SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இயற்கை எழிலில் நவீன கிராமம்!

2019-04-01@ 17:32:35

நன்றி குங்குமம் தோழி

வாகனப் புகை மண்டலத்தில் வாழப் பழகிய நம்மில் பலர் இயற்கையான முறையில் வாழ வேண்டும் என்ற எண்ணம் கொஞ்சம் கொஞ்சமா துளிர் விட  ஆரம்பித்துள்ளது. ஐ.டி துறையில் வேலை பார்த்தாலும், கிராமத்தில் ஒரு நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார்கள். ஒரு சிலர் இதற்காகவே ஒரு  நிலத்தை வாங்கி அங்கு தோட்டம், ஆடு, மாடுகளுடன் செட்டிலாகி வருகின்றனர்.

ஒரு குடும்பமாக மாறி வந்த இவர்கள் தற்போது ஒட்டுமொத்தமாக ஒரு மினி கிராமத்தை அமைக்கவும் ஆரம்பித்துவிட்டனர். தெலுங்கானா மாநிலம்  ஐதராபாத்தில் வசித்து வந்த சில குடும்பங்களுக்கு நகர வாழ்க்கை போரடித்துவிட்டது. இயற்கையான சூழ்நிலையில் வாழ வேண்டும் என்று  ஆசைப்பட்டனர். தங்களுக்கு தேவையான காய்கறிகளை தாங்களே உற்பத்தி செய்து, ஆடு மாடுகளுடன் வாழ வேண்டும் என பற்பல கனவுகள்  அவர்களுக்கு இருந்தது. அந்த சிலர் 40 குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதுதான் ஆச்சரியம்.

அந்த 40 குடும்பத்தில் ஒருவர்தான் மாது ரெட்டி. இயற்கை சார்ந்து வாழ வேண்டும் என்று விரும்பிய இவர் தான் முதல் முதலில் தன் குடும்பத்துடன்  ஐதராபாத்தின் புறநகர் பகுதியான அசிஸ் நகரில் குடியேறினார். அவரை தொடர்ந்து பலர் அங்கு குடிப்பெயரத் தொடங்கினர். இவர்களில் பலர் கட்டிட  பொறியாளர்கள் என்பதால், தங்குவதற்கு மூங்கிலில் அழகான குடில் அமைத்தனர். அடுத்து மின்சார வசதியையும் சோலார் வசதியும் அமைத்துக்  கொண்டனர். அவர்களின் வீட்டில் சோலார் மின் தகடுகள் பதித்தனர். அவற்றில் இருந்து 0.8 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய ஆரம்பித்தனர்.

அதைத்தான் அவர்களின் அத்தியாவசிய மின்சார தேவைக்காக பயன்படுத்தி வருகின்றனர். அருகே உள்ள விவசாய நிலத்தில்  தாங்கள் விரும்பும்  காய்கறிகள், பழங்களை ஆர்கானிக் முறையில் பயிரிட்டனர். இதற்கான இயற்கை உரங்களையும் அவர்கள் வளர்க்கும் 50 ஆடுகள், 60 மாடுகள்,  கோழிகள் ஆகியவற்றின் சாணங்களில் இருந்தே தயாரிக்கின்றனர். நிலத்தில் விளையும் காய்கறிகள் மற்றும் பழங்கள் தான் இவர்கள் சமையல்  அறையில் உணவாக சமைக்கப்படுகிறது.  இப்போது இந்த இயற்கை கிராமம் தோட்ட வேலை, களைப்பறித்தல், நீர் பாய்ச்சுதல், கோழி வளர்ப்பு என  400 பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கிறது.

இது குறித்து மாது ரெட்டி கூறுகையில், ‘‘நான் முதலில் இங்கு குடியேறியபோது எந்த வசதியும் இல்லை. என் வீட்டுக்கு ‘காடு வீடு’ன்னு பெயர்.  கால்நடைகளை பராமரிப்பது, பறவைகளை ரசிப்பது தான் என்னுடைய முக்கிய வேலையாக இருந்தது. என் மனைவி சுனிதாவுக்கோ, காய்கறி  செடிகளுக்கு நீர் பாய்ச்சுவது, உரம் இடுவதுன்னு’’ அவரும் இயற்கையுடன் ஒன்ற ஆரம்பித்தார். இப்பகுதியில் வசிக்கும் 4 வயது சிறுமி ஒருவர்  கூறுகையில், ‘‘செல்போன், தொலைக்காட்சி  இருந்தும், ஐதராபாத் எனக்கு போரடித்தது. இந்த தோட்டத்து வீடு ரொம்ப பிடிச்சிருக்கு. மரங்களை சுற்றி  விளையாடுறேன். பூக்களை பறிக்கிறேன்’’ என்றாள் ஆர்வமாக.

கோமதி

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • UkraineCoronaProtest

  கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சீனாவில் இருந்து மக்களை அழைத்து வந்ததற்கு எதிர்ப்பு: உக்ரைனில் வெடித்தது போராடடம்!

 • puthu2020

  அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தங்குவதற்காக டெல்லி மௌரியா ஹோட்டலில் ஆடம்பரமாகத் தயார் செய்யப்பட்டுள்ள பிரெசிடென்ட் சூட்!!

 • rayil21

  ஆஸ்திரேலியாவில் நொடி பொழுதில் தரம்புரண்ட பயணிகள் ரயில்: 2 பேர் பலி...ஏராளமானோர் படுகாயம்!

 • coronaa_vugaan11

  கொரொனா வைரஸ் வராம பின்ன என்ன வரும்? - பறவைகள், முயல்கள், வெளவால்கள், பாம்புகள் விற்கப்படும் வுஹான் கடல் உணவு சந்தை!!!

 • pakistan21

  பெங்களூருவில் நடைபெற்ற குடியுரிமை சட்டத்திற்கு எதிரான பேரணியில் 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' என்று கோஷம் போட்ட பெண் கைது: போலீசார் அதிரடி!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்