SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

டிப்ஸ்.. டிப்ஸ்..

2018-08-23@ 11:31:09

நன்றி குங்குமம் தோழி

*    மண்பானையில் வெண்ணெயை போட்டுக் காய்ச்சினால் சுவையான நெய் கிடைக்கும்.

*    நெய் காய்ச்சிய மண்பானையில் சிறிது நெய்யுடன் கேழ்வரகு மாவு, வெல்லம் சேர்த்து மிதமான சூட்டில் வறுத்து சிறுசிறு  உருண்டைகள் செய்தால், குழந்தைகள் விரும்பி உண்பார்கள். சுவையுடன் சக்தியும் நிறைந்தது.

*    மண்பானையில் பாலை காய வைத்து உறை ஊற்றினால் தயிர் கெட்டியாகவும், சுவையாகவும் இருக்கும்.

*    சிறு தானியங்களை மண்பானையில் சமைத்தால் சுவையாகவும், நன்றாகவும் இருக்கும்.
- சு.கண்ணகி, மிட்டூர்.

*    வெண்டைக்காய், கத்தரிக்காய் போன்றவற்றில் வதக்கல் செய்யும்போது அதில் இரண்டு ஸ்பூன் தக்காளி அரைத்த சாறு  சேர்த்தால் சுவையாக இருக்கும்.

*    பக்கோடா செய்யும்போது கறிவேப்பிலையைத் துண்டாக்கிப்போட்டு செய்தால் வாசனை அதிகமாக இருக்கும். அப்படியே  சாப்பிடலாம்.
- எஸ்.விஜயா சீனிவாசன், திருச்சி-19.

*    எலுமிச்சம்பழத்தின் ஒரு மூடி மீதியாகி விட்டால், அதை அலுமினிய ஃபாயில் பேப்பரில் சுற்றி ஃப்ரிட்ஜில் வைத்து  உபயோகிக்கலாம். ஃப்ரெஷ்ஷாகவே இருக்கும்.

*    குளியல் அறைக் கண்ணாடியில் புகை படிந்திருந்தால் சில வெள்ளரிக்காய்த் துண்டுகளை கண்ணாடி மேல் வைத்து தேய்த்து  விட்டு நியூஸ் பேப்பரினால் துடைத்து விடவும். கண்ணாடி ‘பளபள’வென மின்னும்.
- ஜெ.சி.ஜெரினாகாந்த், ஒக்கியம் துரைப்பாக்கம், சென்னை-97.

*    பாகற்காயை உப்பு சேர்த்து, சிறிது நேரம் வேக வைத்து, தண்ணீரை வடித்துவிட்டு வதக்கினால் அதிக கசப்பு இருக்காது.

*    தாய்ப்பால் சரியாக சுரக்காத தாய்மார்கள்  உணவில்  அடிக்கடி  அகத்திக்கீரையை சேர்த்துக்கொண்டால் நல்ல பலன்  கிடைக்கும்.
- க.நாகமுத்து, திண்டுக்கல்.

*    எந்த காய் அல்லது வற்றல் போட்டு மோர்க்குழம்பு செய்தாலும் இறக்கிய பிறகு அதில் தேங்காய் எண்ணெயில் கடுகு, சீரகம்,  வெந்தயம், பெருங்காயத்தை தாளித்துக் கொட்டுங்கள். குழம்பின் வாசனை ஊரையே தூக்கியடிக்கும்.
- ஆர்.ராமலெட்சுமி, திருநெல்வேலி.

*    ரசத்தை அடுப்பிலிருந்து இறக்குமுன்  ஒரு ஸ்பூன் கறிவேப்பிலை பொடியை தூவி இறக்கினால் மணமாக இருக்கும்.

*    இஞ்சியை மைய அரைத்து எண்ணெயில் வதக்கி கோஸை அதில் போட்டு புரட்டினால் வாசத்துடனும் சுவையுடனும் இருக்கும்  பொரியல்.

*    வெந்தயத்தை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொண்டால் தேவையானபோது தோசை மாவில் 2 ஸ்பூன் கலந்து தோசை  சுட்டால் சுவையாக இருக்கும்.

