SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ப்யூட்டி பாக்ஸ்

2018-08-31@ 15:54:39

நன்றி குங்குமம் தோழி

ஆரோக்கியம் சார்ந்த அழகே அனைவருக்கும் நல்லது!

பார்லரில் மங்கு ஃபேஷியல்


மெலாஸ்மா என ஆங்கிலத்தில் அழைக் கப்படும் ஹை பவர் பிக்மென்டேஷன் குறைபாடே மங்கு எனவும், இது எதனால் வருகிறது?  வந்தால் வீட்டிலே செய்ய வேண்டியவை பற்றி விரிவாகப் பார்த்தோம். இந்த இதழில் மங்குவை நீக்க, பார்லர்களில் செய்யப்படும் மங்கு  ஃபேஷியலைப் புகைப்பட விளக்கத்துடன் விரிவாகக் காண்போம்.மங்கு இருக்கிறது என்று தெரிந்து நீங்கள் ஒரு ப்யூட்டி பார்லருக்குச்  செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.
அங்கு முதலில் உங்களுக்குத் தேவையான ஆலோசனைகள் பார்லரில் வழங்கப்பட வேண்டும்.  உங்களுக்கு வந்திருக்கும் மங்கு, வருடக் கணக்கில் உள்ளதா? மாதக் கணக்கில் உள்ளதா? எந்த நிலை மங்கு உள்ளது. இதற்கு முன்  மங்குவிற்காக எதுவும் டிரீட்மென்ட் எடுத்துள்ளீர்களா என்பதைக் கேட்டு தேவையான ஆலோசனை பார்லரில் வழங்கப்பட வேண்டும்.  எத்தனை சிட்டிங் நீங்கள் மங்கு டிரீட்மென்டிற்காக வரவேண்டியது இருக்கும் என்பதையும் முன்கூட்டியே உங்களுக்குத் தெரிவிக்க  வேண்டும்.

ஒவ்வொரு சிட்டிங்கிற்கும் 20 முதல் 30 நாள் இடைவெளி கட்டாயம் தேவைப்படும். கொடுக்கப்பட்ட இடைவெளியில் தொடர்ச்சியாக வந்து  ஃபேஷியலை எடுத்துக்கொள்ளுதல் வேண்டும். தொடர்ச்சி இன்றி டிரீட்மென்டை மேற்கொண்டால் எதிர் பார்க்கும் விளைவு தோலில்  ஏற்படாது. சிலருக்கு தொடக்க நிலை மங்கு என்றால் இரண்டு அல்லது மூன்று சிட்டிங் ஃபேஷியல் எடுத்தாலே போதுமானது.  நீண்டநாட்கள் கவனிக்கப்படாமல் விடப்பட்ட மங்கு என்றால், தோலிற்கு கீழே வேறூன்றி பரவி இருக்கும். அந்த நிலையை  அடைந்தவர்கள், குறைந்தது ஆறு அல்லது ஏழு சிட்டிங்காவது சென்றால்தான் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றம் பெறத் துவங்கும்

