SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கைபேசியிலும் ஜோசியம் பார்க்கலாம்!

2019-05-22@ 12:35:35

நன்றி குங்குமம் தோழி

இன்றைய நாள் எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ள எல்லாருக்கும் ஆர்வம் உண்டு. மக்களின் தேவை என்ன என்று ஜோசியர்கள் எல்லாரும் புரிந்து வைத்துள்ளனர். அதனால் தான் தினமும் காலை எல்லா சேனல்களிலும் ஜோதிட நிபுணர்கள் ராசி பலன்களை பற்றி அலசுகின்றனர். தன் ராசிக்கு எப்போது சந்திராஷ்டமம், ராசிக்குள் சந்திரன் என துவங்கி ராகு, கேது, குரு மற்றும் சனி பலன்கள் என ஒன்று விடாமல் அதற்கான பலன்களை மக்கள் முன் வைக்கிறார்கள்.

இந்த பலன்களுக்கு ஏற்ப பின்பற்றுபவர்களும் உண்டு. சிலர் எதற்கு எடுத்தாலும் தங்களின் ஜாதகத்தை கணிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள். அதற்கான பரிகார வழிபாடுகள் செய்யவும் தயங்குவதில்லை. உங்களின் ஜாதகத்தை பற்றி தெரிந்து கொள்ள ஜோதிட நிபுணர்களை இனி நாட வேண்டும் என்ற அவசியம் இல்லை. உங்களின் ராசிக்கு என்ன பலன்கள் மற்றும் ஜாதகத்தில் குரு மற்றும் சனியின் நிலை என்ன என்பதை ஜோதிட ஆப்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம். ஆண்ட்ராய்ட் மொபைலில் டவுன்லோட் செய்யுங்க... உங்களின் அன்றாட பலனை தெரிந்து கொள்ளுங்க.

Astrology In Tamil

ஜாதகக் கட்டம், பஞ்சாங்கம், ஜாதக பொருத்தம் அனைத்தையும் தமிழில் Astrology In Tamil மூலம் தெரிந்துக் கொள்ளலாம். ஜோதிடம் குறித்து தெரிந்து கொள்ள ஆர்வம் உள்ளவர்கள் மற்றும் அதை பற்றி படிக்க விரும்புபவர்களுக்கு இந்த ஆப் சிறந்த வழிகாட்டியாக அமையும். இதில் 200 ஆண்டுக்கான தமிழ் நாள்காட்டி, மாத பஞ்சாங்கம், ஜாதகம், மணப்பொருத்தம் குறித்த அனைத்து விஷயங்களும் பிரபல ஜோதிடர்களால் இதில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆப்பில் உள்ள பஞ்சாங்கம் தென்னிந்தியாவின் மிகவும் நம்பிக்கைக்குரிய பஞ்சாங்கமாகும். மேலும் இந்த பஞ்சாங்கம் ஜோதிட ஆய்வாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு முழுமையான தொகுப்பாக அமையும்.
இந்த ஆப்பில் உள்ள முக்கிய அம்சங்கள்

* கி.பி.1900 முதல் கி.பி. 2100 வரையிலான பஞ்சாங்கம் இதில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
* ஒவ்வொரு ராசியின் பலம் மற்றும் பலவீனம் பற்றிய குறிப்புகள் உள்ளன.
* ஆங்கிலம், தமிழ், மலையாளம், சாகா மற்றும் கலிடினம் ஆகிய ஐந்து நாள்காட்டிகள் இதில் உள்ளன.
* ஒவ்வொரு ராசியின் சந்திராஷ்டமம், சனிப் பெயர்ச்சி, ஏழரை சனி, அஷ்டம சனி, ராகு கேது... போன்ற பலன்களை பற்றி விரிவான தொகுப்புகள் உள்ளன.
* தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் இருப்பதால், நாம் விரும்பும் மொழியில் நம்முடைய பலன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
* ஒருவரின் மணப்பொருத்தத்தை கணித்தும் பெறலாம்.
* 14 நாட்கள் இதனை நாம் இலவசமாக பயன்படுத்தலாம். அதன் பிறகு தேவைப்பட்டால் 180 நாட்களுக்கு அதன் பயன்பாட்டை நீடித்துக் கொள்ளலாம்.

Astroguru  

ஜோதிடம் கணிப்புகள், இலவச தினசரி ஜாதகம், கைரேகை என ஒருவரின் தனிப்பட்ட அதிர்ஷ்டத்தை குறிக்கும் ஆப்தான் Astroguru. இதில் தினசரிபலன், வாரபலன், ஆளுமை சோதனைகள் மற்றும் ஜோதிடவியல் குறித்த செய்திகள் அனைத்தும் உள்ளன. Astroguru மட்டுமே உங்களின் கைரேகைகளை ஸ்கேன் செய்து உடனடியாக ரேகைகளின் பலன்களை அள்ளித் தருகிறது. ஜோதிடம், கைரேகை, ஜாதகம் ஆகியவற்றின் சிறந்த பயன்பாட்டினை வேறு எந்த ஆப்பும் கொடுப்பதில்லை.