*    புதினா சட்னி செய்யும்போது ஒரு ஸ்பூன் தேங்காய்த் துருவலும் சிறிது வேர்க்கடலையும் சேர்த்து அரைத்தால் சட்னி சுவையாக  இருக்கும்.
- வசந்தா மாரிமுத்து,  சென்னை-64.
*    பால் பாக்கெட் வாங்கி அதை காய்ச்ச நேரம் இல்லாமல் போனால், அந்த பாக்கெட்டை தண்ணீரில் போட்டு வைத்தால் நான்கு  மணி நேரம் கெடாமல் இருக்கும்.

*    பருப்புப்பொடியுடன் சிறிது கசகசாவையும்  வறுத்துப் பொடி செய்து சேர்த்தால் குழம்புக்கூட்டு கெட்டியாக இருக்கும்.
- எஸ்.வேல் அரவிந்த், திண்டுக்கல்.

*    மஞ்சள் முள்ளங்கியை சமைக்கும்போது அவற்றுடன் சிறிது சர்க்கரையைச் சேர்த்து சமைத்தால் வாசனையுடன், சுவையாக  இருக்கும்.

*    காய்கறிகள் வாடாமலிருக்க, அவற்றை எலுமிச்சைச்சாறு கலந்த தண்ணீரில் சிறிது நேரம் ஊற வைத்தால் பசுமையாக இருக்கும்.

*    தோசை மாவுடன் அரை கப் சாதம் வடித்த கஞ்சியை சேர்த்து தோசை வார்த்தால் தோசை மிகவும் மிருதுவாக இருக்கும்.

*    வெள்ளைக் கரிசலாங்கண்ணிப் பொடியை உண்டு நீர் பருகினால் முடிநரை நீங்கும். பார்வை தெளிவு பெறும்.

*    புதினா கீரையைப் பொடித்து பல் துலக்கும்போது ஈறுகளில் உள்ள நீர் வெளியேறும். அகத்திக்கீரை உண்டு வருவதால்  உடமிலுள்ள நச்சுக்கள் நீங்கும்.

*    பொன்னாங்கண்ணிக்கீரை சாப்பிட்டு வர, மாலைக்கண் நோய் குணமாகும்.
- எஸ்.வளர்மதி, கன்னியாகுமரி.

*    ஃபிரிட்ஜில் ஃப்ரீஸரில் வைத்திருக்கும் பொருட்கள் நன்கு உலர்ந்துவிட்டால் அவற்றை எடுப்பதற்கு கூரான ஆயுதங்களைப்  பயன்படுத்தக்கூடாது. அது அமைந்திருக்கும் பிளாஸ்டிக் டப்பாவில் அலுமினிய காயில் பொருத்தப்பட்டிருக்கும். கூரான பொருள் காயிலில்  பட்டு உள்ளிருக்கும் காஸ் வெளிப்பட்டு விபத்து ஏற்படவும் வாய்ப்புள்ளது.

*    பயன்படுத்திய மாத்திரைகளின் அலுமினிய பாயிலை பாத்திரத்திலுள்ள எண்ணெய் பிசுக்கு, அழுக்குகளைத் தேய்க்கப்  பயன்படுத்தலாம். இவை கீரலை உண்டுபண்ணாது.

*    பருப்பு வேகும்போது அதில் சிறிது பட்டையை சேர்த்தால் குழம்பு வெகு நேரம் கெடாமல் இருக்கும்.
 - எஸ்.விஜயா சீனிவாசன், திருச்சி-19.

*    ரவா உப்புமாவில் இஞ்சி, பச்சை மிளகாயுடன் கொஞ்சம் தேங்காயும், சின்ன தக்காளியையும் வைத்து அரைத்து கொதிக்கும்  நீரில் கலந்து செய்தால் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.

l    வெந்தயத் தோசைக்கு கொத்துமல்லித்தழை சேர்த்து அரைத்து சுட மிகவும்
சுவையாக இருக்கும்.
- ஆர்.ஜெயலெட்சுமி, திருநெல்வேலி.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 17-07-2019

  17-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • DongriBuildingCollapse

  மும்பையில் 100 ஆண்டு பழமையான கட்டிடம் இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழப்பு..மீட்பு பணிகள் தீவிரம்!

 • KyrgyzstanSlapping

  ஒருவரை ஒருவர் கன்னத்தில் பளார் பளாரென அறையும் வித்தியாசமான போட்டி: கிர்கிஸ்தானில் நடைபெற்றது!

 • ChangchunZoologicalPark

  உயிரியல் பூங்காவில் உள்ள மரங்களில் விலங்குகளை தத்ரூபமாக வரையும் கலைஞர்: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

 • 16-07-2019

  16-072019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்