SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

டிப்ஸ்... டிப்ஸ்...

2018-06-19@ 14:40:04

* பருப்பு  உருண்டைக் குழம்பு செய்யும்போது சில நேரம் உருண்டை கரைந்து விடும். இதைத் தவிர்க்க அரைத்த உடன் சிறிது எண்ணெய் விட்டு கடாயில் 5 நிமிடம் வதக்கி சிறிது அரிசிமாவு கலந்து உருட்டி குழம்பு கொதிக்கும் போது ஒவ்வொன்றாக போட்டால் கரையாது.
- ஆர்.அஜிதா, கம்பம்.
* இட்லிப்பொடியுடன் சிறிது வெந்தயத்தையும் வறுத்து, பொடி செய்து சேர்த்தால், மணமாக இருப்பதுடன் வயிற்றுக் கோளாறுகளுக்கும் நல்லது.
- கே.பிரபாவதி, மேலகிருஷ்ணன்புதூர்.
* வெங்காயத்தை வெறும் கடாயில் சிறிது நேரம் வதக்கிவிட்டு, பிறகு எண்ணெயில் வதக்கினால் சீக்கிரம் சிவந்து வதங்கிவிடும்.
- கே.அஞ்சம்மாள், தொண்டி.
* சர்க்கரையில் 5 கிராம்புகள் போட்டு வைத்தால் எறும்பு வராது. நீர்த்தும் போகாது.
- கூ.முத்துலட்சுமி, திருவாடானை.
* எலுமிச்சைப்பழம் நிறைய கிடைக்கும்போது வாங்கி சாறு பிழிந்து, சம அளவு சர்க்கரையும் உப்பும் சேர்த்து கலந்து ஃபிரிட்ஜில் வைத்துக் கொண்டால், சாலட், சூப் போன்றவற்றுக்கு எலுமிச்சைச்சாறு தேவைப்பட்டால் உடனடியாக உபயோகிக்கலாம். 10 நாட்கள் கெடாது.
- கே.ராஜேஸ்வரி, மணப்பாறை.
* குடைமிளகாய், கோவைக்காய், கத்தரிக்காய் போன்றவற்றில் பொரியல் செய்யும் போது மசாலா பொடியுடன் நான்கு டீஸ்பூன் பொட்டுக்கடலை மாவையும் கலந்து செய்தால் அதிக மொறுமொறுப்புடன் சுவையாக இருக்கும்.
- மு.சியாமளாஜாஸ்மின், சித்தையன் கோட்டை.
* பாதி பச்சரிசி, பாதி புழுங்கலரிசி (இட்லி அரிசி) போட்டு புட்டு செய்தால் மிகமிக மென்மையாக இருப்பதோடு கூடுதலான சத்தும் கிடைக்கும்.
- வி.விஜயராணி, பெரம்பூர், சென்னை.
* பக்கோடா செய்ய மாவு கரைக்கும்போது அத்துடன் சிறிதளவு நெய், தயிர், உப்பு கலந்து செய்தால் பக்கோடா மொரமொரப்பாக இருக்கும்.
- ஆர்.அம்மணி, வடுகப்பட்டி.
* சேம்பு, கருணை ஆகிய கிழங்குகளை இட்லித் தட்டில் வேக வைத்தால் குழையாமல் இருக்கும்.
- எம்.ஏ.நிவேதா, அரவக்குறிச்சிப்பட்டி.
* சூப் தயாரிக்கும்போது அதில் இரண்டு ஸ்பூன் பார்லி தண்ணீர் கலந்து பருகினால் உடல்நலத்துக்கு மிகவும் நல்லது.
- எச்.ராஜேஸ்வரி, மாங்காடு.
* அடை செய்யும் போது மற்ற பருப்புகளுடன் கொள்ளுப் பயிறையும் சேர்த்து ஊறவைத்து அரைத்தால், வாயு நீங்கும்... கொழுப்பும் கரையும்.
- அ.பூங்கோதை, செங்கல்பட்டு.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • chennaipolicefunction

  சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற காவலர் நிறைவாழ்வு பயிற்சி விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பங்கேற்பு

 • railwaysecurityforce

  சென்னையில் ரயில்வே பாதுகாப்பு படையின் 33வது ஆண்டு விழாவில் வீரர்கள் அணிவகுப்பு

 • courtchennaispl

  சென்னையில் குற்றவழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் திறப்பு

 • russiapresigun

  ரஷ்ய ராணுவத்தின் புதிய துப்பாக்கி ரகங்களை அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஆய்வு

 • venkhaiahnaidu

  செர்பியா, ரோமானியா நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்ட துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்