SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்தியாவின் பெருமை

2018-09-24@ 13:42:30

நன்றி குங்குமம் தோழி

ஆசியப் போட்டியில் பதக்கம் வென்ற பெண்கள்

ராஹி சர்னோபாத்.


45 நாடுகள் பங்கேற்றுள்ள 18-வது ஆசிய விளையாட்டு போட்டியில் பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் தங்கம் வென்று அசத்தினார். மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர். அந்த மாநிலத்தின் மாவட்டமொன்றில் துணை மாவட்ட ஆட்சியராக பணிபுரிந்து வருகிறார். ஏற்கனவே மெக்ஸிகோவில் நடந்த உலக துப்பாக்கிச் சுடுதல் போட்டியிலும், காமன்வெல்த் போட்டியிலும் தங்கப்பதக்கம் வென்ற ராஹி பெண்களுக்கான துப்பாக்கி சுடுதல் 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் தங்கம் வென்றார். “ஒலிம்பிக் போட்டியில் பங்கெடுத்து வெற்றி பெறுவதே நோக்கம். தொடர்ந்து அதற்கான பயிற்சியை மேற்கொண்டு வருகிறேன்” என்கிறார்.

திவ்யா கக்ரான்

மல்யுத்த போட்டியில் கோல்ட்கோஸ்ட் காமன்வெல்த் போட்டியில் வெண்கலம் வென்றார். பெண்கள் 68 கிலோ எடை பிரிவின் இறுதிப்போட்டிவரை சென்று வெள்ளி பதக்கத்தை கைபற்றினார். “போட்டி கடுமையாக இருந்தது. தங்கப்பதக்கத்தை நோக்கியே கடுமையாக போராடினேன். இந்தப் போட்டி நல்ல அனுபவத்தை கொடுத்தது” என்றார்.

வினேஷ் போகத்

50 கிலோ எடைப்பிரிவில்  ஜப்பானைச் சேர்ந்த ஐரி யுகியை எதிர்கொண்டார். இதில் 6-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வென்றார். முதல் சுற்றில் 4-0 என வினேஷ் போகத் முன்னிலைப் பெற்றார். 2-வது சுற்று 2-2 என டிராவில் முடிந்தது. அதனால் ஒட்டுமொத்தமாக 6-2 என வினேஷ் போகத் ஜப்பான் வீராங்கனை ஐரி யுகியை வீழ்த்தி வெற்றி பெற்றார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • UkraineCoronaProtest

    கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சீனாவில் இருந்து மக்களை அழைத்து வந்ததற்கு எதிர்ப்பு: உக்ரைனில் வெடித்தது போராடடம்!

  • puthu2020

    அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தங்குவதற்காக டெல்லி மௌரியா ஹோட்டலில் ஆடம்பரமாகத் தயார் செய்யப்பட்டுள்ள பிரெசிடென்ட் சூட்!!

  • rayil21

    ஆஸ்திரேலியாவில் நொடி பொழுதில் தரம்புரண்ட பயணிகள் ரயில்: 2 பேர் பலி...ஏராளமானோர் படுகாயம்!

  • coronaa_vugaan11

    கொரொனா வைரஸ் வராம பின்ன என்ன வரும்? - பறவைகள், முயல்கள், வெளவால்கள், பாம்புகள் விற்கப்படும் வுஹான் கடல் உணவு சந்தை!!!

  • pakistan21

    பெங்களூருவில் நடைபெற்ற குடியுரிமை சட்டத்திற்கு எதிரான பேரணியில் 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' என்று கோஷம் போட்ட பெண் கைது: போலீசார் அதிரடி!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்