ஆன்டி பிக்மென்ட் கிட் வைத்து பார்லரில் செய்யப்படும் மங்கு பேஷியல்

1.     சாதாரண நீரால் முகத்தை துடைத்து சுத்தம் செய்து, கிட்டில் இருக்கும் கிளன்சிங் க்ரீம்மை அப்ளை செய்தல் வேண்டும்.  தொடர்ந்து முகத்தை டீப்பாக கிளன்சிங் செய்தல் வேண்டும். இதற்கு இரண்டு முதல் மூன்று நிமிட இடைவெளி தேவைப்படும்.
2.     கிட்டில் உள்ள அரோமா ஸ்க்ரப் பவுடருடன் (இதில் ஓட்ஸ் மிக்ஸாகி இருக்கும்) அதில் இடம்பெற்றிருக்கும் ஆன்டி  பிக்மென்டேஷன் சீரத்தினை மூன்று அல்லது நான்கு துளிகள் இணைத்து பேஸ்டாக்கி, முகத்தில் அப்ளை செய்து ஏழு நிமிடங்கள்வரை  விடுதல் வேண்டும்.
3.     அடர்த்தியான தோல் அமைப்பு கொண்டவர்கள் என்றால் அப்படியே ஓட்ஸ் மற்றும் அரோமா பவுடர் காய்ந்த நிலையிலேயே  முகத்திற்கு மசாஜ் கொடுக்கலாம். மென்மையான சென்ஸிட்டிவ் தோல் எனில், தோல் பாதிப்படையும். எனவே காய்ந்த அரோமா  திட்டுக்களை நீக்கிவிட்டு முகத்திற்கு மசாஜ் தருதல் வேண்டும்.
4.     ஸ்க்ரப் செய்யும் போதும் முகத்தில் உள்ள ஸ்போசஸ் ஓப்பன் நிலையில் இருக்கும். அதன் பிறகு முகத்திற்கு ஸ்டீமிங் தருதல்  வேண்டும்.
5.     அடுத்ததாக ஸ்கின் டோனிங் ஜெல்லை முகத்தில் அப்ளை செய்தல் வேண்டும்.
6.     முகத்தில் இருக்கும் பிளாக்ஹெட்ஸ், ஒயிட்ஹெட்ஸ் நீக்குதல் வேண்டும்.தொடர்ந்து முகத்திற்கு டோனர் அல்லது  ஆஸ்ட்ரிஜன்ட்(astrgent) இவற்றில் ஏதாவது ஒன்றை அப்ளை செய்தால், அது முகத்தில் மேலும் பிளாக்ஹெட்ஸ் மற்றும் ஒயிட்
ஹெட்ஸ் பரவாமல் தடுக்கும்.
7.     பிக்மென்டேசனுக்கு உரிய சீரத்தை முகத்தில் தடவி ஹை பீரிகொயன்சி மெஷின் மூலமாக மங்கு இருக்கும் இடத்தில்  வைப்ரேஷன் லேசர் கொடுத்தல் வேண்டும். அப்போது பிக்மென்டேசனை சீரம் எளிதாக உள்ளே தோலிற்கு அடியில் இருக்கும் மங்குவை  உருவாக்கும் செல்களை ஸ்டிமுலேட் செய்யத் துவங்கும்.
8.     இறுதியாகத் தொடர்ந்து 20 நிமிடங்களுக்கு முகத்திற்கு மசாஜ் கொடுத்தல் வேண்டும்.
9.     தொடர்ந்து ஸ்கின் பிக்மென்ட் ஃபீல் ஆஃப் மாஸ்க்கை முகத்தில் தடவி ஒரு 10 நிமிட இடைவெளியில் மாஸ்க் காய்ந்ததும்  முகத்தில் இருந்து மாஸ்க்கை நீக்குதல் வேண்டும்.
    ஆன்டி பிக்மென்டேஷன் க்ரீமை இரவில் முகத்தில் தடவுதல் வேண்டும்.

அடுத்த இதழில்…
*     பரு வந்து நீங்கிய முகத்தில் குழி தோன்றுவது எதனால்?
*      முகத்தில் மேடு பள்ளங்கள் தோன்றக் காரணம்?
*      மேற்குறிப்பிட்ட பிரச்சனைகளை வீட்டிலும், பார்லர் மூலமாகவும் சரி செய்வது எப்படி?

எழுத்து வடிவம்: மகேஸ்வரி

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 20-11-2018

  20-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • thiruvan_5thdaycelb

  திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் 5 ஆம் நாள்: விநாயகர், சந்தரசேகரர் மாட வீதியில் பவனி

 • rarephots_indiragandhi

  முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் அரிய புகைப்படங்கள்!

 • 2018_indiragandibirthdy

  இரும்பு பெண்மணி இந்திரா காந்தியின் 101 வது பிறந்த தினம்: தலைவர்கள் மரியாதை!

 • america_winterstorm2018

  வடகிழக்கு அமெரிக்க பகுதிகளில் தொடங்கியுள்ள முதல் பனிப்புயல்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்