தியாகச் சுடர்
2018-07-05@ 15:58:30

நன்றி குங்குமம் தோழி
கேரளாவிலுள்ள பெரம்பலா தாலுகா அரசு மருத்துவமனையில் பணிபுரிந்தவர் நர்ஸ் லினி சஜீஸ். நிபா வைரஸ் தீவிரமாக பரவிக் கொண்டிருக்கும் இந்நிலையில் அந்த சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களுக்கு மருத்துவச் சேவையை செய்ய செவிலியர்கள் பயந்த போது ஈடுபாட்டுடன் மருத்துவச் சேவை புரிந்து வந்தவர் செவிலியரான லினி சஜீஸ். அந்த சேவையின் போது அவரும் அதே நிபா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி சில நாட்களுக்கு முன்பு இறந்து விட்டார்.
அதனால் அவர் பெயரில் லீனா ஏஞ்சல் லினி மெமோரியல் அரசு மருத்துவமனை என பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்று அவருடன் பணிபுரிந்த ஊழியர்கள் கேரள அரசிடம் கேட்டு வருகிறார்கள். அந்த ஊர் மக்களும் இந்த கோரிக்கைக்கு உறுதுணையாக நின்றிருக்கிறார்கள். அங்கே வேலை செய்பவர்கள் கூறுகையில், “எங்களுடைய லினி ரொம்ப டெடிகேட்டடான ஊழியர். எப்போதும் நோயாளிகளுக்கு உதவ தயங்கமாட்டார். அவளுடைய இழப்பு இந்த தேசத்துக்கே நஷ்டம். இந்தப் பெயர் மாற்றம் ஒரு ரியல் ஹீரோயினான லினிக்கான சமர்ப்பணமாக இருக்கும்” என்கிறார்கள்.
ஸ்டாப் கவுன்சில் செகரட்டரி அபூபக்கர் கூறுகையில், “லினியை நினைவுகூறும் வகையில் இந்தப் பெயர் மாற்றம் செய்வது மற்ற ஊழியர்களுக்கு ஒரு இன்ஸ்பிரேஷனாக இருக்கும்” என்கிறார். கேரளாவின் ஹெல்த் மினிஸ்டர் கே கே சைலஜா கூறுகையில், “செவிலியர் வேலைக்குரிய பொருளை தன் செய்கையின் மூலம் நாட்டிற்கு உணர்த்தியவர் லினி. அவருக்கு நாடு நன்றிக்கடன் பட்டுள்ளது. மக்களின் இந்தப் பெயர் மாற்றம் குறித்த கோரிக்கை குறித்து அரசு அனைவருடனும் கலந்தா லோசித்து நல்ல முடிவுக்கு வருவோம்” என்று தெரிவித்துள்ளார்.
- ஸ்ரீதேவி மோகன்
Tags:
Flame of sacrificeமேலும் செய்திகள்
வாழ்வென்பது பெருங்கனவு!
எழுத்தாளரின் மனைவி என்பது யானைப் பாகனை போன்றது!
வரலாறு படைத்தார் பி.வி. சிந்து
வனிதா மதில் சபரிமலையின் 19ம் படி
வரப்போறா நெல்லைப் போல… யார் இவ..!!
தோடர் இனத்தின் முதல் பெண் மருத்துவர்
17-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்
16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்
ஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்
பிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு
முழு அளவிலான டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைத்து வரும் சீனா..: புகைப்பட தொகுப்பு