் நிறைந்த உணவுகளான மக்காச் சோளம், வேர்க்கடலை, சர்க்கரை வள்ளி கிழங்கு, பாதாம்,  முட்டை, கேரட், தக்காளி, வெள்ளரி, அக்ரூட், காலிஃப்ளவர் இவற்றை மாற்றி மாற்றி தினமும் உணவாக எடுத்தல் வேண்டும்.
*    கால்சியம், இரும்புச் சத்துக்கள் நிறைந்த பேரிச்சம் பழம், பால் போன்றவற்றை உணவாக சேர்க்க வேண்டும்.
*    நெயில் ஸ்ட்ரெங்த்னரைப் பயன் படுத்தலாம்
*    ஏதாவது ஒரு மாய்ச்சரைசர் க்ரீமை விரல் நகங்களுக்குப் பயன்படுத்தலாம்.
*    தூங்கச் செல்வதற்கு முன்பு பேபி ஆயிலை விரல் நகங்களில் தடவி பின் படுக்கச் சென்றால் நகங்கள் மென்மை தன்மையுடன் இருக்கும்.  எளிதில் உடையாது.
*    தண்ணீரில் வேலை செய்யும்போது ரப்பர் க்ளவுஸ்களை பயன்படுத்தலாம்.
*    புரோட்டின்,  கரோட்டின் உள்ள தரமான நெயில் பாலிஸ்களை வாங்கிப் பயன்படுத்துவதே எப்போதும் நல்லது.
*    நெயில் பாலிஸ் ரிமூவரை அடிக்கடி பயன்படுத்துவதை தவிர்த்தல் வேண்டும்.
*    அசிட்டோன் ஃப்ரீ நெயில் ரிமூவரைப் பயன்படுத்துதல் சிறந்தது.  

நகம் அழகாய் தோன்ற டிப்ஸ்

*    எலுமிச்சை சாறு, பாதாம் எண்ணை அல்லது ஆலிவ் ஆயில், ஆப்பிள் சிடார் வினிகர் இவற்றோடு பியர் கலந்து காட்டன் வைத்து  நகங்களில் தடவி ஒரு சில நிமிடங்களில் ஷாம்பால் சுத்தம் செய்தால் நகங்கள் பார்க்க அழகாகவும், உறுதியாகவும் தெரியும்.
*    சீமை சாமந்தி பூ கலந்த டீ, பெப்பர் மின்ட் கலந்த டீ பவுடர் இத்துடன் ஆலிவ் ஆயில், எலுமிச்சை சாறு கலந்த நீரை ஆற வைத்து அதில்  இரண்டு கப் கோதுமை மாவு இணைத்து பேஸ்டாக்கி, விரல்களில் கேப் மாதிரி அணிந்தால் நகங்களுக்குத் தேவையான சத்துக்கள் கிடைப்பதோடு,  நகங்கள் மென்மையாகி, விரல்கள் பார்க்க அழகாகத் தெரியும்.

அடுத்த இதழில்…
பெடிக் க்யூர் செய்வது பற்றிய விளக்கம்…
எழுத்து வடிவம்: மகேஸ்வரி

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 29-02-2020

  29-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • DelhiBackToNormal282

  வன்முறை ஓய்ந்த நிலையில் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பும் வடகிழக்கு டெல்லி: புகைப்படங்கள்

 • president20

  எகிப்தில் முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் காலமானார்: இராணுவ இறுதி சடங்கு செலுத்தி ஆதரவாளர்கள் அஞ்சலி

 • saudipudhuvellai11

  ‘புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது’.. சவூதி அரேபியா பாலைவனங்களில் அரிதான பனிப்பொழிவு

 • vaanvali20

  சிரியா வான்வெளி தாக்குதலில் துருக்கி ராணுவ வீரர்கள் 33 பேர் பரிதாப உயிரிழப்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்