SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிரைடல் ப்ளவுஸ் தைக்கலாம்...பெரும் மதிப்பில் சம்பாதிக்கலாம்!

2018-09-04@ 16:12:53

நன்றி குங்குமம் தோழி

இன்றைய நவீன உலகில் எவ்வளவு நாகரிக உடைகள் வடிவமைக்கப்பட்டாலும், புடவை அதன் இடத்தை சற்றும் விட்டுக்கொடுக்காமல் தக்க வைத்துக்கொண்டுள்ளது என்று சொல்லலாம். அதற்கு ஈடுகொடுக்கும் வகையிலும் மேலும் அழகு சேர்க்கவும் தற்போது ப்ளவுஸ்கள் மிகவும் நுட்பமான எம்ப்ராய்டரி வேலைப்பாடு செய்யப்பட்டு நேர்த்தியாக வடிவமைக்கப்படுகின்றன. அவ்வாறான ப்ளவுஸ்களையே  இன்றைய மணப்பெண்களும், திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் அனைத்துப் பெண்களும் அணிந்துகொள்ள விரும்புகிறார்கள்.

அவர்களின் விருப்பத்திற்கேற்ப அழகு பிரைடல் ப்ளவுஸ் தைத்தும், கற்றுக்கொள்ள நினைப்பவர்களுக்கு பயிற்சியும் அளித்து வரும் ஆனந்தலட்சுமி சொல்வதைப் பார்ப்போம். சென்னையில் கடந்த சில ஆண்டுகளாக இத்தொழிலை செய்து வருகிறேன். காலத்துக்கேற்றபடி மாறிவரும் நவநாகரிக உலகைப் புரிந்துகொண்டால் கற்கும் கலையின் மூலம் கவலையில்லாமல் வருமானம் பார்க்கும் தொழில் இது. பல வண்ண பட்டுநூல்களாலும்  ஜரிகை நூல்களாலும், மணிகள், கற்கள், சம்கி, ஜர்தோஸி ஆகியவைகளை உபயோகித்து செய்யப்படும் எம்ப்ராய்டரி, ஆரி/மக்கம் எம்ப்ராய்டரி எனப்படும்.

துணியை வட்ட எம்ப்ராய்டரி ஃப்ரேமிலோ ஆரிவொர்க் செய்வதற்கான செவ்வக ஃப்ரேமிலோ மாட்டி அதற்கான ஸ்டாண்டில் வைக்க வேண்டும். ஆரி சியால் பட்டுநூல் அல்லது ஜரிநூலை துணிக்கு கீழிருந்து மேலாக இழுத்து பலவித தையல்களை டிஸைனுக்கு ஏற்ப போட வேண்டும். இதில் கற்கள், சம்கி, மணிகளும் கோர்த்து மேலும் அழகுபடுத்த வேண்டும். பார்ப்பதற்கு மிகக் கடினமாகத் தோன்றினாலும் இதனைக் கற்றுக்கொள்ள இரண்டு தகுதிகளே வேண்டும். அவை ஆர்வமும் விடாமுயற்சியும் ஆகும். இவை இருந்தால் இரண்டே மாதங்களில் அனைத்து விதமான தையல்களும் கற்றுக்கொண்டுவிடலாம்.

அடிப்படைச் செலவு

அடிப்படைத் தையல்கள் கற்றுக்கொள்ள சுமார் ரூ.3500, கற்கள், மணிகள், ஜர்தோஸி தைக்கும் முறைகள் (அட்வான்ஸ்டு) கற்றுக்கொள்ள  சுமார் ரூ. 3500. வேண்டிய அடிப்படை உபகரணங்கள் (எம்ப்ராய்டரி ரவுண்டு ஸ்டாண்டு, ரவுண்டு ஃப்ரேம், துணி, ஊசிகள், நூல்கள், கற்கள், ஜர்தோஸி போன்றவை) உட்பட, நீங்கள் கற்றுக்கொள்ளும் ஊர் மற்றும் நபருக்கு ஏற்ப ரூ.10000 வரை செலவாகலாம். சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் என்பதுபோல இத்தையல்கள் பழகப்பழக மிக அழகாக வந்துவிடும். ஆரி மட்டுமல்லாமல் புடவையிலிருந்து டிஸைன் ட்ரேஸ் செய்வது, அதனை ப்ளவுஸில் எவ்வாறு வரைவது போன்றவையும் கற்றுக்கொள்ள முடியும். இரண்டு மாதங்களில் நீங்கள் உங்களுக்கான ப்ளவுஸை நீங்களே வடிவமைக்க முடியும்.

