SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சைக்கிளிங் செய்யுங்க... பலன்களை பெறுங்க!

2018-08-02@ 15:22:40

நன்றி குங்குமம் தோழி

* உடல் எடையைக் குறைக்க அல்லது கட்டுக்குள் வைக்க கடினமான உடற்பயிற்சிக்கு பதில் சைக்கிளிங் செய்தாலே போதும். மேலும் பல பயன்களை  சைக்கிளிங்கால் பெற முடியும்.

* சைக்கிளிங் செய்யும்போது தேவையற்ற கொழுப்புகள் கரைவதோடு, உடலுக்குத் தேவையான வலுவும் கிடைக்கிறது. எந்தவித பக்க விளைவுகளும்  இல்லாமல் உடல் எடையைக் குறைக்க சிறந்த வழி சைக்கிளிங்.

* உடற்பயிற்சியின்மை மூட்டு வலிக்கு ஒரு காரணம். மூட்டுவலி இருப்பவர்களால் எளிதாக சைக்கிளிங் செய்ய முடியும். சைக்கிளிங் செய்வதால்  ஆஸ்டியோபொரோசிஸ், ஆர்த்ரைடீஸ் போன்ற மூட்டுப் பிரச்னையிலிருந்து உங்களை காப்பாற்றும். தொடைகள் வலுவாகும்.

* சைக்கிளிங் செய்யும்போது  நுரையீரலின் செயல்பாடுகள் சீராகும். இதய வால்வுகளில் கொழுப்புப் படிவது தடுக்கப்படும். கொலஸ்ட்ரால் குறைவதால்  மாரடைப்பு முதலான இதய நோய்கள், உயர் ரத்த அழுத்தம், பக்கவாதம் போன்றவை தடுக்கப்படும்.

* சைக்கிளிங்கால் கெட்ட கொழுப்புகள் கரையும். உடல் எடை கட்டுக்குள் வரும். சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு குறையும்.

* இயல்பாக சுவாசித்துக்கொண்டே செய்யும் பயிற்சிகள் அனைத்துமே ஏரோபிக் பயிற்சிகள்தான். சைக்கிளிங் ஒரு சிறந்த ஏரோபிக் பயிற்சியே.

- அ.திவ்யா, காஞ்சிபுரம்

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • gggooooverrr

    அமெரிக்காவில் கவர்னர் பதவிக்கான போட்டிக் களத்தில் திருநங்கை - தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் திருநங்கை கவர்னர்

  • affffgaaaaa

    ஆப்கானிஸ்தானில் பள்ளியில் தற்கொலைப்படைத் தாக்குதல் - 48 பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு

  • iiiiiiiiiiitaaalyyy

    இத்தாலியில் நெடுஞ்சாலைப் பாலம் இடிந்து விழுந்து விபத்து - 39 பேர் பலி

  • keeeraaalaaaa

    கேரளாவில் கனமழை - வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 70ஆக உயர்வு 14 மாவட்டங்களிலும் 'ரெட்' அலர்ட்

  • buildingggggg1234

    சுதந்திர தின விழா - நாடு முழுவதும் அரசு கட்டிடங்கள் மூவண்ண நிறங்களில் ஜொலித்தது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்