உங்களின் பிறந்தநாள் மற்றும் கைரேகைகள் கொண்டு உங்கள் எதிர்காலத்தை கணிக்கலாம். இதற்காக சிறந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்தினாலும், இவர்கள் பழங்கால வேதாந்தங்கள் மற்றும் ஹிந்து முறைப்படி ஜாதகங்களை ஆராய்வதால், இவர்களின் கணிப்பு மிகவும் துல்லியமாக உள்ளது. உங்க ராசியின் நட்சத்திரங்கள் என்ன பலனை அளிக்கிறது? உங்களின் தொழில் சார்ந்த கேள்விகள்? மணவாழ்க்கை மகிழ்ச்சியாக அமையுமா?.... இது போன்ற பல்வேறு கேள்விகளுக்கான விடைகளை இந்த ஆப் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

* எல்லா ராசி மற்றும் நட்சத்திரங்களுக்கான வார பலன்களை இதில் தெரிந்து கொள்ளலாம்.
* கைரேகையில் மிகவும் முக்கியமானது மூன்று ரேகை. இதயம், தலை எழுத்து மற்றும் வாழ்க்கை குறித்த ரேகைகள். இதயரேகை உங்கள் காதல், நட்பு மற்றும் கல்யாண வாழ்க்கையை குறிக்கும். தலை எழுத்து ரேகை உங்களின் தொழில், வெற்றி மற்றும் செல்வம் சார்ந்தது. கடைசியாக வாழ்க்கை பற்றிய ரேகை உங்களின் ஆரோக்கியம் மற்றும் ஆற்றல் பற்றியது. உங்களின் ரேகைகளை ஸ்கேன் செய்யுங்கள் உங்களை பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்.
* ஒவ்வொருவரின் ஜாதகத்திற்கு ஏற்ற குணங்கள் மாறுபடும். உங்களின் ஜாதகத்தில் உள்ள மறைக்கப்பட்டுள்ள குணங்கள் மற்றும் உங்களின் பலம் மற்றும் பலவீனம் குறித்து தெரிந்து கொள்ளுங்கள். உங்களுடையது மட்டுமல்ல, நீங்கள் திருமணம் செய்து கொள்ள போகிறவர்களின் ஜாதகத்தையும் பார்த்து உங்களுக்கு பொருந்துமா என்றும் தெரிந்து கொள்ளலாம்.
* ஒருவர் பிறந்த நாள், நேரம், வருடம் மற்றும் இடத்தை கொண்டு அவரின் குண்டலி அல்லது வேத பிறப்பு விளக்கப் படத்தை இந்த ஆப் மூலம் உருவாக்கலாம்.
* தமிழ் மட்டும் அல்லாமல் ஸ்பானிஷ், போர்ச்சுகல், ஹிந்தி, தெலுங்கு, இத்தாலியன், அராபிக், சீனம், பெர்சியன், ஜப்பான், துருக்கி, ரஷ்யா, பெங்காலி, கன்னடா, ஜெர்மன், கொரியன் மற்றும் பிரஞ்ச் போன்ற மொழிகளிலும் உங்களின் எதிர்காலத்தை கணிக்கலாம்.
ஜோதிடம் விஞ்ஞானம் சார்ந்த விஷயம். அந்த அறிவியலை புரிந்து கொள்ள இந்த ஆப் எல்லாருக்கும் மிகவும் பயனுள்ளதாக அமையும். விரைவில் ஜாதகம் மற்றும் ஜோதிடம் குறித்த சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு ஜோதிட நிபுணர்கள் இதில் பதில் அளிக்க உள்ளனர்.

Tamil Jathagam


Tamil Jathagam ஆப் மூலம் ஒருவரின் பிறந்த நாள் ஜாதகம், ராசிபலன் மற்றும் பல ஜோதிட பயன்பாடுகள் குறித்து தெரிந்து கொள்ள முடியும். நம்முடைய ராசி, நட்சத்திரம் மற்றும் ஜாதக கட்டம் அனைத்தும் நம்முடைய வாழ்க்கைக்கு நேரடி தாக்கம் உள்ளது என நம் முன்னோர்கள் கணித்துள்ளனர். இது நம்முடைய வாழ்க்கையில் நல்லது கெட்டது அனைத்து தாக்கத்தையும் ஏற்படுத்தும். தமிழ் ஜோசியத்தில் பல வகை உள்ளது. நாடி ஜோசியம், கிளி ஜோசியம், கைரேகை ஜோசியம், ஜாதகக் கணிப்பு மற்றும் பல. இவை அனைத்தும் நம்முடைய எதிர்காலத்தை கணிக்க உதவுகிறது.