செயல்படுத்துதல்

இரண்டு மூன்று ப்ளவுஸ்கள் உங்களுக்கு / பெண் குழந்தையின் பட்டுச்சட்டை / குர்தியில் ஆரி எம்ப்ராய்டரி செய்தபின் தன்னம்பிக்கை வந்துவிடும். நீங்கள் கற்றுக்கொண்டதற்கான செலவையும் ஈடுகட்டிவிடும். தையல் தெரிந்திருந்தால் உங்கள் டிஸைனுக்கு ஏதுவாக தைத்தும் கொடுத்துவிடலாம். அடிப்படை உபகரணங்கள் உங்களிடம் ஏற்கனவே இருப்பதால், வாடிக்கையாளர் தரும் துணிக்கு தகுந்த வண்ணங்களில் நூல்கள், கற்கள் முதலானவை வாங்க ரூ,500 முதல் ரூ.1000 வரையே டிஸைனுக்கு ஏற்ப செவாகும். ஒரு ப்ரைடல் ப்ளவுஸ் ஆரி எம்ப்ராய்டரி செய்து தைத்துக் கொடுக்க, குறைந்தது ரூ.3500 பெறலாம்.

இதில் செலவைவிட நம் பொறுமையும் டிஸைனும்  நேர்த்தியும் தரமுமே முக்கியம். ரூ.2000 - ரூ.2500 வரை லாபம் பெறலாம். ஆரம்பத்தில் ஒரு ப்ரைடல் ப்ளவுஸ் ஆரி வொர்க் செய்ய ஒருவாரம் ஆகலாம். பழக்கமானபின் மூன்று நாட்களிலேயே முடிக்க முடியும். தரமான கற்களாலும், மணிகளாலும் எம்ப்ராய்டரி செய்து  நல்ல ரிச்லுக்கில் செய்யும் ப்ரைடல் ப்ளவுஸிற்கு ரூ.6000 முதல் ரூ.8000 கூட பெற முடியும். உங்களின் லாபமும் பெருகும். செமி/ப்ரெஷியசஸ் கற்கள் உபயோகித்து செய்பவர்களும் உள்ளனர். தேவையான அவகாசத்தில் ஆர்டர் எடுத்துக்கொண்டு, குறித்த நேரத்தில் டெலிவரி செய்வதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

சந்தைப்படுத்துதல்

முதலில் உங்கள் தோழிகள் மற்றும் உறவினர்களுக்கு நீங்கள் ஆரிவொர்க் செய்வதை தெரியப்படுத்துங்கள். நீங்கள் அணிவதைப் பார்த்து  அவர்களே உங்களுக்கு வாய்ப்புத் தருவார்கள். அவர்களுக்கு உங்கள் நேர்த்தி பிடித்துப்போய்விட்டால் அவர்களே மேலும் ஆர்டர்கள் தந்து  மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துவார்கள். பக்கத்தில் உள்ள தையல் கடைகளிலும் தெரியப்படுத்தி ஆர்டர் எடுக்கலாம். உங்கள்  ஃபேஸ்புக்கில் நீங்கள் ஆரி செய்த ஆடைகளை அப்லோட் செய்து, தோழிகள் மற்றும் அவர்களது தோழிகளுக்கு ஷேர் செய்யுங்கள்.  வாட்ஸ்ஆப் மூலமும் க்ரூப்களில் ஷேர் செய்யுங்கள். தொடர்ந்து சந்தைப்படுத்தி வந்தால் வெளிநாடுகளில் வசிப்பவர்களிடம்கூட  ஆன்லைனில் ஆர்டர் எடுக்கலாம். அதே சமயம் உங்கள் திறமையை நீங்கள் மெருகேற்றிக்கொண்டே இருக்க வேண்டும்.

