SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

ஆரோக்கியமான விரல் நகங்களுக்கு....

2018-08-14@ 17:00:47

நன்றி குங்குமம் தோழி

பெண்களுக்கு அழகுக்கு அழகு சேர்ப்பவை விரல்கள் மற்றும் நகங்கள். இவைகளை அழகுற பாதுகாத்தால் வசீகரம் கூடும். அதற்கான சில டிப்ஸ்...

*விரல்கள் மற்றும் நகங்கள் சொர சொரப்பு நீங்கி பளபளக்க நல்லெண்ணெயைத் தடவி மசாஜ் செய்யலாம்.

*ஆலிவ் எண்ணெயை லேசாக சூடாக்கி விரல்களின் மீது தேய்த்து ஊறவைத்து பின்பு கழுவி வந்தால் நகங்கள் உடையாமல் இருக்கும்.

*நகம் கருமை நிறமாக மாறி சொத்தையாகி இருந்தால் துத்தி இலையை சாம்பிராணியுடன் சேர்த்து அரைத்து தடவினால் விரைவில் சொத்தை மறையும். கருமை நிறமும் மாறும்.

*உடலில் கால்சியம் சத்து குறைவதால் நகங்கள் பாதிக்கப்படுகின்றன. கால்சியம் மாத்திரைகளையோ அல்லது கால்சியம் சத்து நிறைந்த உணவுகளையோ உட்கொள்ளுதல் நல்ல பலனைத் தரும்.

*நகங்களைச் சுற்றி தடித்தும், வலியும் இருந்தால் வெதுவெதுப்பான தண்ணீரில் டெட்டால், பெப்பர்மின்ட் ஆயில் சேர்த்து அதில் நகங்கள் படும்படி வைத்து பின்பு கழுவினால் வலி நீங்கி நகங்கள் சுத்தமடையும்.

*வெற்றிலையில் சிறிதளவு வெள்ளை சுண்ணாம்பு கலந்து அரைத்து நகத்தில் தடவினால் நகத்தைச் சுற்றி வரும் புண் குணமாகும்.

*வெள்ளை ஜெலட்டின் (கால்சியம் சத்துள்ளது) இரண்டு தேக்கரண்டி எடுத்து நான்கு தேக்கரண்டி இளஞ்சூடான தண்ணீரில் கரைத்து விரல்களின் மீது பூசி ஊறவைத்து கழுவி வர நகங்கள் உடையாது.

- அ.திவ்யா, காஞ்சிபுரம்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-09-2018

    22-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • muharamfest

    நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது

  • nasaevanaktrump

    அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்

  • florence&trumph

    பிளோரென்ஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்

  • greenlandicemelt

    கிரீன்லாந்தில் வெப்பமயமாதலால் உருகும் பனிப்பாறைகள் : கடல் நீர்மட்டம் உயரும் அபாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்