குழந்தையை முன்னால் வைத்துக்கொண்டு பயணிப்பது நல்லதா?
2018-09-27@ 13:03:06

நன்றி குங்குமம் தோழி
வாசகர் பகுதி
சமீபத்தில் பெங்களூர் அருகே உள்ள குனிகல் என்ற இடத்தில் நடந்த ஒரு திருமணத்திற்கு 3½ வயது பெண்ணுடன் சென்றுவிட்டு பிற்பகல் 3½ மணி அளவில் பெங்களூரு தும்கூரு ஹைவேயில், ஒரு நண்பரின் பைக்கில் திரும்பிக் கொண்டிருந்தார் ரேணுகாம்மா. இவர் கணவர் 2 வருடங்களுக்குமுன் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறந்து போனார்.
வந்த ஹைவேயில், பயணம் செய்த பைக், திடீரென ஒரு ஸ்கூட்டருடன் மோதியது. பைக்கை ஓட்டிவந்தவரும், ரேணுகாம்மாவும் கீழே விழுந்தனர். ஆனால் பைக் நிற்கவில்லை. முன்னால் குழந்தை அமுல்யா அமர்ந்திருந்தாள்.200 மீட்டர் தொடர்ந்து ஓடிய பைக், ஒரு டிரக் மீது மோதுவதை தவிர்த்து; தானே அருகிலிருந்த தடுப்புச்சுவரில் மோதி நின்றுவிட்டது. குழந்தை அமுல்யா தூக்கி வீசப்பட்டாள். அதிர்ஷ்டவசமாக குழந்தை செடிகளின் மீது விழ, காயம் இல்லாமல் தப்பினாள்.
இதனிடையே விழுந்த ரேணுகாம்மாவுக்கு ஒரு நிமிடம் ஒன்றுமே புரியவில்லை. கண்கள் மங்கின. பிறகு சுதாரித்துக்கொண்டு ‘ஐய்யோ’ என் குழந்தை என தேடினாள். அப்போது ஒரு பாதசாரி, குழந்தையை தூக்கி வந்து அவரிடம் ஒப்படைத்தார்.ஒரு ஆச்சர்யம் என்னவென்றால் இவை அனைத்தும் பின்னால் காரில் வந்த டேஸ்போர்டு கேமராவில் துல்லியமாக பதிவாகியிருந்தது.இது சோஷியல் மீடியாவில் உடனே போடப்பட்டு, வைரலாக பரவியது. அதனை சில நாட்கள் கழித்துப் பார்த்த ரேணுகாம்மா...‘‘என் குழந்தை பிழைத்ததே மறுபிழைப்பு’’ என அமுல்யாவை கட்டிக்கொண்டார்!
- ராஜி ராதாபெங்களூர்.
மேலும் செய்திகள்
டயட் மேனியா
கிச்சன் டைரீஸ்
சுகமான வாழ்வருளும் கார்த்திகை சோமவார விரதம்
வீட்டுத் தோட்டத்தை இப்படித்தான் அமைக்கணும்!
வீட்டிலிருந்தபடி பெயிண்டிங் வரையலாம்!
டிப்ஸ்... டிப்ஸ்...
23-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்
சென்னை போட்டோ பியானாலேவின் 2வது புகைப்பட கண்காட்சி!!
சந்திரனில் ஆய்வு நடத்த வெற்றிகரமாக விண்கலம் அனுப்பி இஸ்ரேல் சாதனை
திருவேங்கடமுடையான் வெங்கடேச பெருமாள் கோயிலில் ஆண்டாளுக்கு லட்சார்ச்சனை விழா
சீனாவில் லூஸெங் எனப்படும் இசைக்கருவியை கொண்டாடும் விதமாக மியோவா மக்கள் நடத்திய பாரம்பரிய நடனம்