SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கிச்சன் டிப்ஸ்

2018-11-27@ 16:56:38

நன்றி குங்குமம் தோழி

* தோல் திக்கான எலுமிச்சைப் பழமாக இருந்தால் பழரசம் சரியாக வராது. அதற்கு  5 நொடி மைக்ரோ அவனில் வைத்து கசக்கி பிறகு  நறுக்கி பிழிந்தால் நல்ல சாறுடன் இறங்கும்.
* தேங்காய் துவையல் செய்யும்பொழுது சீவிய மாங்காய் துண்டுகளை சேர்த்து அரைத்தால் நல்ல ருசி தரும்.
- என்.உமாமகேஸ்வரி, நங்கநல்லூர்.
*மஞ்சள் முள்ளங்கியை வேகவைக்கும்போது 1 டீஸ்பூன் சர்க்கரையை சேர்த்து வேகவைத்தால் வாசனையாக இருக்கும்.
- நா.செண்பகா, பாளையங்கோட்டை.

* காலிஃப்ளவர் கூட்டு செய்யும் பொழுது பட்டை, கிராம்பு, கறிவேப்பிலை, வெங்காயத்தை தாளித்துக் கொட்டி சிறிது மஞ்சள் தூள்,  மிளகாய்த்தூள், உப்பு, இன்ஸ்டன்ட் எலுமிச்சம் பொடி சேர்த்து செய்தால் சுவை வித்தியாசமானதாக இருக்கும்.

* ஊறுகாய் போடும் முன் உப்பை வெறும் கடாயில் வறுத்து ஆறவைத்துக் கொண்டு பிறகு அதில் ஊறுகாய்க்கான காய்களை போடலாம்.  இப்படி செய்தால் ஊறுகாய் சீக்கிரம் கெடாமலும், நன்றாக ஊறியும் இருக்கும்.
- ஆர்.ராமலெட்சுமி, திருநெல்வேலி.
* புதினா சாற்றுடன் கொஞ்சம் மிளகுத் தூளும், வேண்டிய அளவு தேனும் கலந்து கலக்கிக் குடித்தால் வயிற்றுவலி குணமாகும்.
- தஞ்சை ஹேமலதா, வெண்டையம்பட்டி.

* கடலைப்பருப்பு, பச்சரியை சேர்த்து 2 மணி நேரம் ஊறவைத்து அரைத்து அதனுடன் சிறிது உப்பு, தேங்காய்த்துருவல், வெல்லம்,  ஏலத்தூள் கலந்து இட்லித்தட்டில் ஊற்றி வேகவைத்து எடுத்தால் ‘இட்லி டிலைட்’ தயார்.
* சிறிய ஜவ்வரிசி, அரிசி ரவை, தயிர், தேங்காய்த்துருவல், கொத்தமல்லி, மிளகாய் விழுது, உப்பு சேர்த்து கலந்து 5 மணி நேரம்  ஊறவிடவும். நெய்யில் கடுகு, பெருங்காயம் தாளித்து மாவில் சேர்த்து இட்லித்தட்டில் ஊற்றி ஆவியில் வேகவைத்து எடுக்க ‘முத்து  இட்லி’ தயார்.
- எஸ்.வளர்மதி, கன்னியாகுமரி.

* தேங்காய் எண்ணெயில் வெந்தயம் போட நெய் போல உறையாது.
* கல் உப்பில் காம்புடன் பச்சைமிளகாயை போட உப்பில் நீர் வராது.
* காம்புக் கிள்ளிய பச்சைமிளகாய், மஞ்சள் பொடி தூவி கண்ணாடி பாட்டிலில் போட வாடாது, பழுக்காது.
- சு.கெளரிபாய், பொன்னேரி.

* சப்பாத்தி செய்து பாத்திரத்தினுள் வைத்து மூடி கொஞ்ச நேரம் கழித்து எடுக்கும் போது சிறிது விறைப்பாக இருக்கும். இதைத் தடுக்க  சிறு சிறு இஞ்சித் துண்டுகள் நான்கு போட்டு வைத்தால் எப்போது எடுத்தாலும் மிருதுவாக இருக்கும்.
- ஆர்.ஜெயலெட்சுமி, திருநெல்வேலி.
* அகத்தி இலையை நீரில் போட்டு அவித்து அந்த ரசத்தை 3 வேளை சாப்பிட்டு வந்தால் நாக்கு புண் ஆறும்.
- சண்முகத்தாய் செல்லையா, சாத்தூர்.
*ரசம் தயாரிக்கும்போது அதனுடன் தேங்காய் தண்ணீரை சேர்த்தால் ரசம் மிகவும் ருசியாக இருக்கும்.
- ஆர்.அம்மணி ரெங்கசாமி, தேனி.
* முட்டைக்கோஸ் சாற்றுடன் கேரட் சாறு கலந்து குடித்தால் கண் பார்வை கூர்மை பெறும்.
- நா.செண்பகவல்லி, பாளையங்கோட்டை.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 26-04-2019

  26-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • srilanka_chri11

  கிறிஸ்தவர்களுக்கு உறுதுணையாக நாங்கள் நிற்போம் : இலங்கை தாக்குதலை கண்டித்து இந்தியாவின் பல்வேறு மத குழுக்கள் ஆர்ப்பாட்டம்

 • india_medals11

  ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி : 3 தங்கம், 8 வெள்ளி, 7 வெண்கல பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் இந்தியா 4வது இடம்!!

 • pudin_russiaa1

  வரலாற்றில் முதன்முறையாக ரஷ்ய அதிபர் புதினுடன், வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் பேச்சுவார்த்தை

 • shadow_111

  பூஜ்ஜிய நிழல் தினம் ; பிர்லா கோளரங்கத்தில் பூஜ்ஜிய நிழல் அளவை காட்டும் விதமாக மாணவர்களுக்கு பல்வேறு நிகழ்வுகள் செய்து காண்பிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்