SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆண்ட்ராய்ட் போனும் பின்தொடரும் ஆபத்தும்

2018-09-06@ 14:57:19

நன்றி குங்குமம் தோழி

உலகம் நவீனமயமானாலும் அந்த நவீன அறிவியல் சாதனங்களை பயன்படுத்தி பாலியல் ரீதியாக பெண்களை எப்படி துன்புறுத்துவது என்று யோசிக்கும் ஒரு சமூகம் இருந்து கொண்டுதான் இருக்கிறது. ஆண்ட்ராய்ட் மொபைல் பயன்படுத்தக் கூடியவர்களின் எண்ணிக்கை அதிகம். பொருளாதார வளர்ச்சியில் பின் தங்கிய கிராமங்களில் கூட ஆண்ட்ராய்ட் ஆதிக்கம்தான்.இந்த ஆண்ட்ராய்ட் போன்களில் பயனுள்ள பல்வேறு அப்ளிகேஷன்கள் இருக்கின்றன என்பதே பயன்படுத்து பவர்களின் குரலாக இருக்கிறது.

எந்த அளவிற்கு ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்கள் பயனுள்ளதாக இருக்கிறதோ அந்த அளவிற்கு ஆபத்தும் உள்ளடங்கி இருக்கிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் டிராக் வியூ அப்ளிகேஷன் மூலம் 80 பெண்களின் அந்தரங்கத்தை தினேஷ்குமார் என்ற இளைஞர் திருடிய  விவகாரம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. நவீன உலகில் தவிர்க்க முடியாத ஒன்றாக ஆண்ட்ராய்ட் போன் மாறிப் போன நிலையில் இது போன்ற ஆபத்தான செயலியிடம் இருந்து எப்படி தப்பிப்பது என்பது குறித்து மென்பொருள் செயற்பாட்டாளர் சண்முகவேலிடம் கேட்டேன்.

“பிளே ஸ்டோரில் அப்ளிகேஷன் பதிவிறக்கம் செய்யும்போது அந்த அப்ளிகேஷன் குறித்து அதை ஏற்கனவே பயன்படுத்தியவர்கள். பல கருத்துகளை பதிவிட்டிருப்பார்கள். அதை ஒரு முறை படித்து பார்க்க வேண்டும். அதில் இந்த ஆப் குறித்து நல்ல விஷயங்களும், எதிர்மறையான கருத்துகளும் வந்திருக்கும்.  அதை வைத்து இந்த ஆப் நமக்கு வேண்டுமா வேண்டாமா என்பதை முடிவு செய்து கொள்ளலாம்.

இது ஓர் எளிமையான வழி.இரண்டாவது நாம் அப்ளிகேஷன் ஒன்றை பதிவிறக்கம் செய்யும்போது ஆக்சஸ் அலோவ்டு என்று கேட்கும். அதில் கேமரா, டேட்டா, மெசேஜ், இன்னும் அந்த ஆப்பிற்கு தேவையில்லாத விஷயங்கள் டிக் செய்திருக்கும். அதை நீக்கி விடுவது நல்லது. அல்லது அது போன்ற அப்ளிகேஷன்களை பதிவிறக்கம் செய்யாமல் இருப்பதே நலம். முன் பின் தெரியாதவர்களிடம் மொபைல் போன் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.

‘டிராக் வியூ’ போன்று நிறைய அப்ளிகேஷன்கள் பிளே ஸ்டோரில் உள்ளன. ஆகையால் நமக்கு தேவையான பாதுகாப்பான அப்ளிகேஷன்களை மட்டும் பதிவிறக்கம் செய்து வைத்தால் போதும்.இணையத்தில் மேயும்போது தேவையில்லாமல் வரும் அப்ளிகேஷன்களை பதிவிறக்கம் செய்ய வேண்டாம். கூகிள்  செய்வது பிரச்சனை இல்லை, மாறாக யுசி ப்ரௌசர்  போன்றவற்றை பயன்படுத்துவதை தவிர்த்து விடலாம். முக்கியமான தகவல்களை சாதாரண மொபைல்களில் வைத்துக்கொள்ளலாம்”  என்கிறார் சண்முகவேல்.

- ஜெ.சதீஷ்

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • gslvrocket

  ஜிசாட் 29 செயற்கைகோளை சுமந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ஜி.எஸ்.எல்.வி மார்க்3-டி2 ராக்கெட்

 • 15-11-2018

  15-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • 129JawaharlalNehru

  நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 129வது பிறந்தநாள்: அரசியல் தலைவர் மரியாதை

 • 2018TiruvannamalaiDeepam

  திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று கோலாகலமாக தொடங்கியது

 • israelfire

  காஸா மீது சரமாரியாக குண்டுவீசிய இஸ்ரேல்: ராக்கெட் தாக்குதலுக்கு பதிலடி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்