SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கிச்சன் டிப்ஸ்

2019-02-07@ 17:08:07

*    இஞ்சி நீண்ட நாள் கெடாமல் இருக்க ஒரு கிண்ணத்தில் இஞ்சியை வைத்து தண்ணீர் ஊற்றி பிரிட்ஜில் வைக்கலாம். தண்ணீரை மட்டும் 2 நாட்களுக்கு ஒரு முறை மாற்றி வந்தால் இஞ்சி நீண்ட நாட்கள் பிரஷ்ஷாக இருக்கும்.

*    அரிசி, காய்கனிகள் கழுவிய தண்ணீரை வீணாக்காமல் செடிகளுக்கு ஊற்றினால் அவை நன்றாக வளரும்.

*    காலி பிளவரை சமைக்கும் போது ஒரு டீஸ்பூன் பால் சேர்த்தால் அதன் வெள்ளை நிறம் மாறாமல் இருக்கும்.

*    சப்பாத்திக்கு மாவு பிசைவதற்கு முன்னர் சிறிதளவு உப்பை கையில் தடவினால் ஒட்டாது.

*    பில்டர் காபி டிகாஷன் தயாரான உடன் அப்படியே எடுத்து கலக்காமல் சிறிது சூடாக்கி பின்னர்  கலந்தால் காபி வாசனை அதிகமாக இருக்கும்.

*    மாம்பழ மில்க் ஷேக் செய்யும் போது குளிர்ந்த பால் பாதியளவும், கன்டென்ஸ்டு மில்க் பாதியும் கலந்து தயாரித்தால் சுவை கூடுதலாக இருக்கும்.

*    அடை மாவில் தண்ணீர் அதிகமாகி விட்டால் சோளமாவை கலந்தால் ெகட்டியாகும். சுவையும் நன்றாக இருக்கும்.உளுந்து வடை செய்யும்போது மாவில் சிறிதளவு சேமியாவை பொடித்து போட்டால் நன்றாக இருக்கும்.

*    சப்பாத்தி குருமாவில் பைனாப்பிள் துண்டுகள், திராட்சை, கிஸ்மிஸ்பழம் போன்றவைகளை சேர்த்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர்.

*    சாம்பார் பொடி செய்யும்போது சிறிதளவு சுக்கை தட்டி போட்டு கலந்து அரைக்க வேண்டும். இதனால் வாசனை கூடும். பருப்பில் உள்ள வாயுவையும் போக்கும். பாயசம் செய்யும் போதும் சிறிது சுக்கு போடலாம்.

*    ரவா தோசை மொறுமொறுப்பாக வருவதற்கு ரவையை நன்றாக வறுத்து அதன் பின்னர் அரைமணி நேரம் நீரில் ஊற வைத்து மற்ற உணவு பொருட்களை சேர்க்க வேண்டும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • MummifiedFoal

    42 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இறந்த குதிரையின் உடலில் உறைந்த ரத்தம்..: ரஷ்ய விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

  • SriLankaHomage

    இலங்கை தொடர் வெடிகுண்டு தாக்குதலுக்கு உலகச் சமூகங்கள் அஞ்சலி: பிரான்சின் ஈபிள் டவரில் விளக்குகள் அணைப்பு!

  • selphiGorilla

    கொரில்லாக்களையும் விட்டு வைக்காத செல்ஃபி மோகம் : குஷியான போஸ்கள்

  • QingdaoNavalParade

    சீனாவில் நடைபெறவுள்ள பிரம்மாண்ட கப்பல் அணிவகுப்பை ஒட்டி துறைமுகம் வந்தடையும் பல்வேறு நாடுகளின் போர்க்கப்பல்கள்!

  • CaucaLandslide

    கொலம்பியாவில் கனமழை காரணமாக ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் சிக்கி 14 பேர் பலி..: மீட்பு பணிகள் தீவிரம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்