SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

30 மணி நேர புடவை!

2018-11-29@ 17:33:38

நன்றி குங்குமம் தோழி

சேலைகளில் வண்ணம் தீட்டலாம்… சிறப்பான வருமானம் பார்க்கலாம்!

எத்தனை மாடர்ன் உடைகள் வந்தாலும் டிரெண்ட் மாறினாலும் புடவை எப்போதும் ஸ்பெஷல்தான். அதிலும் ஒரு புடவை உருவாக்க 30 முதல் 40 மணி நேரம் ஆகும் எனில் அந்தப் புடவை எவ்வளவு ஸ்பெஷலாக இருக்கும். ஆச்சர்யமாக இருக்கிறதா? ஆம், 25 வயதான டிசைனர் நீனா ரெட்டி ஒவ்வொரு புடவையையும் சுமார் 40 மணி நேரம் செலவிட்டு டிசைன் செய்கிறார். ஏன்? அவரிடமே பேசினோம்‘‘வேரபிள் ஆர்ட் (Wearable Art) இதுதான் என்னுடைய தீம். நான் சென்னை பொண்ணு. 20 நாட்களுக்கு முன்னாடிதான் ‘தனோடி‘ (Tanoti) என்கிற ஆன்லைன் ஃபேஷன் லேபெல் உருவாக்கி அதுல என்னுடைய புராடெக்ட் எல்லாம் விற்பனைக்குக் கொண்டு வந்தேன்.  

இன்னைக்கு புத்தகத்துல வர்ற அளவுக்கு என் ஒர்க் இருக்கும்னு நான் நினைக்கவே இல்லை. டெக்ஸ்டைல் டிசைனிங்ல மாஸ்டர் டிகிரியும், விஷுவல் ஆர்ட்ல பேச்சிலர் டிகிரியும் படிச்சேன். ஓவியத்தையும் ஃபேஷனையும் எனக்குப் பிரிக்கப் பிடிக்கலை. அப்படி யோசிச்சதுதான் இந்த ‘வேரபிள் ஆர்ட்’ புடவைகள். கஸ்டமர் அவங்களே அவங்களுக்குப் பிடிச்ச மெட்டீரியல்களை அதாவது ப்ளைன் புடவை தேர்வு செய்து கொடுத்தா அதுல அவங்களுக்குப் பிடிச்ச தீம்கள்ல நான் பெயின்ட் பண்ணிக் கொடுப்பேன்.

என்னுடைய புடவைகள் ரொம்ப அடிக்கிற கலர்கள்லயோ அல்லது நம்மளை டாமினேட் பண்ற டிசைன்களாவோ இருக்காது. மென்மையான, அதே சமயம் தனித்துவமா இருக்கணும். இதுதான் என் கான்செப்ட். அதேபோல என்கிட்ட இருக்கற மெட்டீரியல்கள் எல்லாமே துபாய், ஆந்திராவுல இருந்துதான் வாங்குறேன். அதனாலேயே மெட்டீரியல் இங்க இருக்கறதைக் காட்டிலும் நிச்சயமா வித்தியாசமானதா இருக்கும். இதுல என்னுடைய பெயின்டிங் சும்மா டிரேஸ் எடுக்கறதோ அல்லது அச்சுகளாவோ இருக்காது.

ஒரு சின்ன இலையக் கூட கையால வரைஞ்சுதான் டிசைன் பண்ணுவேன். நான் போட்டுக்கற புடவை எனக்காகவே டிசைன் செய்யப்பட்டதா இருக்கணும்னு நினைக்கற சக உணர்வுள்ள பொண்ணுதான் நானும். அப்படிதான் என்னுடைய கஸ்டமர்களுக்கும் நான் டிசைன் செய்றேன். அதே போல ஒருத்தருக்கு போட்ட டிசைனை இன்னொருத்தருக்கு நான் கொடுக்க மாட்டேன். மேலும் கஸ்டமர் புடவையை  கொண்டு வந்தாலும் அதிலும் பெயின்டிங் போட்டுக் கொடுப்பேன். தற்சமயம் எனக்கு சொந்தமா ஷாப் இல்லை. ஆன்லைன்ல மட்டும் இந்தப் புடவைகள் கிடைக்கும். என்னுடைய Tanoti இன்ஸ்டாகிராம் பக்கத்துல பிடிச்ச புடவைகளை இன்பாக்ஸ் செய்தாலே போதும் நான் உங்களுக்கு எப்படி வாங்கலாம்னு சொல்லிடுவேன்’’ என்கிறார்.

- ஷாலினி நியூட்டன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • colorado

  கொலராடோ நாட்டில் மனித உரிமை சட்டத்தை பாதுகாக்க கோரி பொதுமக்கள் போராட்டம்

 • trainchina

  சீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்!

 • 24-05-2019

  24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

 • 23-05-2019

  23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • virat_koh11

  உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்