இடத் தேவை மற்றும் முதலீடு

ப்ளவுஸ்கள் மட்டுமே நீங்கள் ஆரி டிஸைன் செய்வதாக இருந்தால் தனியாக இடத் தேவை இருக்காது. புடவையிலும் ஆரி வொர்க் செய்வதானால் அதற்கான கட்டில் அமைக்க, தைத்தும் கொடுப்பதானால் தையல் மெஷின் போட ஒரு 10x10 அறை தேவைப்படும். நிறைய ஆர்டர்கள் வர ஆரம்பித்தபின் ஆட்களை வேலைக்கு அமர்த்தி இடத்தையும் விரிவுபடுத்திக்கொள்ளலாம்.திருமணம், தீபாவளி போன்ற பண்டிகை சீஸனில் ஆரி வொர்க் செய்த ப்ளவுஸ் மணப்பெண்ணிற்கும் ஆரி வொர்க் இல்லாமல் ரூ.1000 - ரூ.1500 வரையிலான  பல வண்ண துணிகள் உபயோகித்து டிஸைனர் ப்ளவுஸ்கள்,

சிம்பிளான மெஷின் எம்ப்ராய்டரி போட்ட ( இதற்கு தனியாக மெஷின்  தேவைப்படும்), பெயின்டிங் செய்த ப்ளவுஸ்கள் மற்றவர்களுக்கும் தைத்துக் கொடுத்து மேலும் உங்கள் வருமானத்தைஉயர்த்திக் கொள்ளலாம். இந்த வகை ப்ளவுஸ்களுக்கு, எல்லா சீஸனிலும் வாடிக்கையாளர் இருப்பர். டிசைனர் ப்ளவுஸ்களும் நம் கற்பனைக்கு ஏற்ப  கற்கள், லேஸ், ஜரிகை உபயோகித்து நல்ல ரிச்சாக பிரைடல் ப்ளவுஸ் தைக்க முடியும். இதற்கு தையல்கலை தெரிந்திருக்க வேண்டும்.  சீஸன் இல்லாத நேரங்களில்கூட இந்த ஆரி கலையை மற்றவர்களுக்குக் கற்றுத்தந்து அவர்களின் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்தலாம்.

ஒரு மாதத்தில் நான்கு ஆரி ப்ளவுஸ்கள், பத்து டிசைனர் ப்ளவுஸ்கள் கற்றுத்தருதல் மூலம் மாதத்திற்கு ரூ.20000 முதல் ரூ.50000 வரை கூட வீட்டிலிருந்தே சம்பாதிக்க முடியும்.  நான், வீட்டிலேயே ஆரி ப்ரைடல் வொர்க் மற்றும் டிஸைனர் ப்ளவுஸ்கள்  தைத்துக்கொடுத்தும், ஆரி வொர்க் (பேஸிக் & அட்வான்ஸ்டு ரூ. 7000த்துக்கு), ப்ளவுஸ், சல்வார் தைக்க, டிஸைனர் ப்ளவுஸ்கள் தைப்பதற்கு, க்ராஃப்ட்கள் முதலியன அதற்கேற்ப கட்டணங்களில் கற்றுக்கொடுத்தும் வருகிறேன். நீங்களும் உங்கள் நேரத்தை மூலதனமாக்கி, ஆர்வத்தை விதைத்து, உழைப்பை ஊற்றி,  நம்பிக்கையை உரமாக்கினால் உங்கள் உயரத்திற்கு வானமே எல்லை.

- தோ.திருத்துவராஜ்

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 24-04-2019

  24-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • vote

  3-வது கட்ட மக்களவைத் தேர்தல்: 14 மாநிலங்களில் உள்ள 117 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நிறைவடைந்தது

 • hailstrom

  தெலுங்கானாவில் நேற்று திடீரென பெய்தது ஆலங்கட்டி மழை: இணையதளத்தில் வைரலாகும் காட்சிகள்

 • bookday

  இன்று உலக புத்தக தினம் : புத்தகங்களை நேசிப்போம், வாசிப்போம்!

 • ukraine

  உக்ரைனில் டிவி சிரியலில் அதிபராக நடித்த நகைச்சுவை நடிகர் ஜெலன்ஸ்கி நிஜத்திலும் அதிபரானார்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்