SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

பட்டு போன்ற மிருதுவான பாதங்களுக்கு

2018-09-10@ 17:09:07

நன்றி குங்குமம் தோழி

வாசகர் பகுதி

கருமை படர்ந்த கணுக்கால், வெடிப்பு நிறைந்த பாதம், பழுப்பேறிய  நகங்கள், செருப்பு அணிவதால் உண்டான கருமை என பாதங்கள்  பலருக்கு பிரச்னையாக இருக்கும். வீட்டிலேயே எளிமையாக  பாதங்களைப் பாதுகாக்க சில டிப்ஸ்...

*    பாதம், உள்ளங்கால் வறண்டு இருந்தால் 4 சொட்டு கிளிசரின், 4 சொட்டு எலுமிச்சைச்சாறை கலந்து தூங்கச் செல்லும்போது  நகம், விரல்கள், பாதம் முழுவதும் தடவி, காய்ந்தவுடன் சாக்ஸ் அணிந்து உறங்கவும்.

*    பாலில் தோய்த்தெடுத்த பஞ்சு கொண்டு நகங்களில் தேய்த்து வந்தால் நகம் உடையாமலும், மினுமினுப்பாகவும் இருக்கும்.

*    குளிப்பதற்குமுன் கஸ்தூரி மஞ்சளுடன் வெண்ணெயைக் கலந்து நன்றாகத் தேய்த்து வந்தால் சொரசொரப்பான பாதமும்  மிருதுவாகி விடும்.

* வெதுவெதுப்பான நீர் நிறைந்த பெரிய பாத்திரத்தில் ஷாம்பூ , உப்பு மற்றும் ஒரு எலுமிச்சம்பழத்தின் சாறை விட்டு அந்த தண்ணீரில் சில  நிமிடங்கள் பாதங்களை அமிழ்த்தி வைத்து ப்யூமிக் கல்லால் தேய்க்க வேண்டும். பிறகு குளிர்ந்த நீரால் கழுவி நன்றாக துடைத்து விடவும்.

*    சிறிது கற்றாழை ஜெல்லுடன் கடலை மாவைக் கலந்து மிக்ஸியில் அரைத்து 2 நாட்களுக்கு ஒருமுறை உள்ளங்கால், பாதம்,  கணுக்கால் முழுவதும் தேய்த்துக் கழுவ, காயத்தால் ஏற்பட்ட தழும்புகள், கருமை மறைந்து சருமம் இயல்பான நிறத்துக்கு மாறும்.

* நான்கு  துளி விளக்கெண்ணெயை உள்ளங்கையில் எடுத்துக்
கொண்டு நன்றாக சூடு பறக்க தேய்த்து, 2 பாதங்களிலும் தேய்த்து வர பாதம் மினுமினுப்பாக மாறும்.

* மாதம் இருமுறை வெள்ளை எள்ளை அரைத்து, பாதம், நகங்களில் பத்துபோல் போட்டு கழுவவும். இது நகத்தின் இடுக்குகளில் படிந்துள்ள  மண், அழுக்குகளை அகற்றி நல்ல பளபளப்பை கொடுப்பதுடன்  வெடிப்பு வராமலும் பாதுகாக்கும்.

*    காலணிகளையும் சரியான அளவில் போட வேண்டும். தரமானதாகவும் சௌகரியமானதாக வாங்கி அணியும்போது, பாதம் கருத்துப்  போகாமல் இயல்பாய் இருக்கும்.

- மகாலெட்சுமி சுப்ரமணியன்,காரைக்கால்

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-09-2018

    21-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • chennaipolicefunction

    சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற காவலர் நிறைவாழ்வு பயிற்சி விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பங்கேற்பு

  • railwaysecurityforce

    சென்னையில் ரயில்வே பாதுகாப்பு படையின் 33வது ஆண்டு விழாவில் வீரர்கள் அணிவகுப்பு

  • courtchennaispl

    சென்னையில் குற்றவழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் திறப்பு

  • russiapresigun

    ரஷ்ய ராணுவத்தின் புதிய துப்பாக்கி ரகங்களை அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஆய்வு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்