SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குர்தாவின் கதை!

2018-06-19@ 14:35:19

சமஸ்கிருதத்தில் ‘குர்தகா’ என்ற சொல்லுக்கு காலர் இல்லாத சட்டை என்று பொருள். நாம் இதற்கு சௌகர்யமான உடை என்று பெயர் வைக்கலாம். இந்திய துணைக் கண்டத்தில் தோன்றிய இந்த பாரம்பரிய  உடை, தனது தனித்தன்மையால் மதம், பாலினம், ஃபேஷன், விருப்பம் என்ற அனைத்து எல்லைகளையும் கடந்து புகழ் பெற்றுள்ளது. குர்தாவுக்கு இதற்கு மேலும் அறிமுகம் தேவையில்லை!

19ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பஞ்சாப் மாநிலத்தில் முதல் வடிவம் பெற்றது குர்தா. தோள்களிலிருந்து தொள தொளவென்று ஆரம்பித்து முட்டிவரை நீண்டு தொங்கும் இந்த சௌகர்யமான உடை ஆரம்பத்தில் மிகவும் சாதாரணமாகவே காட்சி அளித்திருக்கிறது. பின்னர் கற்பனை வளங்கள் கலந்து, கலை வேலைப்பாடுகள் செய்யப்பட்டு ஆண்கள் அணியும் உடையாக பரிணாமம் பெற்றது. காலப்போக்கில், இரு பாலினத்தவர்களும் அணியும் அங்கீகாரத்தை பெற்றது.

1950களில் சாதாரணமாக ரவுண்ட் நெக், போட் நெக் என்று மிகவும் இறுக்கமாக - நடப்பதற்கே சிரமமான முறையில் தைக்கப்பட்ட குர்தாக்கள், 1960களில் மாற்றம் அடைந்து இந்தியாவின் ஃபேஷன் உலகமான பாலிவுட்டின் ஃபேவரைட் உடையாக வலம் வரத் தொடங்கியது. 1970களில் உலகம் முழுவதும் பரவி சர்வதேச உடையானது. எளிய நிறங்களுடன் தங்கள் கலாசார உடைகள் போலவே தளர்வாக இருந்த குர்தாக்களை மத்திய கிழக்கு நாடுகளின் பெண்கள் விரும்பி அணியத் தொடங்கினர்.

ஐரோப்பா, அமெரிக்க போன்ற மேற்கத்திய நாடுகளில் ஹிப்பி கலாசாரம் பரவிய பொழுது, கண்கவர் வண்ணங்களில் வடிவமைக்கப்பட்ட
குர்தாக்களும் பிரபலமடைந்தன. நவீன யுகத்தில் இளம்பெண்களும் இளைஞர்களும் ஜீன்ஸ், சுடிதார் போன்றவற்றுக்கு ஜோடியாக அணியும் வகையில் நீளம், ஃபிட்டிங், டிசைன், ஸ்டைல்களில் மாற்றங்கள் புகுத்தப்பட்டு, சிக் தோற்றத்துடன் முன்னணி பிராண்டுகள் நவீன இந்தியாவின் உடையாக குர்தாக்களை தயாரிக்கின்றன.

அலுவலகம் செல்லும் பெண்கள் அணியக்கூடிய ஷார்ட் குர்த்தீஸ், லாங்க் குர்த்தீஸ் போன்றவை டிரவுசருடன் அணியும் வகையில் எளிமையான டிசைன்களுடனும், கல்லூரி மாணவிகள் லெக்கிங்ஸ் உடன் ஜோடியாக அணிவதற்கு ஏற்ற வகையில் பெல் ஸ்லீவ்ஸ், லேயர்கள் கொண்ட குர்தாக்களும் பார்ட்டி, திருமண விழாக்களில் அணியும் வகையில் எம்ப்ராய்டரி ஒர்க், மிரர் ஒர்க் மற்றும் மணிகள் ஒர்க் என அழகிய வேலைப்பாடுகள் செய்யப்பட்டு, பார்ப்பதற்கு பகட்டான தோற்றத்துடன் எண்ணற்ற வண்ணங்களில் மின்னும் குர்தாக்களும் வலம் வருகின்றன.

பள்ளி மாணவிகள் செளகர்யமாக அணிவதற்குத் தகுந்தவாறு பள்ளிச் சீருடைகளும் குர்தாக்களாக மாற்றம் பெற்றுள்ளன. பருத்தி, ஷிஃபான், சணல், பட்டு மற்றும் காதி என அனைத்து இழைகளிலும் குர்தாக்கள் கிடைக்கின்றன. குர்தாவின் அடுத்த பரிணாமம் என்ன என்று உங்களால் யூகிக்க முடிகிறதா? உங்கள் எண்ணங்களில் ஓடும் ஒன்றை மட்டும் உறுதியாக கூற முடியும். அது இன்றைய பெண்களின் சௌகர்யமான உடையான குர்தாவின் பயணத்துக்கு எல்லை இல்லை என்பதே!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 19-05-2019

  19-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 18-05-2019

  18-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • TaiwanSameSexMarriage

  ஆசியாவில் முதல் முறையாக ஓரினச்சேர்க்கை திருமணத்திற்கு அங்கீகாரம் வழங்கிய தாய்வான்: எல்.ஜி.பி.டி.யினர் உற்சாகம்!

 • frenchpainterclaude

  பிரான்ஸ் ஓவியர் கிளாட் மொனெட்டின் வரைந்த வைக்கோல் ஓவியம் ரூ.778 கோடி ஏலம் : புகைப்படங்கள்

 • 17-05-2019

  17-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்