Tamil Jathagam இலவச ஆப் என்பதால் இதை பயன்படுத்தபவர்களுக்கு பல பயனுள்ள மற்றும் துல்லியமான பயன்பாடுகளை திருப்தியாக அளிக்கிறது. ஜாதக கட்டம் மூலம் ஒருவரின் பிறந்த தேதி, நேரம், இடம் குறித்து ஒருவரின் ஜாதகத்தை துல்லியமாக இந்த ஆப் மூலம் கணிக்கலாம். அதுமட்டும் இல்லாமல் இந்த ஆப் மூலம் தினசரி, மாதம், வருட மற்றும் வார ராசி பலன்களையும் தெரிந்து கொள்ள முடியும். இதில் உங்கள் ராசி மற்றும் நட்சத்திரம் என்ன என்றும் தெரிந்து கொள்ளலாம். எண்கள் நம் வாழ்வில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. நியுமராலஜி மூலம் நம்முடைய பெயர்கள் மூலம் கணிக்கப்படும் எண்கள்,

பிறந்த நாள் தேதி குறித்து துல்லியமாக நம் பலன்கள் மற்றும் குணாதிசயங்களை தெரிந்து கொள்ள முடியும். குழந்தை பிறந்த நாளை கொண்டு அவர்களின் ஜாதக பெயர்களையும் இந்த ஆப் மூலம் கண்டறியலாம். வருடங்கள் தோறும் மாறும் குரு மற்றும் சனிப் பெயர்ச்சி பலன்களையும் நாம் இதில் தெரிந்து கொள்ள மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஒவ்வொரு ராசிக்கும் அதன் பலன்களை கொண்டு பரிகாரங்களும் உண்டு. அது என்ன என்பதையும் நாம் தெரிந்து கொண்டு அதன்படி கடைப்பிடிப்பதாலும் நமக்கான பலன்களை அடைய முடியும். இவை மட்டும் இல்லாமல் முகூர்த்த நாட்கள், புது வீட்டுக்கு செல்ல இருப்பவர்களுக்கு கிரகப்பிரவேசம் செய்யக்கூடிய நாட்கள் குறித்த தகவல்களும் இதில் உள்ளன.

Thirumana Porutham

திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்று சொல்வதுண்டு. நம்முடைய இந்திய கலாச்சாரப்படி ஒரு திருமணம் ஆண், பெண் மட்டும் இணைக்கும் சம்பிரதாயம் இல்லை. இரண்டு குடும்பங்களையும் இணைக்கும் விழா என்றே சொல்லலாம். ஒரு பெண்ணுக்கும் ஆண்மகனுக்கும் திருமணம் நிச்சயிக்கும் முன் அவர்களின் ஜாதகப் பொருத்தம் நன்றாக உள்ளதா என்று பார்ப்பது வழக்கம். காரணம் இருவரின் ஜாதகமும் நன்றாக பொருந்தினால் தான் அவர்களின் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்பது நம்முடைய பாரம்பரிய நம்பிக்கை.

மேலும் இதில் இருவருக்கும் இடையே உள்ள காதல், அன்பு மட்டும் இல்லை, அவர்களின் பொருளாதார நிலை, ஆரோக்கியம் அனைத்துமே நாம் ஜாதகப் பொருத்தம் மூலம் கணிக்க முடியும். இருவருக்கும் குறைந்த பட்சம் பத்து பொருத்தமாவது இருக்க வேண்டும். இதற்கென திருமண பொருத்த மையங்கள் உள்ளன. அங்கும் பொருத்தம் பார்த்துக் கொள்ளலாம். அல்லது ஜோதிடரிடமும் இருவரின் ஜாதகத்தை கொடுத்து பொருத்தம் பார்க்கலாம். திருமணத்தை சொர்க்கமாக மாற்ற இருவரின் நட்சத்திரங்களை பொருத்தம் பார்க்க வேண்டும்.

திருமண பொருத்தம் ஆப்பில் எல்லா ராசிக்கான பொருத்தம் பற்றி தெரிந்து கொள்ள முடியும். மேலும் 12 ராசிப்பொருத்தம் குறித்த விரிவான விளக்கங்களும் இதில் உள்ளன. ஒவ்வொரு ராசியிலும் இருக்கும் நட்சத்திரங்கள் எந்த நட்சத்திரங்களுடன் பொருந்தும் என்பது இதில் விளக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது. இதனை பார்க்க இன்டர்நெட் வசதி வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஒரு முறை டவுன்லோட் செய்தாலே போதும். அதன் பிறகு எப்போது வேண்டும் என்றாலும் பொருத்தம் பார்த்துக் கொள்ளலாம்.

- கார்த்திக் ஷண்முகம்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • adayaru_makkal_kumbha1

  அடையாறு அனந்த பத்மநாப சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம் : பக்தர்கள் சாமி தரிசனம்

 • oranguttan_monkey111

  50வது பிறந்த நாளை பரிசுப் பெட்டிகளுடன் கேக் ருசித்து கொண்டாடிய ஓராங்குட்டான் குரங்கு

 • malai_vangam11196

  196 நாட்களுக்கு பிறகு சென்னையின் பல்வேறு இடங்களில் மழை : வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி

 • amerikaa_aathal11

  900 மீட்டர் உயரம் கொண்ட பாறை மீது ஏறி 10 வயது அமெரிக்க சிறுமி அசத்தல்

 • 20-06-2019

  20-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்